Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஒபாமாவின் சுகாதார நலன் காப்புறுதி பற்றிய தீர்ப்பு

Featured Replies

[size=5]இன்று ஒபாமாவின் சுகாதார நலன் காப்புறுதி பற்றிய தீர்ப்பு[/size]

[size=4]அமெரிக்க சனாதிபதியான ஒபாமாவின் இந்த நான்கு வருட ஆட்சியின் மிகமுக்கிய உள்நாட்டு கொள்கை மாற்றமான 'சுகாதார நலன் காப்புறுதி' பற்றி உச்ச நீதிமன்றம் சார்ப்பாக தீர்ப்பு வழங்கியது. இது ஒபாமாவின் மீள் தெரிவுக்கு மிகவும் கை கொடுக்கும் என கூறப்படுகின்றது.[/size]

[size=4]'சுகாதார நலன் காப்புறுதி' : மாசி மாதம் ஆம் ஆண்டு இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தது. இதன்படி சுகாதார காப்புறுதி என்பதை எந்த அமெரிக்க குடிமகனும் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத விடத்து அவர் மீது தண்டனை விதிக்கப்படும்.[/size]

[size=4]உலகின் மிகவும் செல்வந்த நாடான அமெரிக்காவில் இந்த சட்ட திருத்தத்திற்கு முன்னராக கிட்டத்தட்ட 30 மில்லியன்கள் மக்கள் வரை எந்த சுகாதார நலன் காப்புறுதியும் இல்லாமல் இருந்தனர். இந்த சட்ட மூலம் சட்டரீதியானதல்ல என்பதே இந்த வழக்கின் மூலக்கருத்தாக இருந்தது.[/size]

[size=4]ஒபாமாவை எதிர்த்து போட்டியிடும் குடியரசுக்கட்சின் மிட் றொம்னி தான் பதவிக்கு வந்தால் இதை இல்லாமல் செய்துவிடுவேன் என கூறுகின்றார்.[/size]

[size=5]U.S. Supreme Court upholds key pillar of Obama's health-care reform[/size]

[size=5]The U.S. Supreme Court on Thursday upheld the heart of President Barack Obama’s health care overhaul, handing him a huge election-year political victory and keeping in force the legislative centerpiece of his term, a law aimed at covering more than 30 million uninsured Americans.[/size]

[size=5]http://www.theglobeandmail.com/news/world/us-supreme-court-upholds-key-pillar-of-obamas-health-care-reform/article4376140/[/size]

மசாசுசெட்டில் மானில "Obama Care"ஐ கையெழுத்திட்டு சட்டமாக்கிய, குடியரசுக்கட்சி ரோமினி, மத்திய அரசில் ஒபாமாவால் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட்ட "Romneycare" யை, தேர்தலில் எதிர்க்க திராணி இல்லாததால், குடியரசு கட்சி அதி உயர் நீதிபதிகள் அடங்கிய கோடு அதை தள்ளுபடி செய்யும் என்று எதிர் பார்த்திருந்தார். அவிட்டக்கரன் தவிட்டு பானைக்குள் கைவிட்டது போல எங்கு தான் கைவிட்டாலும் வெற்றி என்ற பொற்கட்டிகளை எடுத்து காட்டுகிற ஒபாமா இன்னொருநாள் வெள்ளை மாளிகையில், இன்னொரு வெற்றி என்கையில் என்று கதையை முடித்திருக்கிறார். மாகா திறமை சாலி(அமெரிக்காவின் நீலன் திருச்செல்வம்) என்று குடியரசாரால் சர்வ மங்களங்களும் பாடி கொண்டு வந்து அரியணை ஏற்றி வைக்கபட்டவர், குடியரசுக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம், பிரதம நீதி அரசர் ரோபேட், ஜனநாயக்கட்சி காங்கிரசால் தண்டப் பணமாக கூறி நிறை வேற்றிய சட்டத்தை, வரிப்பணமாக வியாக்கியானம் செய்து, காங்கிரஸ் நிறைவேற்றும் சட்டங்களை தள்ளிவிடமுன் அவற்றை வேறு எந்த வழியிலாவது அரசியல் அமைப்புக்கு அமைவானதாக காட்ட முடியுமா என்பதை எல்ல நீதியரசர்களும் தேடிப்பார்த்து முடியாதவிடத்து மட்டுமே தான் தள்ளிவைக்க வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். தண்டப்பண சரத்தை எதிர்த்து பல ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள், முதன்மை நீதி மன்றம் இந்த சட்டத்தை தள்ளிவைத்தால் பிள்ளையாருக்கு கற்பூரம் கொளுத்தி தேங்காய் அடிப்பதாக தான் நேர்த்திக்கடன் பண்ணியிருந்தார்கள். ஆனால் இன்று 90 பாகைக்குமேல் வெப்பநிலை எகிறிருந்ததால் பிரதம நீதியரசர் ரோபேட் எல்லோருடைய கனவிலும் தாரை வார்த்து பிள்ளையாரையும் கற்பூரவெக்கை உபத்திரவத்திலிருந்து காப்பாற்றிவிட்டார். வேலைத்தளத்தில் வெள்ளைக்கர குடியரசு கட்சி ஆதரவாளர்கள் வழக்கை பற்றி தம்முள் கதைக்கும் போது நாம் அருகில் சென்றால் தாமாக பிரிந்து சென்றார்கள்.

