Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் யாழ்ப்பாணத்தின் வரைபடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]03-300x225.jpg[/size][/size]

[size=3][size=4]புவிசார் இடமறிதல் முறைமைக் கருவியைப் (ஜி.பி.எஸ்) பயன்படுத்தி யாழ்.மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் இடர்சார் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் புதிய வரைபடம் ஒன்று தயாராகவுள்ளது.[/size][/size]

[size=3][size=4]புவிசார் இடமறிதல் முறைமைக் கருவியைப் பயன்படுத்தி, இடம், வள, நிலப் பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரட்டுதல் தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் நிலப் பயன்பாட்டு உதவியாளர்கள், நிலப்பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.[/size][/size]

[size=3][size=4]இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்துக்கு இடர் முகாமைத்துவப் பிரிவினால் வழங்கப்பட்ட 10 புவிசார் இடமறிதல் முறைமைக் கருவிகள் பிரதேச செயலகங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியளிக்கப்பட்ட நிலப் பயன்பாட்டு உதவியாளர்கள், நிலப்பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்கள் தத்தமது பிரதேச செயலர் பிரிவுகளின் இடம், வள, நிலப்பயன்பாடு தொடர்பான தகவல்களைப் புவிசார் இடமறிதல் முறைமைக் கருவியினூடாகத் திரட்டவுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]இவ்வாறு பிரதேச ரீதியாகத் திரட்டப்படும் தகவல்கள் ஓகஸ்ட் மாதம் 14ம் திகதிக்கு முன்னதாக யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியின் பின்னர் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும். முழுமைப்படுத்தப்பட்ட இடம்சார் தரவுத்தளம் இடம், வள, நிலப் பயன்பாட்டு தரவுகளை உள்ளடக்கி தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவாக வெளியிடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=2567[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.