Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி![/size]

[size=2]

[size=4]senthuran-100x80.jpgபூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன்…[/size]

[size=4]…நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை.[/size]

[size=4]அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கை.[/size]

[size=4]நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அரசு விரும்பவில்லை.[/size]

[size=4]இதுதொடர்பாக கியூ பிரிவு கண்காணிப்பாளர் (எஸ் பி) சம்பத் குமார் அவர்களை சந்திக்க, சிறப்பு முகாம் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அவரது அலுவலகம் சென்றனர்.[/size]

[size=4]இக்குழு கூறியதாவது,[/size]

[size=4]எங்களை வரச் சொல்லிவிட்டு , இரண்டுமணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். பின்பு இறுதி வரை சம்பத் குமார் எங்களை சந்திக்க வரவே இல்லை. அதனால் நாங்கள் கடிதம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.[/size]

[size=4]நாங்கள் வெளியே வந்ததும் எஸ் பி எங்களிடம் தொலைபேசியில் பேசினார். செந்தூரனை போராட்டம் நடத்துவதை கைவிடச் சொல்லுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என்று கூறினார். ஆனால் செந்தூரனின் போராட்டத்திற்கு எந்த பதிலும் கூற அவர் தயாராக இல்லை.[/size]

[size=4]இவ்வாறு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினர்.[/size]

[size=4]இன்று செந்தூரனை சந்தித்து பேசிய தாசில்தார் வளர்மதி மற்றும் துணை மாவட்ட ஆட்சியாளர் செந்தூரனின் கோரிக்கையை நாங்கள் அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு சென்றனர்.[/size]

[size=4]அப்போது அரசின் காதுகளுக்கு இதுவரை இதுபற்றி தெரியவே தெரியாது போலும்.[/size]

[size=4]இதற்கிடையில் இன்னொரு துயர சம்பவம் நடந்துள்ளது.[/size]

[size=4]செந்தூரனை சந்திக்க இலங்கையில் இருந்து அவர் அத்தை வந்துள்ளார். செந்தூரனின் நிலையை கண்டு மனம் உடைந்துள்ளர். அவர் தங்கியுள்ள விடுதி மேலாளர்களை கியூ பிரிவு காவல் துறை மிரட்டி உள்ளனர். செந்தூரனின் சித்தப்பாவையும் மிரட்டி உள்ளனர்.[/size]

[size=4]எல்லா நிகழ்வுகளையும் கவனித்த செந்தூரனின் அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இறுதியில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் அத்தை நேற்று இறந்தே போனார்.[/size]

[size=4]அத்தையின் இறந்த உடலை பார்ப்பதற்கு இப்போது செந்தூரன் காவல்துறையிடம் அனுமதி வேண்டி உள்ளார்.[/size]

[size=4]ஒருவருக்கு இத்தனை சோகம் வரக் கூடாது. எவ்வகையிலும் ஆதரவற்ற இது போன்ற ஈழ ஏதிலிகளை சித்திரவதை செய்து இன்பம் காணுகிறது தமிழக அரசு மற்றும் காவல்துறை.[/size]

[size=4]எளியோரை மென்மேலும் துன்பப்படுத்தி பார்ப்பது தான் அரசு இயந்திரந்தின் செயலாக இப்போது மாறிவிட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை[/size].[/size]

http://www.puthinamnews.com/?p=34573

[size=6]“நிரந்தரத்தீர்வு ஏற்பட உதவுங்கள் உறவுகளே!”[/size]

[size=6]- செந்துாரன் நோ்காணல்[/size]

527070_294105790696673_1277770019_n.jpg

[size=2]

[size=4]''இறுதி யுத்தத்தின்போது தப்பிவந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் கடல்வழியாக வேறு நாடுகளுக்குத் தப்பிக்க முயற்சிக்கின்றார்கள் என்ற அடிப்படையிலும் தொடர்புபடுத்தப் படுகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஒருங்கிணைந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படுவார்கள் என்ற கற்பனையான வாதம் கியூ பிரிவினரால் முன் வைக்கப்படுகிறது. [/size][/size]

