Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம்

Featured Replies

[size=5]மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம்: சோமவன்ச[/size]

[size=4]மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் காலம் வந்தவிட்டது. தற்போது நாட்டில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம் என்பதை மக்கள் விடுதலை முன்னணி உணர்ந்துள்ளது. இந்தப் போராட்டங்கள் மஹிந்த அரசின் விழ்ச்சிக்கான அறிகுறி என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக அணி திரள்வோம்' என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்த விட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் இன்றும் இலங்கை அரசாங்கம் கடன்களைப் பெற்று வருகின்றது. கடன்களைப் பெற்று ஆட்சி நடத்தும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறிவிட்டது. 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் 44 ஆயிரம் கோடி இலங்கை அரசாங்கத்தினால் கடன்பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை மூலம் பிறக்கும் பிள்ளைகள் கூட 3 லட்சம் ரூபாய் கடன்காரர்களாக பிறக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். இஸட் புள்ளி விவகாரத்தால் இரண்டு லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், நீதியாளர்கள் எனப் பலரும் களத்தில் குதித்துள்ளனர். இவ்வாறான மக்கள் போரட்டத்தின் மூலம் பல வெற்றிகளும் கிடைத்துள்ளன. இந்த மக்கள் எழுச்சிதான் மஹிந்த அரசின் வீழ்ச்சியின் அறிகுறியாக அமைந்துள்ளது.

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு யாரும் முன்வந்தால் அதனை தலை ஏற்று நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது.

எங்களின் இந்தப் போராட்டத்தை தடை செய்வதற்கு அரசு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டது. நீதிமன்றத்தின் மூலம் தடை போடுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இன்று இந்த யாழ். மண்ணில் எங்கள் போராட்டம் நடைபெறுவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள். இவர்களும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் கூறினார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/45859-2012-08-01-18-07-16.html

  • தொடங்கியவர்

[size=4]

இந்த அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். இஸட் புள்ளி விவகாரத்தால் இரண்டு லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், நீதியாளர்கள் எனப் பலரும் களத்தில் குதித்துள்ளனர். இவ்வாறான மக்கள் போரட்டத்தின் மூலம் பல வெற்றிகளும் கிடைத்துள்ளன. இந்த மக்கள் எழுச்சிதான் மஹிந்த அரசின் வீழ்ச்சியின் அறிகுறியாக அமைந்துள்ளது.

தீர்வு வழங்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்; இசற் புள்ளியால் பாதிப்புற்ற மாணவர் அறிவிப்பு[/size]

[size=4]அதிகாரிகளால் தமக்குத் தீர்வு வழங்கப்படாவின் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதற்குத் தாம் தயாராவதாக இசற் புள்ளியால் பாதிப்புற்ற மாணவர்கள் நேற்றுக் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர். தமது இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு விரைவில் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size]

[size=2]

[size=4]இசற் புள்ளி விவகாரத்தினால் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்னால் நேற்றுப் பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]பல்வேறு மாவட்டங்களைச் [/size][size=4]சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். அமைச்சர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.[/size][/size]

[size=2]

[size=4]பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுனில் காமினி நவரட்ணவுடன் கலந்துரையாடுவதற்காக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 மாணவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் வெளியே இருந்தனர்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=305241288103363488[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.