Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம்- அனான்

Featured Replies

விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான்

சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இருந்தாலும் இதுவரை சமாதானத்திற்கான சமிக்ஞைகள் எதையும் சிரிய அதிபர் வெளிப்படுத்தாத நிலையிலேயே விடிந்தால் சமாதானம் என்று அறிவித்துள்ளார் கொபி அனான். நாளை அதிகாலை சூரியனின் கிரகணங்கள் சிரிய மண்ணில் விழும்போது அங்கு வெடிக்கும் மரண வெடிகள் முற்றாக நின்றிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்றய விவகாரங்கள் படிப்படியாக நடைபெறும். கொபி அனான் விரித்திருக்கும் வலையில் சிரிய அதிபர் விழுந்தால் அவருடைய குடும்ப அரசியல் கழுதைப் புலியிடம் அகப்பட்ட காட்டெருமையின் கதையாகும் என்பதைக் கண்டு ரசிக்க உலகம் தயாராகி வருகிறது.

இதை நன்கு உணர்நதுள்ள ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கருத்துரைக்கும்போது, சிரியா முற்றான படை விலத்தலை செய்யாது என்றும், தனது யுத்த நிறுத்தத்தை ஒரு பகுதி மட்டும் செய்து காட்டும் என்று தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் நாட்டில் இறங்கிய பின்னரே பூரண யுத்த நிறுத்தம் அமலுக்கு வரும் என்று சிரிய வெளிநாட்டு அமைச்சர் வலியட் அல் மவுலம் கூறினார். அதேவேளை சட்ட முரணான ஆயுதக்குழுக்களுக்கு இரகசியமான ஆயுதங்களை வழங்கி நாட்டுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறது துருக்கி என்று சிரியா குற்றம் சுமத்தியுள்ளது.

இது இவ்விதமிருக்க லிபியாவில் போராளிகளுக்கிடையில் நடைபெறும் மோதல்கள் திசைமாறி ஐ.நாவின் பக்கமாக திரும்பியுள்ளது. பெங்காஸி நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நாவின் வாகனத்தின் மீது வீட்டில் செய்யப்பட்ட நாட்டு வெடி வீசப்பட்டது. இந்த அனர்த்தத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை ஆனால் ஐ.நா மீது விழுந்த எரி குண்டு லிபியாவின் அடுத்த அத்தியாயத்திற்கு முகமன் கூறியுள்ளதாக நோக்கர்கள் கூறுகிறார்கள். லிபியாவில் அமைதியை கொண்டுவருவதற்குள்ள பாரிய சிக்கல் பண்பற்ற போராளிக் குழுக்களை பண்படுத்தி மனிதர்களாக மாற்றுவதுதான்.

மறுபுறம் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ள கிரேக்கம் பாராளுமன்ற தேர்தலை நடாத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பாராளுமன்ற அனுமதியைக் கோரும் வாக்கெடுப்பு வரும் மே 6ம் திகதி நடைபெறவுள்ளது. கிரேக்கத்தில் கடுமையான மீதம் பிடித்தல்களை செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் வழங்கிய நிபந்தனைகளை ஏற்று பொதுத்துறையில் வரம்புக்கு மீறிய மீதம் பிடித்தல்களை கிரேக்க அரசு செய்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சினமடைந்துள்ளனர். அதன் காரணமாக ஆட்சியில் முன்னணி வகிக்கும் கொன்ஸ்சவேட்டிவ், நியூ டெமக்கிரட்டி கட்சிகள் பலத்த செல்வாக்கு இழப்புக்களை சந்தித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. இந்த நிலையில் மக்கள் கருத்தை அறிய பொதுத் தேர்தல் வருகிறது. 2009 ல் கிரேக்கத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார சிக்கல்களைத் தொடர்ந்து வரப்போகும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். கிரேக்கத்தின் சிக்கல்களை பொதுத்தேர்தலால் தீர்க்க முடியாது என்பது தெரிந்ததே. புற்றுநோய்க்கு வைத்தியம் செய்ய மந்திரவாதியிடம் போன கதைபோலவே அமைந்துள்ளது.

