Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம்.(படங்கள்)

Featured Replies

சிங்கள பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்து சிங்களப் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணத்தை மாற்ற உதவுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் கடந்த வருட பல்கலைக் கழக உள்வாங்கலில் கூட விஞ்ஞானபீடத்தில் அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் மாணவர்களின் மொத்த தொகையை விட அதிகம் என்றும் இதற்கு விஞ்ஞான பீட மூத்த பேராசிரியர் ஒருவரே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்

ஆக்கிரமிப்பின் அடுத்த நகர்வு யாழ் பல்கலையிலும் “பொசன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொசன் விழா கொண்டாடப்படவுள்ளது. யாழ் பல்கழலக்கழக வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறானதொரு வைபவம் இடம்பெறுவதுடன் தமிழ் மக்கள் இந்துக்கள் வந்தேறு குடிகள் என்றும் விவாதங்கள் பொய்ப்பரப்புரைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ள வேளையில், இவ் வைகாசி விசாகம் என்று இந்து தமிழ் மக்களால் பெண் தெய்வமான அம்மனுக்கு விழா எடுக்கும் இவ் நாளில் அதை மறைத்து மிகப் பெரும் விளம்பரங்களுடன் இது ஒரு சிங்கள பௌத்த பெருவிழா என்று பரப்புரைசெய்யும் நோக்குடன் இவ் பொசன் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இம்முறை கொண்டாடப்படுகின்றது.

1.jpgதென்னிலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் சிங்கள் பௌத்த பல்கலைக்கழகமாகவே பார்க்கப்படும் நிலையில் யாழ் பல்கலைக்கத்தை தமிழ் பல்கலைக்கழகமாக வைத்திருக்க முனையுங்கள் என முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் பேரறிஞ்ஞர் பேராசிரியர் சிவத்தம்பி கூட ஒரு சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிலர் தமது பட்டம் பதவிகளுக்காக இவ்வாறு சிங்கள பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்து சிங்களப் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணத்தை மாற்ற உதவுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் கடந்த வருட பல்கலைக் கழக உள்வாங்கலில் கூட விஞ்ஞானபீடத்தில் அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் மாணவர்களின் மொத்த தொகையைவிட அதிகம் என்றும் இதற்கு விஞ்ஞான பீட மூத்த பேராசிரியர் ஒருவரே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இம்முறை கூட பெசன் விழாவுக்கு (பெயர்மாற்றப்பட்ட வைகாசி விசாக விழாவுக்கு) அனுசரணை வழங்க மாணவர் ஒன்றியம், மாணவர்கள் மறுத்தபோது விஞ்ஞான பீட பேராசிரியர் ஒருவர் மாணவர்களை அச்சுறுத்தி ஒவ்வொருவரும் இவ் விழாவுக்கு நூற்றி ஐம்பது ரூபா பணம் பங்களிப்பு செய்யவேண்டும் என வற்புறுத்தியதாக தெரிவித்துள்ள விஞ்ஞானபீட முதல் கல்வியாண்டு மாணவர்கள் பின்னர் மாணவர் ஒன்றியம் தலையிட்டு

அதை தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2.jpgசில பேராசிரியர்கள் தமது எதிர்கால பதவி ஆசைகளை மனதில் கொண்டு இவ்வாறு நடந்து கொள்வதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் சில உள்ளுர் அமைச்சர்களின் அனுசரணையை பெற்று மகிந்தவுக்கு அறிமுகமாகி வரும் காலத்தில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தராகும் கனவே அவர்கள் இவ்வாறு நடக்க காரணம் எனத் மேலும் தெரிவித்துள்ளார்.

போரில் மரணித்தவர்களை நினைவுகூர ஏனைய தமிழ் விழாக்களை கொண்டாட பல தடைகள் முட்டுக்கட்டைகள் இடும் இவ் பேராசிரியர்கள் சிங்கள மாணவர்கள் கேட்டவுடன் முண்டியடித்து உதவுவது தமிழ் கல்விச் சமூகத்துக்கே இழுக்கு எனத் தெரிவிக்கும் கல்வியாளர்கள் பதவியாசையுடன் கூடிய கல்விச் சமூகம் ஒரு பெரும் ஆபத்துக்கு வழிகோலும் பாதையாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பல்கலைக கழக நிர்வாகம் கருத்து வெளியிடுகையில் இது ஒரு நல்லிணக்க செயற்பாடு என்றும் அதனாலேயே தாம் இதை அனுமதித்து அனுசரிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் விவாதமாக வைகாசி விசாகத்தினை நாமும் கொண்டா அனுமதித்து அதை சிங்களவர்களும் பெசனாக அன்றி வைகாசி விசாகமாக கொண்டாட அனுமதி கோரினால் அதற்கு அனுமதிப்பார்களா அனுசரணை தருவார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இன நல்லிணக்கம் என்னும் பேரில் விலைபோகும் கல்வியாளர்கள் இருக்கும்வரைக்கும் தமிழ் மக்களின் உரிமைப்பறிப்பும் அடிமைத்தனமும் அதிகரிக்கும்.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.