Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மூக்கை நுளைக்கும் எறிக் சொல்கைம்!

Featured Replies

சந்திவிக்கிரகம் என்ற சொல்லாடல் தமிழில் உண்டு. நண்பனாக நெருங்கி ஒட்டி நின்று கெடுத்தல் என்பது சந்திவிக்கிரகத்தின் அர்த்தம். மனதிலே பகை உதட்டிலே நட்பு என்றும் பொருள் கொள்வார்கள். நோர்வே நாட்டின் சமாதானத் தூதர் எறிக் சொல்கைம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு நெருங்கிப் பழகி சமாதானப் பொறிக்குள் வீழ்த்திப் பாரிய பின்னடவை ஏற்படுத்தினார்.

அமெரிக்கா, இந்தியா உட்படச் சர்வதேச நாடுகளின் புலிகளுக்கு எதிரான சதிவலையின் அச்சாணியாக எறிக் சொல்கைம் விளங்கினார். 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சொல்கைமின் உழைப்பால் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு வரை சொல்கைம் தொடர்பில் இருந்தார்.

நோர்வே நாட்டின் இலங்கைப்; பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சி 1997ல் ஆரம்பித்தது. அதே வருடம் அமெரிக்க அரசு விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தியது. அன்று தொடங்கிய நோர்வேயின் சமாதான முயற்சிகள் 2009ம் ஆண்டு தமிழீழ மக்களின் ஜெனோசைற் இனப் படுகொலையுடன் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் நோர்வே நாட்டினதும் தூதர் எறிக் சொல்கைமினதும் நோக்கம் நிறைவேறியது.

ஓஸ்லோத் தலைநகரில் 2011, நவம்பர் 11ம் நாள் வெளியிடப்பட்ட நோர்வேயின் சமாதான முயற்சி தோல்வி அடைந்ததற்கான காரணிகளை ஆராயும் அறிக்கை வெளிவந்தது. அது எறிக் சொல்கைமின் பங்களிப்பு பற்றிச் சொல்லாமல் விட்டுள்ளது. ஆனால் 2012 தொடக்கம் அவர் சமாதானத் தூதராகச் செயற்பட அனுமதிக்கப் படுவதில்லை. அவருடைய பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அறிக்கையின் கருப் பொருள் பின்வருமாறு. சமாதான முன்னெடுப்பு நோர்வே நாட்டின் தவறான கையாள்கையால் இன அழிப்பில் முடிந்தது. இது பற்றி நோர்வே கவலைப்படவில்லை. ஒரு பொருத்தமான நேரத்தில் கையைக் கழுவிக்கொண்டு வெளியேற வில்லையே என்ற கவலைதான் நோர்வே அறிக்கையில் மேலோங்கி நிற்கிறது.

இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு (செப்ரம்பர்.11.2001) அமெரிக்க அதிபர் புஷ் பிரகடனப் படுத்திய தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற கோட்பாட்டை நோர்வே ஆதரித்தது. 1997ல் அதே அரசால் தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி சமாதானம் பேச நோர்வே தொடங்கியது.

நோர்வே தரித்த இரட்டை வேடம் இதன் மூலம் புலப்படுகின்றது. உண்மையில் நோர்வேயும் அதன் தூதரும் தீவிரவாதத்திற்கு எதிரான போரை நடத்தினார்களே ஒழிய சமாதான முன்னெடுப் பாளர்களாகச் செயற்படவில்லை. நோர்வே அரசு 2011ம் ஆண்டு தலைநகர் ஒஸ்லோவில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் தொனி காணப்படுகிறது. ஒரு நேர்மையான நடுநிலையான இடைத் தரகராக இனிமேலும் தொடர விரும்பினால் நோர்வே சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் எழுகின்றது.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தமிழீழ மக்களுக்கும் அவர்களுடைய பாதுகாப்புக் கவசமான விடுதலைப் புலிகளுக்கும் எதிரான சர்வதேசச் சதிவலையின் முக்கிய சூத்திரதாரிகளான றொபேட் பிளேக், எம்.கே நாராயணன், சிவசங்கர் மேனன், பான் கீமூன், விஜே நம்பியார் ஆகியோருக்கு சமமான குற்றவாளியாக எறிக் சொல்கைமும் இடம்பெறுகிறார்.

எறிக் சொல்கைமின் பணி பற்றி இந்திய அரசு மிகவும் திருப்தி அடைந்துள்ளது. 2012 முற்பகுதியில் இவருக்குப் புது டில்லி டெரி (Teri) பல்கலைக் கழகம் ஒரு கவுரவக் கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது. சர்வதேச போர் குற்ற விசாரணைக்குச் சிறிலங்காவை உட்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பவர் எறிக் சொல்கைம். தனது குற்றங்களை மூடி மறைப்பதற்காக இலங்கை தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை போதுமானது என்பது அவருடைய நிலைப்பாடு. அத்தோடு நோர்வே இலங்கை அரசுடன் வருங்காலத்திலும் நெருங்கிச் செயற்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

2012 மே 15 செவ்வாய்க்கிழமை “போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத் தீவு” என்ற கருத்தரங்கு ஒஸ்லோவில் நடைபெற்றது. இதில் எறிக் சொல்கைம் அழைப்பு விருந்தினராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முக்கிய பேச்சாளராகவும் கலந்து உரையாற்றினார்கள்.

இலங்கையைச் சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசு மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை எறிக் சொல்கைம் பாராட்டிப் பேசினார்.

இந்தக் கருத்தரங்கில் எறிக் சொல்கைம் “தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமேதவிரத் தலைமை தாங்க முடியாது” என்றார். இலங்கை நிலவரத்தை அவர் புரியாதவர் போல் ஒரு திசை திருப்பல் நடவடிக்கையை மேற்கொள்வதாகத் தெரிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இலங்கை அரசுடன் பேசி உருமைகளைப் பெற முடியாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தான் அவற்றை வென்றெடுக்க முடியும். ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேசமயப் படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர் தமிழர்களின்றி இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

போருக்கு உதவிய சர்வதேச சமூகத்தை சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழம் காண்பதற்கு அழுத்தம் கொடுக்க புலம்பெயர் தமிழர்களால் மாத்திரம் முடியும். மேற்கூறிய கருத்தரங்கில் தமிழீழம் சாத்தியமில்லை என்று சொல்வதற்கு எறிக் சொல்கைமிற்கு என்ன உரித்து இருக்கிறது. தமிழீழம் ஒன்று தான் தீர்வு என்று உலகத் தமிழர்களும் தமிழீழ மக்களும் என்றோ தீர்மானித்து விட்டார்கள். அதன் அடிப்படையில் தான் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.