Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே செல்கின்றது கூட்டமைப்பின் பாதை....? தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

உலகில் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பல இனங்களை வரலாற்றில் நாம் பார்த்திருக்கின்றோம், இன்றும் நினைவில் வைத்திருக்கின்றோம். இவற்றில் பல தமது இருப்புக்கான அல்லது சுயத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்று உலகத்தின் முகத்தில் ஆச்சரியக் குறியை நிறுத்திய சம்பவங்களையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்திருக்கின்றோம்.

இதிலிருந்து நாம் ஒரு உண்மையினை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது ஆயுதங்களை மட்டுமே நம்பிய அல்லது விசுவாசித்த எந்தவொரு போராட்டமும் நிலைபெறவில்லை. அவை ஈற்றில் அழிந்துபோனது. அல்லது அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது. இதனையே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைமையும் நன்கு புரிந்து கொண்டு, விடுதலைப் போராட்டம் உலகத்தின் கவனத்தை திசை திருப்பியிருந்தபோது, பேச்சுவார்த்தை என அழைத்து ஏற்றுக்கொள்ள முடியாததும், எமது இனத்தை படுகுழியில் தள்ளும் தீர்வுத் திட்டங்களை முன்வைத்து, எம்மையரு பயங்கரவாத சக்திகளாக உலகத்த்திற்கு சிறீலங்கா அரசாங்கம் அடையாளப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில், எமது அரசியலுரிமைகளை வென்றெடுக்க, எமது பக்க நியாயப்பாடுகளை சர்வதேசத்திற்குச் சொல்ல உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

ஆனால் அந்த நிலைப்பாட்டை, அது உருவாக்கப்பட்ட கருப்பொருளை உணராமல் விடுதலைப் போராட்டத்திற்கு உதவாமல், விடுதலைப் போராட்டத்தினை சர்வதேசத்திற்குக் காட்டிக்கொடுத்த கூட்டமைப்பின் மிதவாதிகள் இன்றும் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுக்கவும், கொச்சைப்படுத்தவும் தயங்காத நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு மௌனித்த பின்னர், கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழினத்திற்கும் குரூரமான காட்டிக்கொடுப்புக்களையும், துரோகத்தனங்களை செய்தவர்களையும் இணைத்துக் கொண்டது.

உண்மையான கொள்கையின் வழி நின்றவர்களையும், விடுதலையை நேசித்தவர்களையும் வெளியேற்றிவிட்டு இன்று வெறுமையாக நிற்கும் கூட்டமைப்பு, தமது அரசியலுக்காக உதட்டளவில் விடுதலைக்காக போராடியவர்களை பேசிக்கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றது. இந்த யதார்த்தையே அண்மையில் நடந்து முடிந்திருக்கும் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு உணர்த்தி நிற்கின்றது.

அதாவது தமிழர்களின் 60 வருட கால விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாகவே தமிழ்தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்ற தமிழர்களின் எண்ணங்களில் தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் தலைமை சுடுதண்ணீர் ஊற்றியிருப்பதாகவே கூறவேண்டியிருக்கின்றது. இன்றைக்கு சர்வதேச மட்டத்தில் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் கடந்த 60 வருடங்களாக ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட வராலறு உலகம் முழுவதும் தெரிவதற்குக் காரமாணவர்கள் இன்று இந்த மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பலர் எங்கெங்கோ இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் துரோகத்தனத்தை தவிரவேறு எதையுமே செய்திராத சிலர் விடுதலைப் போராட்டம் பற்றிப்பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப் பேசியவர்கள் ஒரு கட்டத்தில் விடுதலைப் போராட்டம் அர்த்தமற்ற போராட்டம் என்ற வார்ததையினையும் உபயோகித்திருக்கின்றனர். நிச்சயமாக விடுதலைப் போராட்டம் அர்த்தமற்ற போராட்டமல்ல. விடுதலைப் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பின் மிதவாத சக்திகள் அதனை அர்த்தமற்ற போராட்டமாக மாற்ற

முனைந்திருக்கின்றன.