[size=2]

[size=4]இந்த இரண்டு சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளையே விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாகத் தடைசெய்வதற்கான காரணங்களாக ஆணையத்தின் முன் வைக்கிறார்கள். இந்தத் தடை நீட்டிப்பிற்காகவே தற்போதும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக சுழற்சி முறையில் இவ்வாறு வழக்குகள் போடப்படுவதும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. உண்மையான குற்றத்தின் அடிப்படையில் நாம் கைது செய்யப்படவில்லை... பலிக்கடாக்களாக்கப்பட்டுள்ளோம்''[/size][/size]

[size=2]

தமிழ்நாட்டின் பூந்தமல்லி எனும் இடத்திலுள்ள ஈழத்தமிழர்களை அடைத்துவைத்துள்ள மிகவும் கொடூரமான தடுப்புமுகாமில் செந்தூரன் என்ற இளைஞா் 06-08-2012 தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றார். உண்ணாநிலை 18 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. 20-08-2012 அன்று தொடக்கம் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார் செந்தூரன். இதற்கிடையே 22ஆம் தேதி செந்தூரனைப் பார்க்க இலங்கையிலிருந்து அவரது அத்தையுடன் வந்த சித்தப்பாவை கியூ பிராஞ்ச் காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். செந்தூரனது பட்டினிப்போராட்டத்தைக் கைவிடச்சொல்லி இவர்களைத் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர். ஏற்கனவே செந்தூரனது நிலையைப் பார்த்து மனம்நொந்திருந்த அத்தைக்கு முன் சித்தப்பாவையும் மிரட்டியதும், அத்தைக்கு மாரடைப்பு வலி வந்திருக்கிறது. சிகிச்சை ஏதும் பலனளிக்காமல் அவர் மருத்துவமனையில் காலமானார். அத்தையின் உடலைக்கூடப் பாா்க்க முடியாத கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடா்கிறது செந்துாரனது பட்டினிப்போராட்டம். தனது பட்டினிப் போராட்டம் குறித்து செந்தூரன் வழங்கிய நோ்காணல் இங்கே:[/size]

  • [size=4]தங்களது உண்ணாநிலையின் நோக்கம் என்ன? [/size]

[size=2]

[size=4]பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு பகுதிகளிலுள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்களில் உள்ள உறவுகள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. [/size][/size]

[size=2]

[size=4]523486_294105924029993_1663073666_a.jpg[/size][/size]

  • [size=4]தனி ஆளாக இதில் வெற்றி பெறமுடியும் என நினைக்கிறீர்களா?[/size]

[size=2]

[size=4]நிச்சயம் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். தனி ஆளாக உண்ணாநிலை இருந்து பலர் வெற்றி பெற்றிருப்பதை உலக வரலாறுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றது. மிக அண்மைக்காலத்தில் இஸ்ரேல் நாட்டில், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை காலவரையறையற்று அடைத்து வைத்திருப்பதுபோன்று அயல்நாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் 60 நாட்கள் உண்ணாநிலை இருந்து வெற்றிபெற்றிருக்கின்றார். இதன் மூலம் ஐ.நா நடுவர் மன்றமே தலையிட்டு அச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் விடிவு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]523432_294106047363314_446328379_a.jpg[/size][/size]

  • [size=4]திறந்தவெளி முகாமிற்கு மாற்றக் கோரும் கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். சிறப்பு முகாமிற்கும் திறந்தவெளி முகாமிற்கும் உள்ள வேறுபாடு என்ன? [/size]

[size=2]

