Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அவுஸ்திரேலிய படகுப் பயண அனுபவம் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

christmas-island-seithy17712.jpg

[size=4]அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பையன்கள் தமது ஆபத்து நிறைந்த படகுப் பயணம் குறித்து விபரித்துள்ளனர். 20 நாட்கள் கடலில் பயணம் செய்வதற்காக இந்தப் பையன்களின் குடும்பங்கள் இவர்களை அனுப்பியிருக்கிறது.[/size]

[size=4]கடந்த வாரம் கடலிலிருந்த போது தாங்கள் இரத்த வாந்தி எடுத்ததாகவும் குடிக்கத் தண்ணீரோ சாப்பிட உணவோ கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பையன்களில் இருவர் இலங்கைக் கடற்படையோ அல்லது பொலிஸாரோ தடுத்து நிறுத்திவிடுவார்களென தாங்கள் அச்சமடைந்திருந்தது பற்றிக் கூறியுள்ளனர்.[/size]

[size=4]ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் 120 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஏற்றிக்கொண்டு 3 படகுகள் அவுஸ்திரேலியக் கடற்பரப்புக்குள் பிரவேசித்தன.[/size]

[size=4]நேற்றுப் பகல் 11 மணியளவில் இவர்கள் கிறிஸ்மஸ்தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இந்த வருடம் வந்து சேர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 1500 க்கும் அதிகமாகும். கிறிஸ்மஸ் தீவிலுள்ள பொஸ்பேற்றில் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 76 பிள்ளைகளுடன் இலங்கைப் பிள்ளைகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]இலங்கையில் தனது பெற்றோரை விட்டு விட்டு வந்துள்ள 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தாங்கள் புறப்படுகையில் இலங்கைக் கடற்படை தங்களைப் பிடித்தால் சிறையில் வைத்துவிடுவார்கள் என்று தான் பயமடைந்திருந்ததாகக் கூறியுள்ளார்.[/size]

[size=4]இருவாரங்களுக்கு முன்னால் வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவர் குழாமில் இச்சிறுவனும் இருக்கிறான். "மிக மிக கஷ்டமாக இருந்தது. 5 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லை. நாங்கள் இரத்தமாக வாந்தி எடுத்தோம். அங்கு சிறிய பையன்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் இரத்தமாக வாந்தி எடுத்தோம்.[/size]

[size=4]கடற்படை அல்லது பொலிஸார் பிடித்து விடுவார்களெனப் பயந்தோம். பிடித்தால் 5 அல்லது 6 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். அது மிகவும் ஆபத்து என்று அச்சிறுவன் கூறியுள்ளான். 60 க்கும் மேற்பட்டோர் இரவு வேளையில் புறப்பட்டதாக அவன் கூறினான். இலங்கையில் தமிழர்கள் வன்முறைகளையும் துன்பங்களையும் எதிர்நோக்குவதாக அவன் தெரிவித்துள்ளான்.[/size]

[size=4]விசா, புதுவாழ்வுக்காகவே அவுஸ்திரேலியாவுக்கு தாங்கள் வந்திருப்பதாக அச்சிறுவனின் 17 வயது நண்பன் தெரிவித்தான். நேற்றுக் காலை 49 இலங்யைர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். இறங்குதுறை[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.