இது ஒருபுறமிருக்கட்டும். இன்றுள்ள சமகால அரசியல் நிலைமைகளில் கூட்டமைப்பு தனது சரியான நிலைப்புள்ளியை நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்திருக்கின்றதாக என்றால் நிச்சயமாக கிடையாது. கூட்டமைப்பு பல கட்சிகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது விடுதலைப் போராட்டம் உயிர்ப்புடன் இருந்த காலப்பகுதியில் என்னவோ சாத்தியமானதாகவே இருந்தது.

ஆனால் இன்றுள்ள நெருக்கடியான நிலைமையில், ஆக்கிரமிப்புக்களும், கலாச்சாரம், மொழி, பண்பாடு, சமயம் போன்ற அடையாளச் சிதைப்புகள் கணிசமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச சக்திகள் தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை உணரத்தலைப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில், கொள்கை ரீதியான ஒன்றிணைவுடன் நிலையான பேசும் சக்தியன்று அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இது கூட்டமைப்பாக இருப்பதே மக்களின் மனோநிலைகளில் இருந்து பார்க்கும்போது சிறப்பானதாக இருக்கும். ஆனால் இன்று கூட்டமைப்பு உள்ள நிலையில் இது சாத்தியமற்ற தொன்று. காரணம் கூட்டமைப்பிற்குள் கொள்கை ரீதியாக உடன்பாடுடைய கட்சிகள் கிடையாது. வெறுமனே ஆசனங்களுக்கான அலைந்து திரிந்து தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சிகள் இப்போது கூட்டமைப்பிற்குள் இணைவது ஒன்றே ஆசனங்களைப் பெறுவதற்கான வழி என்பதை புரிந்து கொண்டு கூட்டமைப்பிற்குள் அழையா விருந்தாளிகளாகவே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு கொள்கை ரீதியாக தொடர்ந்தும் பயணிப்பதென்பது சாத்திமற்றதொன்று. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தியாவின் தலைநகர் டில்லியில் சர்வகட்சியினர் கூடியிருந்த அவவையில் ஆனந்தசங்கரி சுயநிர்ணய உரிமையை நீக்குங்கள் என கேட்டு, இறுதியில் தமிழ் கட்சிகளினால் ஒரு தீர்வுத் திட்டத்தையும் வழங்க முடியாது போனது. இந்த நிலைதான் எதிர்காலத்திலும் இடம்பெறப்போகின்றது. இது ஒருபுறமென்றால், மற்றொருபுறம் தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பென்றால், தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியென்றால் கூட்டமைப்பு என்ற நிலையினை உருவாக்க நினைக்கின்றார்கள்.

இதற்காக தமிழரசுக் கட்சியும் அது சார்ந்தவர்களும், கூட்டமைப்பு உருவாக்கப்படும் போதே இருந்த ஏனையவர்களை துரோகிகளாகவும், தமிழினத்திற்கு எதிரானவர்களாகவும் காண்பிக்கவும், சுயவிளம்பரத்தை செய்யவும் முனைந்திருக்கின்றது. இதற்காகவேதான் விடுதலைப் போராட்டத்தையும், அதற்காக தியாகம் செய்தவர்களையும் கொச்சைப் படுத்தி இன்று சர்வதேச மட்டத்தில் எழுந்திருக்கும் தமிழர் தரப்பு சாதக நிலைமையினை தமிழரசுக் கட்சியே ஏற்படுத்தியது என வாய்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கூட்டமைப்பை கொள்கை ரீதியான கட்சிகளின் ஒன்றிணைப்பாக மாற்றியமைத்து அதனை ஒரு கட்சியாகவும் கூட்டுத்தலைமையின் கீழ் உருவாக்கவேண்டியது காலத்தின் கடமையாக மாறியிருக்கின்றது. இதன் மூலம் கடந்த 60 வருடகால விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாக, அங்கிருந்து எடுத்துக் கொண்ட கொள்கை வகுப்புக்களின் கீழ் கூட்டமைப்பு பயணிக்கும்போதே எமது விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும். இதை விடவும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் இந்த நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்திருக்க வேண்டும்.

எனவே இந்த வரலாற்றுக் கடமையினை செய்து கொடுக்கவேண்டிய கடப்பாடும், பொறுப்பும் புலம்

பெயர், மற்றும் தாயகத் தமிழர்களின் கைகளில் நிறைந்து கிடக்கின்றது. இதனை நிச்சயம் செய்யவேண்டும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.