Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வர்த்தகரைக் கடத்தியதன் பின்னணியில் யாழ்க்கட்டளைத் தளபதி!

Featured Replies

கொழும்பு வர்த்தகர் ஒருவரைக் கடத்தி, காணாமல் போகச் செய்த சம்பவத்தின் சூத்திரதாரி யாழ்க் கட்டளைத் தளபதி மகிந்த அத்துருசிங்கவென பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு, பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக்சிட்டி சந்தைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் 3-26 மற்றும் 3-27 ஆகிய இலக்கங்களில் ‘பெனமா ட்ரேடஸ்” என்ற வர்த்தக நிலையம் அமைந்துள்ளது. இந்த வர்த்தக நிலையத்தில் மின்னியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரான 42 வயதான ராமசாமி பிரபாகரன் என்ற நபரே கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன ஆகியோருக்கெதிராக இந்த வர்த்தகர், ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஸ் சில்வா ஊடாக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு 2012 பெப்ரவரி 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் பெப்ரவரி 11ஆம் திகதி வெள்ளைவேனில் இந்த வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை வைத்து பெப்ரவரி 11ஆம் திகதி பிற்பகல் 3.30 அளவில் இந்த வர்த்தகர் கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வெள்ளை வேன் கும்பலினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகரைக் கடத்தி கொலைசெய்துவிடுமாறு யாழ் கட்டளைத் தளபதி மகிந்த அத்துருசிங்கவே அழுத்தம் கொடுத்துள்ளதாக எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு விசுவாசமான வர்த்தகராக கருதப்படும் ”மெஜஸ்ரிக்சிட்டி பிரபா” மகிந்த அத்துருசிங்கவுடன் நெருக்கமான கொடுக்கல் வாங்கல்களைச் செய்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு சாட்சிகளுடன் தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், அரசப் புலனாய்வுப் பிரிவினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து 2009ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி ”மெஜஸ்ரிக்சிட்டி பிரபாவை” கைதுசெய்திருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பபட்ட விசாரணைகளின்போது தான் உயர் இராணுவ அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதாக அந்த வர்த்தகர் வாக்குமூலமளித்துள்ளார்.

அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த மகிந்த அத்துருசிங்கவுடன் மேற்கொண்ட ஏராளமான கொடுக்கல், வாங்கல் குறித்து பிரபா தகவல் வெளியிட்டுள்ளார்.

மகிந்த அத்துருசிங்கவின் வீட்டுச் செலவுக்காக மாதாந்தம் லட்சக் கணக்கில் தான் பணம் செலவிட்டதாகவும், அவரது படையணி வாகனத்திற்காக மாதாந்தம் 60,000 ரூபா வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக பிரிகேடியர் தரத்திலுள்ள இராணுவ அதிகாரியின் படையணி வாகனத்திற்காக மாதாந்தம் 40,000 ரூபா வழங்கப்படுகிறது. எனினும், மகிந்த அத்துரசிங்க, மெஜஸ்ரிக்சிட்டி பிரபாவிடம் மேலும் 60,000 ரூபாவைப் பெற்று மாதாந்தம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

மெஜஸ்ரிக்சிட்டி பிரபா இந்த தகவல்களை வெளியிடும் சந்தர்ப்பத்தில் மகிந்த அத்துருசிங்க பிலிப்பைன்ஸ் நாட்டின் ‘NDC’ என்ற நிறுவனத்தில் இராணுவப் பயிற்சியொன்றுக்காக பிலிப்பைன்ஸ் சென்றிருந்த நிலையில், அவரை உடனடியாக மீள் அழைக்குமாறு அந்நாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, மகிந்த அத்துருசிங்க உடனடியாக இலங்கை திரும்பிய நிலையில், அவர் இராணுவ தலைமையகத்திற்குச் செல்வதற்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவைச் சந்தித்து, தன்னைக் காப்பற்றுமாறு கோரியிருந்தார். இதனடிப்படையில், அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் உத்தரவுகளைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் மகிந்த அத்துருசிங்கவை பாதுகாப்புச் செயலாளர் பிலிப்பைன்ஸிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவும், மகிந்த அத்துருசிங்கவும் கஜபா படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான உறவுகள் அந்நாள் முதலே இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட மெஜிஸ்ரிக்சிட்டி பிரபா 28 மாதங்கள் தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தார். எனினும், அவர் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார். பலவந்தமாக தடுத்துவைக்கப்படுவதால் மனித உரிமை மீறப்படுவதாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்தபோதே உயர் நீதிமன்றம் இவரை விடுவித்தது.

மெஜஸ்ரிக்சிட்டி பிரபா சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது தன்னுடனான தொடர்புகளைப் பகிரங்கப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தில் அவரைக் கடத்தி, கொலை செய்துவிடுமாறு தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயரிய ஓய்வுபெற்றபின்னர் இராணுவத் தளபதி பதவியை எதிர்பார்த்துள்ள யாழ் கட்டளைத் தளபதி மகிந்த அத்துருசிங்க அழுத்தம் கொடுத்துவந்ததாக பாதுகாப்பு அமைச்சின் அந்த உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.