[size=4]திறந்தவெளி முகாம்களில் இருந்தால் வேலைக்குச் சென்று குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தால் குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியாது. வேறு வித்தியாசங்களை உணரமுடியாது. இரண்டு முகாம்களும் ஒன்றுதான். கிளைச் சிறைகளுக்கு 'சிறப்பு முகாம்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நடைமுறைகள் சிறைகளைவிட மோசமாக உள்ளது. சிறைச்சாலைகள் சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கைதிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள். சிறப்பு முகாமில் கியூபிரிவினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. திறந்தவெளிமுகாம்கள், 10*5 கொண்ட சிறிய அறைகளைக் கொண்ட தொடர் வீடுகள். இதில் முழுக்குடும்பமும் வாழ வேண்டிய சூழல். இங்குள்ளவர்களுக்குத்தான் அயல்நாட்டவர் சட்டம் 3:2 பயன்படுத்தப்படுகிறது. [/size][/size]

  • [size=4]அது என்ன அயல்நாட்டவர் சட்ட நடைமுறை? [/size]

[size=2]

[size=4]வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக 1946ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட அயல்நாட்டவர் சட்டம் 3-2 1958ஆம் ஆண்டு இந்திய திருத்தச் சட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இச்சட்டம் வெளிநாட்டவர்கள் குடும்பங்களுடன், மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பின் கீழ் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது (இந்த நடைமுறைதான் திறந்தவெளி முகாம்களில் வசிப்பவர்களுக்கு உள்ளது). இச்சட்ட நடைமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஈழத்தமிழர்கள் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்படுகிறார்கள். இச்சட்டம் அரசின் (மாநில ஆளுநரின்) ஆளுகைக்குட்பட்டு இருப்பதால் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெறமுடியாத சூழலில் உள்ளோம். சுருக்கமாகச் சொன்னால், இச்சட்டம் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. மதிக்கப்படுவதுமில்லை. [/size][/size][size=2]

[size=4]196820_294106337363285_1826942703_a.jpg[/size][/size]

  • [size=4]இங்கு அடைக்கப்படுபவர்கள் எவ்வளவு நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள்? [/size]

[size=2]

[size=4]15 ஆண்டுகளில் விடுதலையானவர்களும் உள்ளனர். ஒரு வருடத்தில் விடுதலையானவர்களும் உள்ளனர். எண்பது சதவீதமானவர்கள் 3 தொடக்கம் 6 ஆண்டுகளில் விடுதலையானவர்களாக உள்ளனர். [/size][/size]

  • [size=4]இந்த சிறப்பு முகாம் நடைமுறை வேறு எந்த மாநிலத்திலாவது பின்பற்றப்படுகிறதா?[/size]

[size=2]

[size=4]தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் இவ்வாறான சிறப்பு முகாம்கள் இல்லை. குறிப்பாக எல்லா மாநிலங்களிலும் அகதிகளாக திபெத், மியன்மார், பங்களாதேஸ் போன்ற ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள், ஏதாவது குற்றச் சாட்டுக்களில் ஈடுபட்டால்கூட வெளிநாட்டவர் சட்டம் அவர்கள் மீது பயன்படுத்தப்படுவதில்லை. இந்நாடுகளைச் சேர்ந்த கொலை, கொள்ளைக் குற்றவாளிகள் கூட இந்திய திருத்தச் சட்டத்திற்குட்பட்டே தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றார்கள். ஈழ அகதிகள் மீது மட்டுமே அயல்நாட்டவர் சட்டத்தில் இல்லாத கடுமையான நடைமுறைகளுடன் கியூ பிரிவினரால் இச்சட்டம் பின்பற்றப்படுகின்றது. [/size][/size]

  • [size=4]உங்கள் மீது எவ்வாறான வழக்குகள் உள்ளன? எவ்வளவு காலமாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன? தற்போது எத்தனைபேர் எவ்வளவு காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்?[/size]

[size=2]

