Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் தாக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் மேலதிக சிகிச்சைக்கா கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றம்!

Featured Replies

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு திடீரென மாற்றப்பட்டார்.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக காலி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சதீஸ் வழக்குத் தவணையின் பின்னர் சுயநினைவற்ற நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் 50 ஆவது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசியல் கைதியான சதீஸின் மனைவி தனது கணவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் மனோ கணேசன் நடத்திய பேச்சின் அடிப்படையில் சதீஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை கொழும்புக்கு மாற்றப்பட்ட தழிழ் அரசியல் கைதியை மனோ கணேசன் குழுவினர் மற்றும் நாடாளுமுன்ற உறுப்பினரான ஜயலத் ஜெயவர்த்தன ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது அரசியல் கைதியான சதீஸின் தலையில் கட்டுப் போடப்பட்டுள்ளதுடன் கண் விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணக்கூடிய நிலையில் அவர் இல்லை எனவும் அவரது கால்களில் சங்கலிப் பூட்டுப் போடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

இதன்போது கடமையில் இருந்த வைத்தியர் ஒருவரிடம் சதீஸின் நிலைமை குறித்துக் கேட்டபோது தலையில் கடுமையாக அடி பட்டுள்ளது. மூளையில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளை தொழிற்பாடு குன்றியுள்ளது எனத் தெரிவித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi24.com

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ தாங்கோ தாங்கோ எண்டா வரமாட்டியல் தரமாட்டியல் திரி மட்டும் திறவுங்கோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.