Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தது பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? உண்மையை சொல்ல மறுக்கும் உள்துறை...! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

இறந்தது பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? உண்மையை சொல்ல மறுக்கும் உள்துறை...! ஈழதேசம் செய்தி..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgசட்டீஸ்கரில் கொல்லப்பட்ட 20 பேர் பழங்குடிகளா..? மாவோஸ்ட்களா..? சுட்டுக் கொன்றது ராணுவம் எனவே மாவோஸ்ட்கள் தான் என்கிறார்கள் உள்துறை அமைச்சகமும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அவர்களும். சட்டீஸ்கர் மாநிலத்தில்

ஒரு இரண்டு நாட்களுக்கு முன் சுமார் 200 சி.ஆர்.பி.எப். ராணுவத்தினர் சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் முற்றுகை இட்டனர். கையில் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்கள் கூடவே வாகனங்கள். எவ்வளவு நாள் தான் முகாம்களில் அடைந்து கிடப்பது என்ற நிலையில், இவர்களின் முகாம்களில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதாவது மலைவாழ் கிராமத்திற்கு மாவோஸ்ட்களை தேடி புறப்பட்டுள்ளனர். அந்த கிராமத்து மக்கள் அனைவரும் கூடி, புதிய நடவு வேலைகளை ஆரம்பிக்க வேண்டி, அதற்கு முன் ஏற்பாடாக கோயில் பூசைகளை எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்ததும் கூட்டமாக கூடி இருக்கிறார்கள், அப்படியென்றால் அவர்கள் மாவோஸ்ட்களாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதி, சுற்றி வளைத்து கண்ணுகளை மூடிக்கொண்டு துப்பாக்கியால் சுட்டு விளையாடி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அந்தக் கூட்டத்தில் இருந்த பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி இருக்கிறார்கள், அப்படி ஓடி இருக்காவிட்டால் சுமார் ஒரு 200 மாவோஸ்ட்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று இந்நேரம் பெரிய திருவிழாவே நடத்தி இருப்பார்கள் சி.ஆர்.பி.எப், கூட்டத்தினர். உள்துறையும் ஆளுக்கு ஒரு 'இன்கிரிமண்டை' வழங்கி இருப்பார்கள்.ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதி தங்களது தேசப்பற்றை வாந்தி எடுத்திருப்பார்கள். எனவே அப்படி அந்த பழங்குடி கிராம மக்கள் ஓடியவர்கள் போக, பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் விரைவாக ஓட முடியாத காரணத்தால், சி.ஆர்.பி.எப்.- ன் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி அங்கேயே சுருண்டு விழுந்திருக்கிறார்கள், துப்பாக்கி குண்டு உடலில் பட்டால் சுருண்டு விழ வேண்டியது தானே. குண்டடிபட்டு இறந்த இருபது பேரில் ஒரு ஆறு சிறுவர்களும் ஏழு எட்டு பெண்களும், எஞ்சிய எண்ணிக்கையில் முதியவர்களும் இறந்து கிடக்க, இருபது மாவோஸ்ட்களை பசுமை வேட்டை ஆப்பிரசெனில் கொன்று விட்டோம் என்று கூறி, கணக்குகளை எழுதி உள்ளார்கள்.

மத்திய உள்துறை அமைச்சரும் நமது ராணுவ வீரர்களின் திறமையை, கடமையை பெரிதும் பாராட்டுகிறேன் என்று அறிக்கை விட, இறந்து போன உடல்களை பத்திரிக்கைகளுக்கு காட்டப்போக, அட என்னடா இது..! சிறுவர்களும் பெண்களும் போக முதியவர்களும் என்று இருக்கிறார்களே..? என்று சொல்ல, இவர்களா மாவோஸ்ட்கள்..? என்று மற்றவர்களும் கேட்கப் போக, அந்தப் பகுதி ச.ம.உ., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். சட்டீஸ்கர் ஆட்சியோ ப.ஜ.க., முதல்வர் ஆட்சி, பார்த்தார் காங்கிரஸ் ச.ம.உ., இறந்தது அனைவரும் பழங்குடி மக்கள் தான், மாவோஸ்ட்கள் இல்லை என்று அறிவிக்க, இந்த விபரங்களை எல்லாம் பார்த்தும் கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் நீதிபதி சச்சார், சுவாமி அக்னிவேஷ் மற்றும் பி.டி.சர்மா போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்து எழுத்து விட்டார்கள்.