[size=4]பூந்தமல்லி சிறப்புமுகாமில் எட்டு பேரும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 38பேரும் அடைக்கப்பட்டுள்ளோம். ஐந்தரை ஆண்டுகள் வரை அடைக்கப்பட்டவர்களும் இங்கு உள்ளார்கள். நான் 14 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளேன். என் மீது ஆவணங்களின்றி கடல்வழியாகக் கேரளா வழியாக அவுத்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்டேன் என்று பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என்னைக் கைதுசெய்து காரணமின்றி செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்து ஆறு மாதங்களில் விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை இருந்தபோதே இந்த வழக்குப் போடப்பட்டு பின் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். அங்கு நீதிமன்றம் பிணைவழங்க மீண்டும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுப் பின்னர் பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளேன். இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகள் அனேகமானவை இவ்வாறு புனையப்பட்டவையே. நீதிமன்றங்கள் இவர்களது வழக்குகளிலிருந்து விடுவித்தாலும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட காலத்திற்கு எதுவித தீர்வும் கிடைப்பதில்லை. அதேபோன்று ஒரு சில வழக்குகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தால் சிறப்பு முகாம் காலத்தை தண்டனைக் காலமாகக் கருதமுடியாது என்று கியூ பிரிவினர் வாதாடி மீண்டும் எம்மை சிறைத்தண்டனையை அனுபவிக்க நிர்ப்பந்திக்கிறாா்கள். இவ்விடயம் மிகவும் கொடுமையானது. ஒரு குற்றத்திற்காக கியூ பிரிவினர் ஒரு தண்டனையும் நீதிமன்றம் ஒரு தண்டனையும் வழங்குவதால் ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனையை அனுபவிக்கும் கொடுமையைச் சந்திக்கிறார்கள். ஒரு சிலரின் வழக்குகளைத் தவிர ஏனையோரின் வழக்குகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே வருடக்கணக்காக உள்ளன. குற்றப்பத்திரிகைகள் வழங்கப்படுவதில்லை. கியூ பிரிவினர் போடுகின்ற வழக்குகளுக்கு நீதிமன்றம் விதிக்கக்கூடிய (குற்றம் உறுதி செய்தால்) அதிக பட்ச தண்டனை ஒரு வருட காலமாகவே கியூ பிரிவினரால் இழுத்தடிக்கப்படுவதால் பல வருடங்கள் தடுப்பு முகாம்களில் குடும்பத்தையும் பிரிந்து தண்டனை அனுபவிக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாக்கப்படுகின்றார்கள். இந்த சூழ்நிலைகளால் பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல குடும்பங்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சிங்களவர்கள் மேற்கொள்வதுபோன்று திட்டமிட்ட மறைமுக இன அழிப்பையே கியூ பிரிவினர் மேற்கொள்கின்றனர். இது மிகவும் வேதனையான விடயம். [/size][/size]

  • [size=4]நீதிமன்றம் செல்பவர்கள் சுயமாகச் சென்றுவர அனுமதிக்கப்படுவீர்களா? [/size]

[size=2]

[size=4]ஐந்து இரும்புக்கதவுகள் கொண்ட நுழைவாயில், தரைப்பகுதி கொங்கிறீட், மேல்பகுதி இரும்புக் கம்பி வலை, தனித்தனி சிறை அறை, உயர்ந்த பாதுகாப்பு கோபுரங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்பு என கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கும் சிறப்பு முகாமிலிருந்து சுயமாகக் சென்று வருவதற்கு எப்படி அனுமதிப்பார்கள்? ஆயுதம் தாங்கிய 25 காவலர்களின் மூன்று வாகனங்கள் பாதுகாப்பு என்ற ஒழுங்குடனேயே நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படுகிறோம். [/size][/size]

  • [size=4]இவ்வாறு நடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?[/size]

[size=2]

[size=4]தீவிரவாதிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கெதிராகச் செயற்படுபவர்களை கண்காணிப்பதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கியூ பிரிவிற்கு, அகதிகளாக வருகின்ற ஈழத்தமிழர்களின் முழு ஆளுகையையும் நிர்வகிக்கின்ற எழுதப்படாத அனுமதி, உரிமை வழங்கப்பட்டுள்ளமையே இவ்வாறான கொடுமைகளுக்கு முழுமையான காரணமாக உள்ளது. திபெத், மியன்மார், பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளைப் போன்று, ஈழத்தமிழர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் இந்திய திருத்தச் சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டால் இவ்வாறான கொடுமைகளைச் சந்திக்கவேண்டிய கொடுமை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படாது. [/size][/size]

