Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமலின் ”ரந்திவ” பத்திரிகை அலுவலகத்திற்கு நுழைந்த கோதாபயவின் பொலிஸார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WimalWeerawansa-100x100.jpg

அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆலோசனையின் பேரில் நடத்தப்படும் ”ரந்திவ” பத்திரிகை அலுவலகத்திற்கு கடந்த 30ஆம் திகதி பிற்பகல் திடீரென புகுந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் பத்திரிகை ஆசிரியரிடமும், செய்தி ஆசிரியரிடமும் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய குறித்த பத்திரிகையில் ”ஹிருனிகா பிரேமச்சந்திரனைக் கொலை செய்ய சூழ்ச்சி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தலைப்புச் செய்தி தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.

இந்தச் செய்தியின் ஆதாரம் என்ன என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர் கேள்விகளை எழுப்பிய போதிலும், இதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை தமக்கில்லையென ஆசிரியர் இருவரும் பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு ஆசிரியர்களையும் கொழும்பு 10இல் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து ஹிருனிகா பிரேமச்சந்திரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோதாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். இதற்கமையவே ”ரந்திவ” பத்திரிகை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போதுவரை கிடைத்துள்ள தகவல்களுக்கமைய அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆலோசனைக்கமையவே குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனை உறுதி செய்வதற்குத் தேவையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பத்திரிகை ஆசிரியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு விசாரணை நடத்தியது ஊடக சுதந்திரத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் செயல் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் எதிர்காலத்திலும் இவ்வாறு நடந்துகொண்டால் அதில் தமது அமைப்பு தலையிடும் எனவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=58602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.