Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேடமிழுத்தபடி கிடக்கும் சிங்களத்தின் போர்ப் பிரபு

Featured Replies

கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா.

பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார்.

"விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு

"விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும்

"அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்யாமைதான் இதுவரை விடுதலைப் புலிகளை வெல்லமுடியாமைக்குக் காரணம்" என்றும் பதிலளித்திருந்தார்.

கடமையைச் சரிவரச் செய்யும் தளபதியாகத் தானிருக்கும்போது, தனது நம்பிக்கைக்குரிய கடமை தவறா வீரர்கள் தன்னைச் சூழ நியமிக்கப்பட்ட பின்பு, தனது தலைமையகத்திலே நடந்த ஒரு குண்டு வெடிப்பிற்குப் புலிகளைக் காரணமாகத் தமது இராணுவப்பேச்சாளர் சொல்லிக்கொண்டிருப்பதைப் பொன்சேகா அறிவாரேயானால் அந்த அதிர்ச்சியே அவரது உயிரை வாங்கிவிடும்.

சரத்பொன்சேகா யாழ் மாவட்டக் கட்டளை அதிகாரியாக இருந்தவேளையில்தான் ரணில் அரசுடன் விடுதலைப் புலிகள் பறந்து பறந்து பேச்சுநடத்திக் கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் சொன்னபடி உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவது குறித்துப் புலிகள் வலியுறுத்தியபோது, 'அவ்வாறு விலக்குவது இராணுவத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து' என்று கூறி மறுத்துப் பேச்சுகள் முறிந்து போக அத்திவாரமிட்டார் பொன்சேகா.

இறுதியில் அந்தப் பாதுகாப்பு வலயங்களுக்கெல்லாம் தாய் வலயமான இராணுவத் தலைமையகத்திலே தனது சொந்தப் பாதுகாப்பைக் கூட அவரால் உறுதிசெய்யமுடியாமல் போனது விந்தையன்றோ!

சரி இனி விடயத்திற்கு வருவோம்.

சிறிலங்காவில் இருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் அவர் இன்னமும் செயற்கைச் சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசிப்பதாக எழுத, வேறு சில பத்திரிகைகள் 'அவர் சில சொற்களைக் கதைத்தார். குண்டு வெடித்ததை நினைவு கூர்ந்தார்' என்று கதை விடுகின்றன.

இன்னும் எந்தப் பத்திரிகையும் 'அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தபடி இராணுவத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்' என்று எழுதாமல் இருப்பது மக்கள் செய்த புண்ணியம்!

சிங்களத்தின் சாதாரண படைவீரனுக்கு ஆதர்ச புருசனாகவும் சிங்கள தேசத்தின் யுத்தப் பிரபுவாகவும் திகழ்ந்த சரத் பொன்சேகாவின் இன்றைய நிலை என்ன? அவரது எதிர்காலம் என்ன??

இது சிறிலங்காவில் இருப்பவர்களது மனத்திலே ஏன் உலகம் முழுவதிலும் இருந்து சிறிலங்காவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரது மனதிலும் எழும் கேள்வி.

இன்றைய நிலைவரப்படி சிறிலங்காவின் இராணுவத்தளபதி இன்னமும் உயிருக்குப் போராடியபடி செயற்கைச்சுவாச இயந்திரத்தின் உதவியுடன்தான் மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறார்.

'எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்' என்ற அபிப்பிராயம்தான் மருத்துவ வட்டாரத்தில் நிலவுகிறது.

இந்த நிலையில் பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கணத்தில் இருந்து தற்போதைய நிமிடம்வரையிலான அவரது நிலை குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வைத்தியசாலையில் அனுமதி

குண்டு வெடிப்பிலே படுகாயமடைந்த பொன்சேகாவின் உடலிலே குண்டுச் சிதறல்கள் சல்லடையிட்டிருந்தன.

அதனால் அவரது உடலை உடனடியாக எக்ஸ் கதிர் (X-Ray) மூலமும், கணனிக் குறுக்குவெட்டு முறை (CT Scan) மூலமும் படம்பிடித்து எங்கெங்கே சிதறுதுண்டுகள் தைத்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவற்றை அகற்றும் சத்திர சிகிச்சையைத் தொடங்கினார்கள்.

அது ஒரு மிகச் சிக்கலான சத்திரசிகிச்சை.

பொன்சேகாவின் உடலில் பிரதானமாக இடது வயிற்றுப்புறமும், இடது மார்புப் புறமும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன.

