Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் முன்னாள் போராளியின் உரை, நடன நிகழ்வு

Featured Replies

இறுதியான அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா இராணுவம் நடத்தவுள்ள இரண்டாவது பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கலதாரி விடுதியில் நாளை தொடக்கம் வரும் 10ம் நாள் வரையான மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கிற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், இராணுவ அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர்.

சிறிலங்காவில் உள்ள 42 நாடுகளின் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 100இற்கும் அதிகமான வெளிநாட்டவர்களும், 150 வரையிலான உள்நாட்டு அழைப்பாளர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

சிறிலங்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல பாதுகாப்பு ஆலோசகர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கிற்கு மூன்று நாடுகளின் இராணுவத் தளபதிகள் வரவுள்ளனர்.

அனைத்துலக சமூகத்திடம் இருந்து இம்முறை இந்தக் கருத்தரங்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

40 இற்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள். கொள்கைவகுப்பாளர்கள், புலமையாளர்கள், சேவையில் உள்ள, ஓய்வுபெற்ற படை அதிகாரிகளும் இதில கருத்துரை வழங்கவுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் நடனமும் இடம்பெறவுள்ளது.

முன்னாள் போராளி ஒருவர் தனது வாழ்வு அனுபவங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் உரையாற்றவுள்ளார்.

இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் பற்கேற்க இணங்கியுள்ள நாடுகளில் பங்களாதேஸ், பிறேசில், சீனா, புரூணை, ஈரான், கென்யா, மலேசியா, மாலைதீவு, நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, அமெரிக்கா, பிரித்தானியா, வியட்னாம், செனகல் ஆகியனவும் அடங்கியுள்ளன.

நாளை ஆரம்ப நாள் நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதி வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் இந்தக் கருத்தரங்கின் இறுதிநாளன்று , சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளில் இந்தியாவின் பங்கு தொடர்பாக மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.சேகில் உரையாற்றுவார்.

குடியியல் - இராணுவ அதிகாரிகளிடையிலான ஒத்துழைப்பு குறித்து. ஓய்வுபெற்ற அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் கலாநிதி ருசெல் ஹொவார்ட் உரையாற்றவுள்ளார்.

இரண்டாவது நாள் அமர்வில் ,அமெரிக்கப் பேராசிரியர் அரி குருக்லங்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.டி.ஸ்ரோன், பிரித்தானியாவைச் சேர்ந்த சேர் வில்லியம் ஜெப்ரி, பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்.ஜெனரல் ஆசிப் யாசின் மாலிக் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மூன்றாவது நாள் அமர்வில், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க, இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியம் சுவாமி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் றொபின்சன், சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20120807106750

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.