இந்த போலி மோதலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும், நடந்த படுகொலைகளுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியதோடு நிற்காமல், இந்த படுகொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட, உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூட்டம் இறந்த அனைவரும் மாவோஸ்ட்கள் தான் என்று அறிக்கை விட்டார்கள். அதாவது சுட்டுக் கொல்லப்பட்ட இருபது பேரும் பழங்குடி அப்பாவி மக்கள் கிடையாது. சிறுவர்களை மாவோஸ்ட்கள் தங்களது படையில் சேர்த்து உள்ளனர். பெண்களும் அவ்வாறே, அப்படியென்றால் முதியவர்கள் மட்டும் விடுவானேன். அவர்களையும் மாவோஸ்ட்களாக மாற்றி விட்டார்கள் உள்துறை அதிகாரிகள் கூட்டம்.

பா.ஜ.க.வின் முதல்வர் ராமன் சிங் இவ்வாறு இன்று அறிக்கை வெளியிட்டார். நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று பொதுவில் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.அதாவது சி.ஆர்.பி.எப்., படையினரிடம் இருந்து நக்சலைட்டுகள் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவி கிராமத்தினரை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர் என்று நக்சலைட்டுகள் மீது குற்றம் வேறு சுமத்தியுள்ளார். நமக்கு வரும் சந்தேகம் என்னவென்றால், இந்த கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற வார்த்தைகளை சுமார் முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறியவர்கள் இன்று மாவோஸ்ட்களுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளார்களோ..?

இலங்கை யுத்தத்தில் விடுதலைப் புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள், அதனால் தான் பொது மக்கள் என்று கூட பார்க்காமல் பீரங்கிகளை கொண்டு அழித்து விட்டோம், பாஸ்பரஸ் குண்டுகளை போட்டு ஆயிரக்கணக்கில் எரித்து விட்டோம். இலங்கை பாதுகாப்பு படையினர் வேறு என்ன தான் செய்ய முடியும் என்று நியாயம் பேசிய அதே வாய்கள் தான் இன்று இவர்கள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறி இருக்கிறார்களோ..? என்ற சந்தேகம் தான்.

அதாவது இவ்வாறு முடிவு எடுத்து விட்டார்கள் உலக நாடுகள். ஆள் இல்லாத விமானம் மூலம் குண்டுகள் போடுவோம், இறந்த அனைவரையும் தாலிபான்கள் என்போம். அதேபோல பாக் பழங்குடி ஏரியாவில் குண்டு போடுவோம், இறந்து போகும் மக்கள் அனைவரையும் பாக்கில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் என்போம். யுத்தம் முடிந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எனவே திறந்த வெளி சிறையில் அடைத்து உயிர்களை பறிப்போம். மேலும் ஒரு இரண்டு பேருக்கு ஒரு ராணுவ வீரரை நிறுத்துவோம்.காஷ்மீரில் தலைக்கு ஒரு ராணுவ சிப்பாயை நிறுத்துவோம். அதற்காக சிறப்பு அதிகாரத்தை இயற்றிக் கொள்வோம். உலகில் பயங்கரவாதம் தீவிரவாதம் தான் பெரிது. மக்களும் சட்டமும் பெரிதல்ல. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் கால் மயிருக்கு சமானம் என்று சத்தியம் செய்து விட்டு, மக்களை அழிக்கும் வேலைகளில் இறங்கி உள்ளார்கள் போல.

மாயாண்டிக்கருப்பு

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே..! உண்மையிலே பாராட்டணும் கிந்தியக்காரன் வண்ட வாளத்தை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறது ஈழத்து பத்திரிக்கை எல்லாம்.. இப்பத்தான் கொஞ்சம் தெளிவாகிட்டு வராங்கள்...

டிஸ்கி:

மாயாண்டி கருப்பு அவர்களுக்கு நன்றி :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.