  • [size=4]ஒரு மாநிலத்தின் புலனாய்வு அமைப்பான கியூ பிரிவினரைத் தனிமனிதனாக நீங்கள் எவ்வாறு குற்றம் சொல்லமுடியும்?[/size]

[size=2]

[size=4]தனிப்பட்ட முறையில் அவர்களைக் குற்றம் சாட்டவில்லை. அவர்களின் செயற்பாடுகளுக்குத் தடையாகவும் இருக்கவில்லை. ஆயினும் சட்ட அதிகார வரம்புகளை மீறி ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதையே சுட்டிக்காட்டுகிறோம்.[/size][/size]

[size=2]

[size=4]309247_294106474029938_1790064391_a.jpg[/size][/size]

  • [size=4]தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழும்போது உங்களைப்போன்ற ஒரு சிலரைமட்டும் காரணமின்றி ஏன் தடுத்துவைத்துள்ளார்கள்?[/size]

[size=2]

[size=4]தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக சுமார் 126 திறந்தவெளி முகாம்கள் உள்ளன. ஒவ்வொரு திறந்தவெளி முகாம்களிலும் எவ்வாறான அடக்குமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளன என்பதை முகாம்களில் உள்ளவர்களிடம் நீங்களே நேரில் கேட்டு தெரிந்துகொண்டால் இவ்வாறானதொரு கேள்வியைக் கேட்கமாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். திறந்தவெளி முகாம்களில் எந்தளவிற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டிருப்பீர்கள். அடுத்ததாக, நீங்கள் கேட்டுள்ள சந்தேகத்தையே நான் இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பொறுப்பதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாகக் கேட்டபோது,“காரணம் கூற முடியாது சிறப்புமுகாமில் தடுத்துவைக்க வேண்டுமென்பது அரச உத்தரவு” என்று பதில் தருகின்றார்கள். தனிமனித உரிமை பறிக்கப்பட்டு காரணமே சொல்லமுடியாமல் அடைத்துவைக்கின்ற கொடுமையை மனித உரிமையை மதிக்கும் எந்த நாடுகளிலும் காண முடியாது. எதுவித காரணமும் கூறப்படாமல் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்படுகின்ற கொடுமையும் நீதிமன்றங்கள் குற்றவாளி இல்லையென தீர்ப்பு வழங்கிய பின்னரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்படுகின்ற கொடுமையும் இங்குதான் நடைமுறையில் உள்ளது. எம்மைப் பிடித்து அடைத்துள்ள அதிகாரிகளுக்கே என்ன காரணத்துக்காக வைத்துள்ளோம் என்பது தெரியாதபோது நமக்கு எப்படி புரியும்? இங்கு, மிக முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். சிறப்பு முகாம்களில், - ஈழத்தில் யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது எமது தமிழ் உறவுகளின் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காக கடல்வழியாக மருத்துவப் பொருட்களை ஈழத்திற்குக் கொண்டுசெல்ல முற்பட்ட குற்றச்சாட்டுகளில் கைதானவர்களும், ஆவணங்களின்றி கடல்வழியாக அவுத்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு முற்பட்ட குற்றச்சாட்டுக்களில் கைதானவர்களும், காரணம் எதுவும் தெரியாமல், வழக்குகள் எதுவும் இன்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைதானவர்களும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கள் இந்திய தண்டனை சட்டத்தின்படி சட்டவிரோத பிரிவிக்குட்பட்டதாக உள்ளது. இதனால் இந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்கள் இந்தியாவில் சட்டவிரோத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புடன் கியூ பிரிவு பொலிசாரால் தொடர்புபடுத்தப்படுகிறார்கள். மருத்துவப் பொருட்கள் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் அவுத்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்வதற்கு முற்பட்டவர்கள், இறுதியுத்தத்தின்போது தப்பிவந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் கடல்வழியாக வேறு நாடுகளுக்குத் தப்பிக்க முயற்சிக்கின்றார்கள் என்ற அடிப்படையிலும் தொடர்புபடுத்தப்படுகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஒருங்கிணைந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயற்படுவார்கள் என்ற கற்பனையான வாதம் கியூ பிரிவினரால் முன் வைக்கப்படுகிறது. இந்த இரண்டு சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளையே விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாகத் தடைசெய்வதற்கான காரணங்களாக ஆணையத்தின் முன் வைக்கிறார்கள். இந்தத் தடை நீட்டிப்பிற்காகவே தற்போதும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக சுழற்சி முறையில் இவ்வாறு வழக்குகள் போடப்படுவதும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் நடத்தப்படுகின்றன. உண்மையான குற்றத்தின் அடிப்படையில் நாம் கைது செய்யப்படவில்லை, பலிக்கடாக்களாக்கப்பட்டுள்ளோம் என்பதை புரிந்து கொள்வதற்காகவே இந்த வினாவிற்கு விளக்கமாகப் பதில் அளித்துள்ளோம். [/size][/size][size=2]

