Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிமலரூபன் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் மூன்று கோரிக்கைகள் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNAmembers.jpg

[size=4]கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் முன் வைக்கப்படும் மூன்று அவசர கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.[/size]

[size=4]கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிமலரூபனின் பெற்றோர்கள், பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது வழக்குரைஞர்களுடன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், சட்ட வைத்திய மற்றும் உடல் கூரியல் நிபுணர் ஒருவரின் மூலமாக, நிமலருபனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், நிமலருபனின் மரண சடங்குகள், மத அனுஷ்ட்டானங்களுடன் அவரது சொந்த கிராமமான வவுனியா நெலுங்குளத்தில் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் கண்காணிப்பு குழு கோரியுள்ளது.[/size]

[size=4]இது தொடர்பான கோரிக்கைகள் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு சர்வதேச சமூகம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, நடைபெற்ற சந்திப்பின் போது, ராஜதந்திரிகள் கோரப்பட்டனர்.[/size]

[size=4]தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதி நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் இன்று, வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பை நடத்தியது. மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பை ஏற்று கொழும்பில் உள்ள பதினைந்து வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.[/size]

[size=4]மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர்களான நிமல்கா பெர்னாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய, ஏற்பாட்டாளர் மனோ கணேசன் ஆகியோருடன் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன், மற்றும் எம்பீகளான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோதலிங்கம், எஸ். செல்வராஜா, ஏ. அரியநேந்திரன், புளொட் இயக்க தலைவர் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுசெயலர் நல்லையா குமரகுருபரன், ஊடக செயலர் ஏ. பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதி ஆகியோரும் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=5]அரசியல் கைதி நிமலரூபனின் மரணம் குறித்த பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.[/size]

[size=4]தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடயத்தில் நடவடிக்கை எடுத்துவரும் வழக்கறிஞர்களுக்கு அறிவிக்காது, நிமலரூபனின் பெற்றோரைக் காவல்துறையினர் வவுனியாவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

ராகம மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிமலரூபனின் சடலத்தை காண்பித்த பின்னர் வவுனியாவுக்கு அவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் வழக்கறிஞர்கள் அவர்களை மீண்டும் இன்று கொழும்புக்கு அழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை நிமலரூபனின் பூதவுடல் வவுனியா நெலுக்குளம் பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படுமென எதிர்பார்ப்பதாகவும் கொள்பிட்டியில் உள்ள மனித உரிமைகள் இல்ல வட்டாரங்கள் கூறியதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மகர சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனை, ராமக மருத்துவமனை ஆகியவற்றில் சிககிச்சை பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் பார்வையிடுவதற்கு இதுவரை அனைத்துலக செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12374[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.