நீதி அரசர் ரொபேட் இந்த ஒருமாதத்தில் இரண்டாம் முறை குடியரசுக்கட்சிக்கு எதிராக தீர்பை வழங்கியிருக்கிறார். அரிசோனா மானிலத்தின் (குடியரசுக்கட்சி) அரசாங்கம் மத்திய(ஜனநாயக கட்சி) அரசின் குடிவரவு சட்டங்களுக்குள் தலையிடுவதாக சில நாட்களுக்கு முன் அப்பீல் வழக்கில் கூறியிருந்தார்.

இன்றைய பிரத நீதிரியரசரின் நடப்பு, அமெரிக்க அறிவாளிகள் பொறுப்பெடுத்து பொதுமக்களுக்கு பல அடிகள் முன்னின்று பாதைகாட்டி பயணிப்பதை தெளிவாக காணலாம். கொள்கை விடயத்தில், மக்களுக்கு பின்னலே ஒழிந்து நின்று லஞ்சமடிக்கும் நமது மானம் கெட்ட இலங்கை, இந்திய அரசியல் வாதிகளை காணும் எமக்கு உயர்ந்த பதவியிருந்த ஒருதலைவன், தன்னை உருவாக்கியவர்களின் நலத்தை கவனிக்க மறுத்து காங்கிரசின் சட்டமியற்றும் அதிகாரத்துடன் முதன்மை நீதிமன்றம் விளையாட எவ்வித உருத்தும் இல்லை என்று காட்டியிருக்கிறார். சந்திரிக்கா சரத் சில்வாவையும் மகிந்தா சிரானி பண்டாரநாயக்கவையும் பதவில் போட்டுவைத்து பகடை ஆட்டிக்காட்டுவதை நாம் இங்கு நினைவு படுத்த வேண்டும். இதையேதான், இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்களை கொன்று ஈட்டிய சுதந்திரத்தை வைத்து அமெரிக்க தலைவர்கள், உலகத்தின் முதல் சமயம் சாரா அரசியல் அமைப்பை துணிச்சலாக 200 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றியவர்கள். அதே போல் லிங்கன் 1/10 வெள்ளை அமெரிக்கரை கொன்று கறுப்பருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தவர். நீதியரசர் ரோபேட்(மூதாதையருக்கு பிதிர்கருமம் செய்து கனம் பண்ணுவதை கேள்விப்பட்டிருக்கவிட்டாலும்) அவர்கள் நடந்த பாதையில் நடந்து இன்று அவர்களை கனம் பண்ணியிருக்கிறார்.

மற்றைய முன்னேற்றமடந்த நாடுகளை போலவே, "State Care" ஆக காங்கிரசுக்கு கொண்டுவரப்பட்ட சுகநல காப்புறுதி சட்டம் ஜனநாயக கட்சியிலிருந்த செனேடர் லிபர்மான் அந்த மசோதாவுக்கு தான் வாக்களித்தால் தன்னால் திரும்ப தேர்தலில் நிற்கமுடியாது என்று தொப்பி பிரட்டியதால், 59 செனேட்டர்களும், 270 கிட்ட இருந்த காங்கிரசாரும் ஒத்து போன மசோதா தனி ஒரு மனிதனால் "Obama Care" ஆக மாற்றப்பட்டது. காப்புறுதி வைத்திருக்காத ஏழைகள் தண்டப்பணம் இறுக்கவேண்டுமென்ற சரத்திருப்பதால், சட்டம், 2010 ஆண்டுதேரதலில் பயங்கர ஜனநாயகட்சி எதிர்ப்பு புயலாக வீசி ஓபாமாவின் பல உதவிகளை அடித்து சென்றுவிட்டது. முன்னின்று நடத்தி முடித்த காங்கிரஸ் ஸ்பீக்கர் நான்சி ஓய்ந்து போய்விட்டார். அமெரிக்காவையே தனது தேர்தலுக்காக கெடுத்து வைத்த லிபர்மான், தான் விட்ட தவறால் தேர்தலில் நில்லாது அமைதியாக அரசியலில் நின்று விலகினார்.