மறுபுறம் நாளை வடகொரிய ஏவுகணை நாளை பறப்பெடுக்க உள்ளது. இதற்கான எரிபொருளை நிரப்பும் பணிகள் பொருத்தமான வேளையில் செய்யப்படும் என்று வடகொரியா தெரிவிக்கிறது. பெற்றோல் தாங்கியில் லேசர் தாக்குதல்கள் நடந்தால் ராக்கெட்டே வெடித்து சிதற வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. அமெரிக்க சேலஞ்சர் ராக்கட் பெற்றோல் தாங்கயில் ஏற்பட்ட கசிவால் வெடித்து சிதறியது பழைய கதையாகும். அதேவேளை வடகொரியா கிம் இல் சுங்கின் நூற்றாண்டு நினைவாக ஏவும் இந்த ராக்கெட் அணு குண்டை அனுப்பும் திட்டம் என்று தென் கொரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா எத்தனையோ ராக்கட்டுக்களை அனுப்பியுள்ளது, அதில் பல வெடித்து சிதறியுள்ளன. ஆனால் வடகொரியா மிகச் சரியாக ராக்கெட்டுக்களை அனுப்புவது கவனிக்கத்தக்க விடயமாகும்.

http://www.alaikal.com/news/?p=102425

Edited by akootha

  • தொடங்கியவர்

சிரியாவில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறதென அறிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, அரபு லீக் ஆகியவற்றின் சிறப்புத் தூதுவர் கொஃபி அனான் முன்வைத்த திட்டத்தின் கீழான போர் நிறுத்தம், சிரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

போர் நிறுத்தம் பொதுவாக நடைமுறையில் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். டமாஸ்கசிலும், இட்லிப் மாகாணத்திலும் சில இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கவுள்ளதாகவும், ஆனால் தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதில் தாக்குதல் நடத்தப்படுமெனவும் சிரிய அரசும், கிளர்ச்சியாளர்களும் அறிவித்துள்ளார்கள்.

சிரிய அரசின் உறுதிமொழி நம்பகத்தன்மை அற்றதென அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் விமர்சித்துள்ளன.

போர் நிறுத்தம் சரியான முறையில் நடைமுறைக்கு வந்தால், நகரங்களில் இருந்து படையினரையும், கனரக ஆயுதங்களையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக சிரியா வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்டமாக அழுத்தம் பிரயோகிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நடவடிக்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலக்கெடு விதிக்கப்பட்டபோதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11677

2009 இல் எமக்கும் இப்பிடி ஒரு சந்தர்ப்பம் தந்திருக்கலாம்

538876_220093431424352_100002710899929_328389_1918360057_n.jpg

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

மறுபுறம் நாளை வடகொரிய ஏவுகணை நாளை பறப்பெடுக்க உள்ளது. இதற்கான எரிபொருளை நிரப்பும் பணிகள் பொருத்தமான வேளையில் செய்யப்படும் என்று வடகொரியா தெரிவிக்கிறது. பெற்றோல் தாங்கியில் லேசர் தாக்குதல்கள் நடந்தால் ராக்கெட்டே வெடித்து சிதற வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. அமெரிக்க சேலஞ்சர் ராக்கட் பெற்றோல் தாங்கயில் ஏற்பட்ட கசிவால் வெடித்து சிதறியது பழைய கதையாகும். அதேவேளை வடகொரியா கிம் இல் சுங்கின் நூற்றாண்டு நினைவாக ஏவும் இந்த ராக்கெட் அணு குண்டை அனுப்பும் திட்டம் என்று தென் கொரியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா எத்தனையோ ராக்கட்டுக்களை அனுப்பியுள்ளது, அதில் பல வெடித்து சிதறியுள்ளன. ஆனால் வடகொரியா மிகச் சரியாக ராக்கெட்டுக்களை அனுப்புவது கவனிக்கத்தக்க விடயமாகும்.

http://www.alaikal.com/news/?p=102425

North Korea fires long-range rocket

North Korea fired a long-range rocket early Friday, South Korean and U.S. officials said, defying international warnings against moving forward with a launch widely seen as a provocation.

Liftoff took place at 7:39 a.m. from the west coast launch pad in the hamlet of Tongchang-ri, South Korea’s Joint Chiefs of Staff in Seoul said, citing South Korean and U.S. intelligence.

However, the launch may have failed, U.S. officials said in Washington. South Korean officials said they could not confirm that.

Japan’s Defence Minister Naiki Tanaka said, “We have confirmed that a certain flying object has been launched and fell after flying for just over a minute.” He did not say what exactly was launched.

He said there was no impact on Japanese territory from the launch.

http://www.thestar.com/news/world/article/1160689--north-korea-has-fired-long-range-rocket-south-korea

  • தொடங்கியவர்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: சர்வதேச நாடுகள் கண்டனம்.

வட கொரியா நீண்ட தூரம் செல்லும் ராக்கெட்டை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ராக்கெட் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது. இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆராய்ச்சி பணிகளுக்காக ராக்கெட் செலுத்தப்பட்டதாக கொரிய அதிகாரிகள் கூறினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தியில், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வட கொரியா பதட்டத்தை ஏற்படுத்துகிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடும்போது, அந்நாடு, ஆயுதங்களில் செலவிட்டு பணத்தை வீணடிப்பதாக கூறியுள்ளது.

http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-034900057.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.