இடது சிறுநீரகம் (Left Kidney), சதையியின் உடல் மற்றும் வால் பகுதி (Body and Tail of the Pancreas), இறங்கு பெருங்குடல் (Descending colon) மற்றும் இடது நுரையீரலின் கீழ்ப்பகுதி (Left lower lobe of the Lung) ஆகியவற்றில்தான் அனேக குண்டுச் சிதறல்கள் புதைந்துகிடந்தன.

குண்டுச் சிதறலினால் உடம்பில் ஏற்பட்ட சல்லடைக்கண்களுடாக இரத்தம் கசிந்தபடி இருக்க மறுபுறத்தே நாளங்கள் ஊடாக இரத்தம் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் வயிற்றறைக்குழியும் (Thoracic Cavity), நெஞ்சுக்குழியும் (Abdominal Cavity) வெட்டித் திறக்கப்பட்டு குண்டுச் சிதறல்கள் அகற்றப்படவும், அளவுக்கு மீறிச் சிதைந்த உள் உடல்பாகங்கள் அகற்றப்படவும் வேண்டும். அத்தோடு வயிற்றறைக் குழி மற்றும் நெஞ்சறைக்குழியினுள் நிறைந்திருக்கும் குருதியையும் பிற உடற்திரவங்களையும் (Body fluids) அகற்றவேண்டும்.

இதன்போது மேலும் குருதி இழப்பு ஏற்படும்.

அதீத குருதி இழப்புக்காரணமாக நோயாளியின் இதயம், மூளை போன்ற பிரதான அங்கங்கள் செயலிழக்கும் அபாயம் மிக அதிகம். இதனைத் தவிர்ப்பதற்கு மிக அதிகளவில் குருதி ஏற்றப்பட வேண்டும் (Massive blood Transfusion). இதனால் வேறு பல பாதிப்புகள் ஏற்படும்.

இத்தனை ஆபத்துகளுக்கும் மத்தியில்தான் மருத்துவர் குழு தமது பணியினை ஆரம்பித்தது.

சத்திரசிகிச்சையின் ஒரு கட்டத்திலே பொன்சேகாவின் இதயம் செயலிழக்கத் (Cardiac failure) தொடங்கியது. உடனடியாக அதைத் தடுப்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வைத்தியர்கள் தமது சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தார்கள்.

இடது சிறுநீரகம் படுமோசமாகச் சிதைந்துபோயிருந்தது. சதையியின் வால் மற்றும் உடற்பகுதியும் மறுசீரமைக்க முடியாதளவு சேதமடைந்து காணப்பட்டன. எனவே அவை அகற்றப்பட்டன.

குடல் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட சேதமும் மறுசீரமைக்கப்பட்டது. ஒருவாறு ஏறத்தாள நான்கு மணிநேரப் போராட்டத்தின் பின் இயலுமான வரைக்கும் 'கிழிந்த சேலையைத் தைத்துப்போடுவது' போலச் சிதைந்த உடற்பாகங்கள் சீரமைக்கப்பட்டன.

இன்னும் சில குண்டுச்சிதறல்கள் ஆங்காங்கே புதைந்திருப்பினும் தற்போதைக்கு இவ்வளவும் போதும். நோயாளி சற்றுக் குணமடைந்ததும் மீண்டும் ஒருதடவை சத்திரசிகிச்சைக்குட்படுத்த

"விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும்

ஒரு நாட்டின் இராணுவ தளபதி - சொல்வதுதான் - அந்த நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் - 100% உண்மை!

பலவீனமான புலிகள் இதை செய்யவே முடியாது!

இந்த விடயத்தில் - புலிகளை இழுத்து பேசுறது - நேர விரயம் என்பது............

எமது இலங்கை திருநாட்டின் தளபதி - கருத்து -! அதுவே -எனதும்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தளபதி அதை உள்வீட்டுப் பிரச்சனையாகத் தான் நினைப்பார். இதைப் புலிகள் தாக்குதலாக நினைக்கப் பொவதில்லை. ஏனென்றால் பல பழைய தலைகளை நீக்கி விட்டு, புதுத் தலைகளை நியமித்து இருக்கின்றாரே!

மேலும் திருமகளின் கட்டுரைகளை மீண்டும் இணைக்கும் மோகன் அண்ணாவிற்கு நன்றிகள். கிளிநொச்சியில் வாழ்ந்தாலும், அவரின் எழுத்துக்கள் யாழில் உலா வரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொஞ்சுக்க'விற்கு தற்போது தான் சித்திரவதை செய்த உயிர்களினதும் தனது படைகளால் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களினதும் அவலக்குரல்கள் நிச்சயமாக எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

திருமகளின் இந்த ஆக்கத்தை மகிந்த பார்த்தால் நிச்சயம் கிலி கொள்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.