[size=4]531075_294106920696560_920022538_a.jpg[/size][/size]

  • [size=4]இவ்வதை முகாம்களில் கொடுமைகளுக்கு உள்ளாவதாகக் கூறுகிறீர்கள், குற்றம் சாட்டுகிறீர்கள். தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களிடம் விடுதலைக்கான உதவி மற்றும் சட்ட உதவிகளைப் பெறுவதற்கு முயற்சிக்கவில்லையா? [/size]

[size=2]

[size=4]முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் போராட்டங்கள் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றுள்ளார்கள். பல்வேறு வழிகளிலும் அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் பயனாகப் பலர் சிறப்பு முகாம்களிலிருந்து விடுதலைசெய்யப்பட்டும் உள்ளார்கள். இதற்காக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். தொடர்ந்தும் இவர்களின் உதவிகளை எதிர்பார்த்துள்ளோம். தொடர் அழுத்தம் நியாயத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டங்கள் என்ற வகையில் உதவிகளைச் செய்தாலும் ஈழ ஆதரவுத் தலைவர்கள் சட்ட உதவிகளைச் செய்வதற்கு முன்வரவில்லை என்பது வருத்தமான விடயம். [/size][/size]

  • [size=4]ஈழத்தமிழர்கள் தொடர்ந்து சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கருதுகிறீர்கள்? [/size]

[size=2]

[size=4]திபெத், மியன்மார், பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள், அகதிகள் போன்று நடத்தப்படுகின்றார்கள். ஆயினும் ஈழத்தமிழர்கள் மட்டும் அகதிகளாக பார்க்கப்படாமல் குற்றம் செய்த அயல்நாட்டவர்கள் என்ற பார்வையிலேயே பார்க்கப்படுகிறார்கள். ஈழத்தமிழர்கள் மீது அயல்நாட்டார் சட்டம் திணிக்கப்படாமல் இருந்தாலே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் இந்த வகைமுகாம்களில் படும் வதைக்குத் தீர்வு கிடைத்துவிடும். [/size][/size]

  • [size=4] இறுதியாக என்ன கூற விரும்புகிறீர்கள்? [/size]

[size=2]

[size=4]தொடர்ந்து எமது துயரங்களை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கும், உணர்வாளர்களுக்கும், புலம்பெயர் ஈழ உறவுகளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு தொடர்ந்து எமக்காகக் குரல்கொடுத்து சிறப்பு முகாம் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட உதவிடுமாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து உறவுகள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன். தீர்வுகிடைக்கும்வரை உண்ணாநிலை, பட்டினிப்போராட்டம் தொடரும். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளைக் காரனின் கொலை வாளைப் போன்றதே இந்தியத்தின் ஆட்சி அதன் மக்களுக்கு!

இதுவா மனிதாபிமானத்தை கண்ணெடுக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.