Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் பெற்ற யுத்த வடுக்களை காலமும், பணமும் குணப்படுத்தாது

Featured Replies

[size=5]தமிழர்கள் பெற்ற யுத்த வடுக்களை காலமும், பணமும் குணப்படுத்தாது -[/size]

[size=5]அரசுக்கு இது புரியவேண்டும்- அமெரிக்க ஊடகம்[/size]

[size=4]யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேசங்களில் புதிய வீதிகளை அமைத்தல், விடுதிகள், பாடசாலைகள் போன்றவற்றை நிர்மாணித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்றவற்றுக்காக பெருமளவு நிதியை இலங்கை அரசு வாரியிறைக்கின்றது. இது எதற்காக என பார்க்கும்போது, இனிவரும் காலத்தில் இந்தப் பிரதேசங்களில் ஏற்படும் அபிவிருத்தியால் யுத்த வடுக்களை குணப்படுத்த முடியும் என இலங்கை அரசு கூறி வருகின்றது. ஆனால் அது சாத்தியப்படக்கூடியதல்ல என அமெரிக்காவினைத் தளமாகக் கொண்ட தி வோசிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது.[/size]

[size=4]இது தொடர்பில் அவ் ஊடகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வன்னியில் இடம்பெற்ற போர் முடிபுக்கு வந்த பின்னர் இலங்கை அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் அந்த மக்களை மீண்டும் அடக்க முயற்சித்துள்ளது. இதனால் போரில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு கிடைத்த சமாதானம் என்பது வலியுடன் கூடிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது.[/size]

[size=4][size=5]அவர்களது உண்மையான பிரச்சினை என்ன? அதற்காக உரிய தீர்வை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை சற்றும் சிந்திக்காமல் அபிவிருத்தி என்ற ஒரு சொல்லில் இலங்கை அரசு பெரும் பணத் தையும் காலத்தையும் இலங்கையின் வடக்கே செலவளித்துக் கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொல்லப் போனால் இன்னும் அந்த மக்களின் மனங்களை இந்த அரசால் வெல்ல முடியவில்லை என்றே கூறலாம். இன்னும் வடக்கு மக்கள் இராணு வத்தினரைக் கண்டால் பயப்பீதியுடனேயே பயணிக்கின்றனர். இதற்கு இராணுவத்தினரின் போருக்குப் பின்னரான எல்லை மீறிய செயற்பாடுகளே காரணமாகும்.[/size]

தமது தேவாலயத்தில் ஒரு மெழுகுதிரியைக் கூட கொழுத்துவதற்கு தாம் அனுமதிக்கப்படு வதில்லை எனவும் இவ்வாறு மெழுகுதிரி ஏற்றப்பட்டால் இலங்கை இராணுவம் சந்தேகம் கொள்வதாகவும் அங்கு இருக்கும் தமிழ் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று யுத்தம் முடிபடைந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட இந்து ஆல யங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகவே காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கே பொருளாதாரத் தின் ஒவ்வொரு பகுதியிலும் அதாவது விவ சாயம் செய்தல்,மரக்கறி விற்றல், விடுதிகளை நடத்தல், உணவகங்களை வைத்திருத்தல் மற்றும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை கூட இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர்.

[size=5]இதனால் இராணுவ விஸ்தரிப்பின் அடக்கு முறையின் கீழ் தாம் வாழ்வதாக அங்கு வாழும் தமிழர்கள் உணர்கிறார்கள் இதுதான் உண் மையும் கூட. [/size]மேலும் தமிழர் பிரதேச அபிவிருத்தித் திட் டங்களில் தமிழ்ப் புத்திஜீவிகளின் கருத்துக்கள் ஏற்கப்படுவதில்லை. மாறாக அவை மறுக்கப் பட்டு பெரும்பான்மை தரப்புக்களால் எடுக்கப் படும் தீர்மானமாக மாற்றப்படுகின்றது. இதனால் பல அபி விருத்தி திட்டங்கள் தமிழ் மக்களிற்கு சிறிதும் பொருந்தா தனவான உள்ளன. இப் பிரச்சினை களில் உள்ள உண்மைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யாது சர்வதேசத்தின் கேள்விகளுக்காக பொய்யான அபிவிருத்தியை மேலும் வளர்த்து கொண்டு செல்வது உண்மை யான வெற்றியை ஒருபோதும் தராது.

எனவே இலங்கை அரசு முத லில் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான உண்மையான செயல்முறையாக வடக்கில் அதிகமாக காணப்படும் இரா ணுவப் பிரசன்னத் தை குறைத்து கொண்டு செல்வது தான் அதன் தொடக் கப்படி எனவும் அவ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29266

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.