வழக்கு கொண்டு வரப்பட்டது குடியரசுக்கட்சி மாநிலங்களால். வழக்கின் அடிப்படை மாநிலங்களை இந்த சட்டத்தால் மத்திய அரசு தான் விரும்பும் சுகநல காப்புறுதிகளை அவர்கள் மீது திணிக்க முயல்கிறதென்பதே. அவர்கள் அடிப்பையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதாவது மாநிலங்களை மத்திய அரசு, தண்டணையாக, அவர்களின் கொடுப்பனவுகளை மறுத்து தான் விரும்பிய படி காப்புறுதிகள் வாங்க வற்புறுத்த முடியாது என்று தீர்க்கப்பட்டிருக்கிறது. வழக்கின் வெற்றி அவர்களுக்கு அரசியல் தோல்வியுடன்தான் வந்திருக்கிறது. அவர்கள் கேட்டபடி சட்டம் தள்ளுபடியாகவில்லை. சட்டத்தை தள்ளுபடியாக்கினால்த்தான் ஒபாமாவை பதவி இறக்கலாம். அது நடைபெறவில்லை. இனி அவர்கள் மத்திய அரசை விலத்தி காப்புறுதியில் செயல்பட்டால் மாநிலத்தின் காப்புறுதி சீர்கெடும். அப்போது மத்திய அரசுக்கு அவர்களை தண்டிக்க முடியாவிட்டாலும், அவர்கள் தேர்தலில் தண்டிக்கபட்டுவிடுவார்கள்.

இந்த வழக்கு வெற்றி ஒபாமாவுக்கு தேர்தலுக்கு உதவும் மாதிரி தெரியவில்லை. வெறுமனே ஒரு "Image Boosting" சம்பவமாகத்தான் இருந்துவிடும் சாத்தியம் காணப்படுகிறது."Obama Care" என்பது வரும் கார்த்திகை தேர்தலில் ஒபாமாவுக்கு பாரிய கால் விலங்கு. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை. கிளின்ரனான கிளின்ரனே சுகநல காப்புறுதியில் கையை வைத்துவிட்டு "தொட்டால் தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று" பாடிக்கொண்டு ஒதுங்கியவர். ஒபாமா பயப்படாமல் இந்த "பஞ்சி யம்" எடுத்தவர். பொருளாதாரமும், சுகநல காப்புறுதி சட்டமும் ஒபாமாவின் தேர்தல் வண்டியில் ஏற்கனவே ஏறிக்கொண்டுவிட்ட சுமைகள். ரோமினியின் வரி பணமும், மாசாசுசெட்டில் அவரின் வலிமையற்ற கவனர் காலமும் இழுத்தால் உருளத்தக்க இரு வண்டிச் சில்லுகள். ஒபாமா வண்டியை இழுத்து முன்னால் போவாரா எனபது கேள்வி. இன்னொரு நாள் வெள்ளை மாளிகையில், இன்னொரு வெற்றி என்கையில் என்று கார்த்திகை ஆறாம் திகதியின் பின்னும் கூறுவாரா? தவிட்டு பானைக்குள் கைவைத்து பொற்காட்டி எடுக்கும் மந்திரம் அன்றுவரைக்கும் நிலைக்குமா? முடிவுகளை சில மாதங்களில் TV திரைகளில் காண்க.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]நல்ல கருத்துக்கள் மல்லையூரான் ( இதனால் தான் எம்மவர்கள் அதிகளவில் கனடாவை தெரிவு செய்தனர், இலவச மருத்துவ சேவை :D ) [/size]

[size=4]

இந்த வழக்கு வெற்றி ஒபாமாவுக்கு தேர்தலுக்கு உதவும் மாதிரி தெரியவில்லை. வெறுமனே ஒரு "Image Boosting" சம்பவமாகத்தான் இருந்துவிடும் சாத்தியம் காணப்படுகிறது."Obama Care" என்பது வரும் கார்த்திகை தேர்தலில் ஒபாமாவுக்கு பாரிய கால் விலங்கு.
[/size]

[size=4]ஒபாமா இந்த வரும் தேர்தலில் தோற்றாலும் அவரின் பெயர் இந்த கொள்கையால் நீடிக்கும். அதாவது சில நல்ல விடயங்கள் செய்யும் பொழுது அவை அரசியல் ரீதியாக... தோல்வியை தரும். அந்த வகையில் ஒபாமா மேலும் உயர்ந்தவராக தெரிகின்றார். [/size]

2012-the-supreme-court-justices.jpg

இவர்களில் மூவர் புஸ் யூனியரால் நியமிக்கபட்டவர்கள். சிலகாலமாக கோடு குடியரசுக்கட்சி சார்பானதாகத்தான் இருக்கிறது. இவர்களில் அலித்தோவும் ரோபேட்டும் புஸ் நியமித்திருந்தாலும் திறமையானவர்களாக வருணிக்கப்படிருந்தவர்கள். சத்தோமாயரும் காகனும் ஒபாமாவால் நியமிக்கபட்டவர்கள். இன்றைய செய்திகளின் படி ரொபேட், கோடு குடியசுகட்சியின் நிலையமாக பெயர் எடுக்க கூடாதென்பதற்காகத்தான் அப்படித்தீர்ப்பளித்தார் என்று கூறுகிறது. அது குறுகியமனபான்மையான விளக்கம். இவர்களை தமிழில் எப்படி அழைப்பது என்பது புரியவில்லை. இவர்கள் "House of Lords - Law Lords' விட அதிகாரம் படைத்தவர்கள். நாட்டு அரசியல் அமைப்பின் மூன்று பக்க சமநிலை ஒரு பகுதி. என்வே நான் நீதி அரசர்கள் என்ற பதத்தை பாவித்தேன்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.