Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விறுவிறுப்பாகப் புனையப்படும் பொய்மை – சேரமான் .

Featured Replies

நான்காம் கட்ட ஈழப்போரில் நடைபெற்ற உண்மைகளை வெளிக்கொணரும் போர்வையில், தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவித்து, சிங்களத்தின் கைப்பாவையாக விளங்கும் கே.பியிற்கு துதிபாடும் கைங்கரியம் அண்மைக் காலமாக ஊடகப்பரப்பில் அரங்கேறி வருகின்றது.

‘சர்வதேச அரசியல் புலனாய்வு’ என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வானொலிகளிலும், ‘பரபரப்பு’ என்ற மகுடத்தின் கீழ் அச்சு ஊடகப் பரப்பிலும், மே 18இற்கு முன்னர் எழுதி வந்த ஒருவரே, இப்பொழுது ‘விறுவிறுப்பாக’ கே.பியிற்கு துதிபாடி, விடுதலைப் போராட்டத்தின் ‘ரிக்ஷி’ மூலங்களை வெளிக்கொணர்பவராகத் தன்னை இனம்காட்டி வருகின்றார். மாவீரர்களின் உயிர்க்கொடையிலும், மக்களின் அர்ப்பணிப்பிலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நதிமூலம் தமிழீழத் தேசியத் தலைவரிடம் பொதிந்து கிடப்பதை உணராது அதற்கான ‘ரிக்ஷி’ மூலத்தை கே.பியூடாகத் தேட முற்படும் இப்படிப்பட்ட நபர்களைப் பற்றி விமர்சிப்பதோ அன்றி அவர்களின் தனிப்பட்ட பின்புலம் பற்றி ஆராய்வதோ இப்பத்தியின் நோக்கம் அன்று: அது ஊடக தர்மத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் இவ்வாறான நபர்களால் விதைக்கப்படும் விசவிதைகளை நாம் இலகுவில் அலட்சியம் செய்து விட முடியாது.

வெளிநாட்டு வலையமைப்புக்களுக்கான பொறுப்பில் இருந்து 2003ஆம் ஆண்டு கே.பியை நீக்கியதன் காரணமாகவே முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் இட்டுச்செல்லப்பட்டதாக கற்பிதம் செய்யும் விசவிதையையே ‘விறுவிறுப்பாக’ கட்டவிழும் இந்நபரின் தொடர் விதந்துரைக்கின்றது.

1980களின் இடைக்கூறிலிருந்து 2009 மே 18 வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட விதம் பற்றிய முழுமையான தகவல்களை கோத்தபாயவிடம் கே.பி அவர்கள் ஒப்புவித்தமை உலகறிந்த உண்மை. இவ்வாறு கோத்தபாயவிடம் கே.பி அவர்களால் ஒப்புவிக்கப்பட்ட தகவல்களில் ‘விறுவிறுப்பை’ ஏற்படுத்தக்கூடியவற்றைப் ‘பொறுக்கியெடுத்து’ தமிழீழ தேசியத் தலைவருக்கு களங்கம் விளைவிப்பதே இவ் ‘ரிக்ஷி’ மூலத்தேடல் தொடரின் இலக்காக விளங்குகின்றது என்பதை ஐயம்திரிபற புரிந்துகொள்ள முடியும்.

1992ஆம் ஆண்டின் இறுதியில் ஐரோப்பாவை விட்டு கேணல் கிட்டு அவர்கள் வெளியேறியதிலிருந்து, 2003ஆம் ஆண்டின் முதற்கூறு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பிற்குப் பொறுப்பாக விளங்கியவர் கே.பி. ‘அடிக்கடி முகமாற்று சத்திரசிகிச்சை செய்வதன் ஊடாகவும், பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டுக்களில் பயணிப்பதன் காரணமாகவும் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ளாது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத வழங்கல்களை கே.பியால் நெறிப்படுத்த முடிகின்றது’ என்ற தொனியில் 1996ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கே.பி பற்றி சண்டே ரைம்ஸ் வார இதழில் கற்பனைப் பத்தியன்றை இக்பால் அத்தாஸ் கூட எழுதியிருந்தார்.

இதனைத் தழுவி அரசறிவியல் ஆய்வு என்ற போர்வையில் றோகான் குணரட்ண போன்ற சிங்கள கடும்போக்குவாதிகளால் பின்னைய ஆண்டுகளில் தொடராகப் பல்வேறு கற்பனைப் பத்திகள் எழுதப்பட்டிருந்தன. இவ்வாறு சிங்கள ஊடகங்களிலும், அதனைத் தழுவி இந்திய – மேற்குலக ஊடகங்கள் சிலவற்றிலும் கே.பியை மையப்படுத்தி வனையப்பட்ட பொய்மைகள், அவர் பற்றிய மிதமிஞ்சிய பிரமிப்பை அக்காலப் பகுதியில் தமிழ் மக்களிடையேயும் ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மொழி பேசும் ‘ஜேம்ஸ் பாண்டாக’ சிங்கள, இந்திய, ஆங்கில ஊடகங்களில் அன்று கே.பி வலம்வந்திருந்தாலும்கூட, கே.பியின் ‘புகழ்’ கொடிகட்டிப் பறந்ததன் பின்னணியில் இயங்கிய முகம்தெரியாத போராளிகள் – செயற்பாட்டாளர்கள் பற்றிப் பலர் அறிந்திருக்க நியாயம் இல்லை.

