Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஷ டேவிட் கமரூன் சந்திப்பு விவகாரம் - மறுப்பு தெரிவிக்கும் பிரித்தானிய பிரதமர் செயலகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahintha-hamaroon150news.jpg

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திதிருந்தார் எனவும் இச் சந்திப்பு மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றதாகவும் சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களை பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், மஹிந்தவிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளதாக சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. கமரூனும், மஹிந்த ராஜபக்சவும் மகிழ்ச்சியாக உரையாடியதாகவும், இதன்போது மஹிந்த, பிரித்தானியப் பிரதமருக்கு தமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் 'டெய்லி மிரர்' நாளேட்டில், மஹிந்தவின் சர்வதேச ஊடக பேச்சாளர் பந்தல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு கசெற் ஊடகத்துக்கு பந்துல ஜெயசேகர வழங்கிய செவ்வியில், கமரூனும் ராஜபக்சவும் தனித்தனியாக சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் உடனடியாக ஜனாதிபதி செயலகத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏன் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அவர்கள் தனித் தனியாக சந்தித்தனர் என்பதை பெரும்பாலான மக்கள் நட்புரீதியானது என்றே கருதுவார்கள். ஆனால், இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக முறைப்படியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரச்சினையை பிரித்தானிய பிரதமர் எழுப்பினார் என்று, பிரிதானியப் பிரதமர் செயலகப் பேச்சாளர் கிராக் ஒலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பந்துல ஜெயசேகரவுடன் சனல் 4 தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தொடர்புக்கு வருவதனை தவிர்த்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.