Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு

Featured Replies

[size=4]பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு[/size]

Eliezerbookcover.jpg

[size=4]கணிதப்பேராசிரியர் கிறிஸ்ரி ஜயரத்தினம் எலியேசர் [1918 -- 2001] பலவகைகளில் சிறப்புப்பெற்றவராகவும்,

நம்மவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறார். இவருடைய வாழ்க்கைவரலாற்றை, அவரின்

மனைவியார் இராணி எலியேசர் எழுதி வெளியிட்டுள்ளார்.

எலியேசர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரின் இளவயதிலேயே இவருடைய பெற்றோர்கள்

காலமாகிவிட்டனர். இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945இல் தமது கணிதக்கலாநிதிப்

பட்டத்தைப் பெற்றார். இவருடைய கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்பார்வைசெய்த போல் டிராக் [ Paul Dirac ] என்பவர் தமது

31வது வயதிலேயே பௌதிகத்திற்கான நோபல் பரிசைப் பெற்றமேதை. அவர் " The most brilliant mathematician the East has produced "

in this age" என எலியேசரைப் புகழ்ந்துள்ளார். 1943இல் எலியேசர் முன்வைத்த கணிதக்கண்டுபிடிப்பு அவர் பெயரால் " எலியேசர் தேற்றம்"

[ " The Eliezer Theorem" ] என்றே அழைக்கப்படுகிறது. இவர் பின்பு இலண்டன்பல்கலைக்கழகத்திலும் கணிதத்தில் D.Sc.

பட்டம் பெற்றார். இவர் சட்டத்துறையிலும் பாரிஸ்டர் [ Barrister] பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. பின்பு இவர் கணிதப்பேராசிரியராக

கொழும்பு இலங்கைப்பல்கலைக்கழகம் [1949 - 1959], கோலாலம்பூர் மலாயப்பல்கலைக்கழகம் [1959 - 1968], அவுஸ்திரேலியா

மெல்பேர்ன் La Trobe பல்கலைப்பல்கலைக்கழகம் [1968 - 1983] என்பவற்றில் பணிபுரிந்தார். கணிதம்தொடர்பான பலநூல்களையும்,

ஆய்வுக்கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

1966இல் மலாயப்பல்கலைக்கழகத்தில் முதலாவது உலகத்தமிழாராய்ச்சிமகாநாடு நடைபெற்றபோது, அதை முன்னின்று நடத்திய

ஈழத்தமிழறிஞர் பேராசிரியர் வண. பிதா தனிநாயகம் அடிகளாருக்கு உறுதுணையாக இருந்து உதவினார். அந்த மகாநாட்டில்

தமிழகக்கணிதமேதை ஸ்ரீனிவாச இராமநுசன் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்தார். இவர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தபோது

அங்குள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புக்குத் தலைவராக விளங்கிப் பலம்சேர்த்தார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் இவரின்

சிறப்பான பங்களிப்புக் காரணமாக தேசியத்தலைவரினால் 1997இல் "மாமனிதர்" பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஈழவிடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அதிஉயர்விருது இவருக்கு இவர் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும்போதே

அளிக்கப்பட்டது தனிச்சிறப்பானதாகும். ஏனையோர்க்கு அவர்கள் காலமானதின்பின்பே இந்தக்கௌரவம் அளிக்கப்பட்டது.

பேராசிரியர் எலியேசர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, அதிலும் குறிப்பாக நமது இளம்தலைமுறையினருக்கு,

முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிச் சென்றுள்ளார். அதாவது மற்றையவர்கள் பார்த்து வியக்கும்படியான திறமையும்,

ஆற்றலும் உள்ளவர்களாக நாம் தெரிந்துள்ளதுறையில் பிரகாசிக்கவேண்டும். அதன்மூலம் நாம் தேடியுள்ள புகழை,மதிப்பை,மரியாதையை,

எமது இனத்தின் விடுதலைக்கு, நல்வாழ்வுக்கு உதவும் செயற்பாடுகளில் பயன்படுத்தவேண்டும். எம் இளம்தலைமுறையினர் இந்த

வழிமுறையில் தொடர்ந்து போராடவேண்டும். அதனைப் பல தலைமுறைகள் தொடரவேண்டியிருப்பினும் நெஞ்சுரத்துடன் தொடரவேண்டும்.

நம்மிடையே வாழ்ந்த, வாழ்ந்துவரும் பெரியார்கள், கல்விமான்கள், துறைசார்நிபுணர்கள், போன்றோரின் வாழ்க்கைவரலாற்றை

நாம் தவறாது எழுதி அதன்மூலம் எமது எதிர்காலச்சந்ததியினருக்கு விழிப்புணர்வையும், உளஊக்கத்தையும் ஊட்டவேண்டும். இந்த

வகையில் பெருமகனான எலியேசரின் வாழ்க்கையை எழுதிவெளியிட்ட அவரின் மனைவியாரின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. மேற்கு

நாட்டினர் தமது வரலாற்று நிகழ்வுகளை தவறாது, விபரமாகப் பதிவுசெய்து வைக்கிறார்கள். அந்த வகையிலான வாழ்க்கைவரலாறுகள்,

பிறவரலாறுகள், ஒன்றல்ல, பலவற்றை நாம் காணலாம். அத்தகைய விரும்பத்தக்க செயற்பாடுகள் நம்மவர்களிடையே பல்கிப்

பெருகவேண்டும்.அதற்கான அரசியல்விழிப்புணர்வு, அறிவார்வம் நம்மிடையே அதிகரிக்கவேண்டும்.

பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறுபற்றி மேலதிகமாகத்தெரிந்துகொள்ள, அந்த நூலைப் பெற்றுக்கொள்வதற்கான

மின்னஞ்சல்முகவரியைத் தெரிந்துகொள்ள, கீழே தரப்படும் இணைப்பைச்சொடுக்கவும். நம் இளம்தலைமுறையினர் இந்த நூலை வாங்கி

வாசித்து உரிய உள்ஊக்கத்தைப் பெறவேண்டும்; இந்த வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவும் வழங்கவேண்டும்.

Christie Jayaratnam Eliezer (1918-2001)

http://www.sangam.or...er.php?uid=4791[/size]

Edited by மகம்

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிற காலத்தில, இவர் எழுதிய ' வெக்டர் அனாலிசிஸ்' படித்தோம்!

இவரை நினைத்து, மிகவும் பெருமை! வடமராட்சி தந்த ஒரு தலைசிறந்த தமிழ் மகன்!

இவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை, எனது வாழ்க்கையில் கிடைத்த ஒரு மகத்தான பேறாகக் கருதுகின்றேன்!

தலைவரால், மாமனிதர் எனக் கௌரவிக்கப் பட்டவர்களில், இவரும், ஒருவராவர்,

இணைப்புக்கு நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.