இவ்வாறு தமது கடின உழைப்பால் ஈட்டப்பட்ட வெற்றிகளுக்கான ‘புகழ்’ கே.பியை சென்றடைவதையிட்டு அலட்டிக் கொள்ளாது, தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிநின்று அமைதியாக இவர்கள் செயற்பட்டனர். ஜெயசிக்குறுய் எதிர்ச்சமராக இருந்தாலும் சரி, ஓயாத அலைகள்-3 நிலமீட்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, 1997ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டின் இறுதி வரை போர்க்களங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றிகளுக்கு கே.பி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களே காரணம் என்று இன்று அடித்துக்கூறும் அவரது துதிபாடிகள், இவ்வாறான வெற்றிகளின் பின்னால் இருந்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் அர்ப்பணிப்புப் பற்றியோ, அன்றி செயற்பாட்டாளர்கள் – போராளிகளின் கடின உழைப்புப் பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை.

ஏன் கே.பியின் பொறுப்பின் கீழ் வெளிநாட்டு வலையமைப்புக்கள் இயங்கிய காலப்பகுதிகளில் கடலில் மூழ்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிக்கூட இவர்கள் மூச்சுவிடுவதில்லை. ஏதோ கே.பியின் திறமை காரணமாகவே வன்னியை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சென்றடைந்தமை போன்றும், கே.பியை வெளிநாட்டுப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ‘கற்றுக்குட்டிகளை’ அப்பொறுப்பில் அமர்த்தியதன் விளைவாகவே 2003ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் கடலில் மூழ்கியதாகவும் இவர்கள் வியாக்கியானம் செய்கின்றனர்.

கே.பியின் பொறுப்பில் வெளிநாட்டு வலையமைப்புக்கள் இருந்திருக்கும் பட்சத்தில், நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று கற்பிதம் செய்யும் இவர்கள், 1995-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கே.பியின் பொறுப்பில் ஆயுத வழங்கல்கள் இருந்த பொழுது யாழ்ப்பாணக் குடாநாடு சிங்களப் படைகளிடம் வீழ்ச்சி கண்டதை மறந்து விடுகிறார்கள்.

1995ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சூரியக்கதிர் நடவடிக்கையை சிங்களப் படைகள் தொடங்கிய பொழுது, கே.பி அனுப்பி வைப்பதாக வாக்குறுதியளித்த ஆயுதக் கப்பலின் வருகையை எதிர்பார்த்து வலிகாமத்தில் சிங்களப் படைகளை எதிர்கொண்டு புலிச்சேனைகள் களமாடின.

ஆனால் எதிர்பார்த்த நாட்களுக்குள் பருத்தித்துறையை கே.பியின் கப்பல் வந்தடையாத நிலையில் யாழ் நகரை விட்டுப் பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது. இதன் பின்னர் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் முன்னரண்களை அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் களமாடிய பொழுது, 1996ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் பருத்தித்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த கே.பியின் ஆயுதக் கப்பல் பன்னாட்டுக் கடலில் சிங்கள வான்-கடற்படைகளின் கூட்டுத் தாக்குதலில் மூழ்கியது.

வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றிகளுக்கு கே.பியே காரணம் என்று கூறுபவர்கள், யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்குவதற்கு கே.பி காரணமாக இருந்தார் என்று ஒப்புக்கொள்வார்களா? கே.பியின் பொறுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது இது மட்டும் முதற்தடவையல்ல. இதன் பின்னர் 1998ஆம் ஆண்டு கே.பியால் வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய கடலில் மூழ்கிப் போயின.

உண்மையில் 1998ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பாதுகாப்பாக வன்னியை சென்றடைந்ததில் கே.பியிற்கு இருந்த பங்கை விட, அக்காலப் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்த மூத்த அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு அதிகம் என்று கூறலாம். இந்திய மத்திய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியை வகித்த சம்பந்தப்பட்ட அமைச்சர், தான் பொறுப்பில் இருக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு உத்தரவாதம் அளித்திருந்தார்.

இது கே.பி அவர்ளுக்கும் தெரியும். சம்பந்தப்பட்ட இந்திய அமைச்சர் பச்சைக்கொடி காட்டியிருக்காது விட்டால் வன்னிக்கு தான் அனுப்பிய ஆயுதக் கப்பல்களில் பெரும்பாலானவை கடலில் மூழ்கியிருக்கும் என்பது கே.பி அவர்களுக்கு நன்கு தெரியும். இதனை அவரால் மறுக்க முடியாது. கே.பி அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே அவரிடமிருந்து இருந்து 2003ஆம் ஆண்டு வெளிநாட்டு வலையமைப்புக்களுக்கான பொறுப்பு எடுக்கப்பட்டது அவரது பரிவாரங்களுக்கு தெரியாது இருக்கலாம். ஆனால் உண்மை கே.பி அவர்களுக்குத் தெரியும்.

தான் இருக்கும் நாட்டில் தனது இருப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கே.பி கூறியதை அடுத்தே அவரது பொறுப்பிலிருந்து வெளிநாட்டு வலையமைப்புக்கள் எடுக்கப்பட்டன. தன்னை சூழ்ந்திருந்ததாக அப்பொழுது கே.பி கூறிய அபாயத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே பேச்சுவார்த்தைக் குழுவில் அவரை இணைத்து அதன் ஊடாக அவரை வன்னிக்கு அழைப்பதற்கான முயற்சிகூட அப்போது தமிழீழ தேசியத் தலைவரால் எடுக்கப்பட்டது.

தலைவர் பிரபாகரன் அவர்களை தனது ‘உற்ற நண்பன்’ என்று அடிக்கடி கூறி நீலிக்கண்ணீர் வடிக்கும் கே.பி இதனை நிச்சயம் மறந்திருக்க மாட்டார். மறந்தாலும்கூட அவரால் இதனை மறுக்க முடியாது.

நன்றி : ஈழமுரசு

http://thaaitamil.com/?p=29786

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.