Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர் கைதாவதை உடன் தடுத்து நிறுத்துங்கள்

Featured Replies

தமிழ் இளைஞர் கைதாவதை உடன் தடுத்து நிறுத்துங்கள்ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசர கடிதம்

"கிழக்கில் இளைஞர், யுவதிகள் வகை தொகையின் றிப் படையினரால் கைது செய்யப்படுகின்றமை உடன் நிறுத்தப்பட வேண்டும். இனி வரும் நாள்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறாத வகையில் நீங்கள் அவசர தலையீட்டை மேற் கொள்ள வேண்டும்." என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்தவுக்கு அவசரமாக கடிதம் எழுதியுள்ளார்.

கிழக்கில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் எதுவித காரணமும் கூறாது தமிழ் இளைஞர்களைக் கைது செய்து முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் இழுத்துச் செல்கின்றனர்.

படையினரின் இந்தத் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக் கையால் திருமலையில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளன. தொழிலுக்குச் செல்லாமல் இளைஞர்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையிலேயே இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதிக்கு இந்த விவகாரம் தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்.

கிழக்கில் இவ்வாறு இளைஞர், யுவதிகள் எதுவித காரணங்களுமின்றிக் கைது செய்யப்படுவது சட்டவிரோ தமான செயல் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன் எம்.பி., இந்த விடயத்தில் ஜனாதிபதி விரைந்து தலையிட்டு உடன் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

குறிப்பாக திருகோண மலையில் கடந்த 10 நாள் களாகக் பெருந்தொகையான இளைஞர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர். அடிப்படைக் காரணங்கள் எதுவுமின்றி கைதுசெய்யப்படுகின்றனர். இது சட்டவிரோதமாகும். படையினர் இந்நடவடிக்கையை உடன் கைவிட வேண்டுமென பாதுகாப்புப் படைகளின் பிரதானி என்ற அடிப்படையில் ஜனாதிபதி தலையிட்டு வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சம்பந்தன் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அத்துடன், நீண்ட காலமாகத் திருமண பந்தத்தில் இணைந்து பிள்ளைகளுடன் வாழ்பவர்கள் கூட புனர்வாழ்வு என்ற போர்வை யில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது எந்த வகையில் நியாயம்? இந்தப் பிரச்சினைக்கு எமக்கு உடன் தீர்வு வேண்டும் எனவும் சம்பந்தன் அக்கடிதத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என அறியமுடிகின்றது.

  • தொடங்கியவர்

திருமலையில் கைதானவர்களில் அண்மையில் தமிழகத்தில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்

இவர்கள் வவுனியா, வெலிக்கந்தை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

சித்திரை 18 ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட வயது திருமணமான வாலிபர் கொல்லப்பட்டார்

இவர் பெயர் ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன். பிரித்தானியாவில் உள்ளார் இவரின் மனைவி

http://tamilnet.com/art.html?catid=13&artid=35136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.