Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஒரு ஜனநாயகவாதி என்றால் வடக்கில் தேர்தலை நடத்தவும்! ஜயலத் சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1618161238opp3.jpg

மஹிந்த ஒரு ஜனநாயகவாதி என்றால் வடக்கில் தேர்தலை நடத்தவும்! ஜயலத் சவால்

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல் தொடர்பில் பயம் கிடையாது. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.

ஆனால் ராஜபக்ஷ சர்வாதிகாரத்தை, அரசு பாதுகாக்க தேர்தல்களை பகுதி பகுதியாக வைப்பதும் ஒத்தி வைப்பதுமாக உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் பேசிய ஜயலத் ஜயவர்தன, இந்த அரசு ஜனநாயக கோட்பாடுகளை முழுமையாக மீறியுள்ளது எனவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்த தயாரா என நான் மஹிந்த ராஜபக்ஷ்விடம் சவால் விடுக்கின்றேன்.

நீங்கள் ஜனநாயகவாதியாக இருந்தால் வடக்கு மாகாண மக்களின் ஜனநாயக உரிமையை வழங்குங்கள்.

பயங்கரவாதம் முற்றகாக ஒழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. எனினும் வடக்கு மாகாண சபையில் மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் ஆட்சியில் இல்லை.

இதுவரையிலும் முன்னாள் இராணுவ அதிகாரியாலேயே வடமாகாணம் ஆளப்பட்டு வருகிறது.

இந்த அரசாங்கம் உண்மையிலேயே அர்ப்பணிப்புள்ள கடமையுள்ள அரசாங்கமாக இருப்பின் வடக்கு மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை வழங்குங்கள்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசிற்கு இப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வடக்கிற்கு சுயாதீன பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு பரிந்துரைக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ்வின் அரசிற்கு சவால் விடுகிறேன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று இருப்பின் வடக்கில் சுயாதீன பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்.

இயலும் என்றால், நீங்கள் ஒரு ஹயநாயக வாதி என்றால் நீதி தவறாதவர் என்றால் சுயாதீன பொலிஸ் அதிகாரத்தை வழங்கி வடக்கில் தேர்தலை நடாத்துங்கள் என அவர் சவால் விடுத்தார்.

(அத தெரண)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.