Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட வீடியோக்களும் போலியானவையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Banthula-100x100.jpg

பிரித்தானியாவில் அண்மையில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான புதிய வீடியோக்காட்சிகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று என ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் வெளிவருகின்ற இன்டிபென்டன்ட் என்னும் பத்திரிகையானது இலங்கையில் இவ்வாறான யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்ததானியாவிற்கு சென்றிருந்த சமயம் இவை பிரச்சார நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை.

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும், இராணுவத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான வீடியோக்காட்சிகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதாகவும்குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக காட்டுவதற்கே இவை புலி ஆதரவாளர்களினால் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான போலியான வீடியோக் காட்சிகளை தயாரித்து பிரச்சாரம் செய்வதிலும் வெளியிடுவதிலும் புலி ஆதரவாளர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே சனல் 4வினால் வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோக்காட்சிகளையும் இலங்கை அரசாங்கம் போலியானது என்றே கூறிவந்தது. அவையும் இலங்கை இராணுவத்தினரையும் அரசாங்கத்தையும் களங்கப்படுத்துவதற்காகவே இவை தயாரிக்கப்பட்டன என தொடர்ந்து கூறி வந்தன.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்ட இந்த போர்க் குற்றங்கள் அடங்கிய வீடியோக் காட்சிகளுக்கும் ஒரே பல்லவியினையே அரசாங்கம் பாடிவருகின்றனர்.

இது மட்டுமல்ல சனல் 4வினால் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காட்சிகளைப் பார்க்காமலே சரத்பொன்சேகா இவை விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலே. ஏனெனில் இராணுவத்தினர் பலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சர்வதேசமும் இலங்கை பக்கம் பார்வையினைச் செலுத்தும் போது விசாரணைகள் எதுவும் இல்லாது அரசு தொடர்ந்தும் இவை போலியானவை என்று கூறி வருவதில் எதுவித நியாயப்பாடும் இல்லை என்றே கூற வேண்டும்.

http://www.saritham.com/?p=61718

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.