Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழர் தேசிய அவையினர் விடுக்கும் கண்டன அறிக்கையும் வேண்டுகோளும்!

Featured Replies

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிறிலங்கா அரசாலும் அரச படைகாளாலும் தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலைகளும் எம் இனத்திற்கு எதிரான நில அபகரிப்புகளும் தொடர்ந்தும் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

அதன் உச்சக் கட்டமாக 1983ஆம் ஆண்டு யூலை மாதம் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த எம் உறவுகள் சிங்களப் படைகளாலும் சிறைக் காவலாளிகளாலும் மற்றும் கொடூர குற்றங்களைப் புரிந்து வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாலும் மிகவும் கொடூரமான முறையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டு கடுமையான சித்திர வதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வகையான படுகொலைகள் பல தொடர்ந்தும் நடந்த வண்ணம் இருக்கையில் கடந்தவாரம் வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட பின்னர் கண்ணீர்ப் புகையால் மயக்கமடைய வைக்கப்பட்டு கம்பிகளாலும் தடிகளாலும் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டு பலர் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் கொடூரமான காயங்களுடன் எந்த விதமான சிகிச்சைகளும் அழிக்கப்படாத நிலையில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபன் வயது 28 அவர்கள் சிங்களக் காடையர்களினால் அடித்தும் கொல்லப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் அனுராதபுர சிறைச்சாலையில் அங்குள்ள உயர் சிறையதிகாரியின் முன்னிலையில் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்கள்.

உலக நாடுகள் பலவும் சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றுக்கான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற வேளையிலும் கூட அவற்றை எல்லாம் செவி மடுக்காமல் 1983 ஆண்டு கறுப்பு யூலை ஏற்படுத்திய அதே கொடூரத்தை இன்றும் 2012 ஆம் ஆண்டு நிமலரூபன் வரை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் புலம் தேசத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களும் தாங்கள் வாழும் அந்தந்த இடங்களிற்கான பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் மனித உரிமை செயற் பாட்டாளர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் அமைப்புக்கள் ரீதியாகவும் எடுத்துச் செல்லுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

அதே போன்று நாளை யூலை 6 ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 1 மணிக்கு ரொறோன்ரோவில் இல 36 எக்லின்ரன் எவனியூ வெஸ்ற்றில்( Egglinton Avenue West) அமைந்துள்ள சிறிலங்காத் துணைத் தூதரகத்தின் முன்பாக நடைபெறுகின்ற சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்விலும் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் கனடியத் தமிழர் தேசிய அவை கேட்டுக் கொள்கின்றது.

இப் படுகொலைகள் சிறிலங்கா அரசின் இனச் சுத்திகரிப்பு மற்றும் தமிழர் தாயகத்தின் பூர்வீக நில அபகரிப்பு போன்றவற்றை எல்லாம் கனடிய அரசுக்கு எடுத்துச் செல்லும் முகமாகவும் மற்றும் இங்குள்ள அனைத்துக் கட்சி பாராள மன்ற உறுப்பினர்களுக்கும் எடுத்துச் செல்லுகின்ற முகமாகவும் எதிர் வரும் 22 ஆம் திகதி அல்பேற் காம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

இந் நிகழ்வில் அனைத்து கனடா வாழ் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு சிறிலங்காவில் தமிழருக் கெதிராக இன்னும் தொர்ச்சியாக நடை பெற்று வருகின்ற இனப்படுகொலையை உலகுக்கும் கனடிய அரசுக்கும் மீண்டும் மீண்டும் இந் நிகழ்வுகளினூடாக எம் இனத்திற்கான விடியல் கிடைக்கும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.