Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிக்குளத்தில் வாழும் மீனவக் குடும்பங்களின் கண்ணீர்க் கதையை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளார் பிபிசி செய்தியாளர் மாணிக்கவாசகர் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]Mullikulam_idp_srilanka_150news.jpg[/size]

[size=4]பிபிசி வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகர் முள்ளிக்குளத்தில் வாழும் மீனவக் குடும்பங்களைச் செவ்விகண்டு அவர்களது கண்ணீர் கதையை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தச் செவ்வியை பிபிசி தமிழோசை தனது செப்தெம்பர் மாதம் 2 ஆம் நாள் ஒலிபரப்பில் ஒலிபரப்பியது. அதன் வரிவடிவத்தையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]அதில் "நாங்கள் மீன் பிடிப்பதென்றால் கடற்படையிடம் பாஸ் எடுக்க வேண்டும். அதுவும் ஒரு மணித்தியாலமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது" என்று ஒரு மீனவர் சொன்ன செய்தி வெளியிடப்படவில்லை..[/size]

[size=4]மீன்பிடித் தடைக்கு வி.புலிகள் இப்போதும் இருக்கிறார்கள் என்ற பயம் காரணமா?[/size]

[size=4]மகிந்த இராசபக்சே அரசு இலங்கையின் இறுதிப் போரின் போது உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் பேரையும் மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.[/size]

[size=4]ஆனால் இது நடைபெறப் போவதில்லை. முள்ளிக்குளம் போலவே தமிழ்மக்களது காணி பூமிகளை சிங்கள இராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்துள்ளது. அதில் பாரிய இராணுவ முகாம்கள், குடியிருப்புக்கள் உல்லாச விடுதிகள், நட்சத்திர உணவகங்கள் போன்றவற்றை இராணுவம் நிறுவியுள்ளது. அதற்கு மேலாக அந்தக் காணிகளில் இராணுவமும் கடற்படையும் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்கின்றன.[/size]

[size=4]இராணுவம் தனியார் காணிகளை அடாத்தாகப் பறித்து அதில் பவுத்த விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவி வருகிறது. ஒரு நாட்டின் �தேசிய� இராணுவம் இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களது வழிபாட்டுத் தலங்களை நிருமாணிப்பது சிறீலங்காவில் மட்டுமே இடம்பெறுகிறது. இதில் வேதனை என்னவென்றால் இந்த இடங்களில் புத்தரை வழிபடுவதற்குப் பவுத்தர்கள் இல்லை. இவை பெரும்பாலும் சைவ சமயத்தைச் சார்ந்த மக்கள் வாழும் தமிழ்க் கிராமங்கள். எனவே இது சிங்கள � பவுத்த அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட கலாசாரப் படுகொலை (Cultural Genocide) யாகும். இன்று வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் கோரப்பிடியில் உள்ளன. அங்கு சிவில் நிருவாகம் முடக்கப்பட்டு அப்பட்டமான இராணுவ ஆட்சியே நடக்கிறது. வடக்கு கிழக்கு ஆளுநர்கள் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரிகள். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை, அம்பாறை, மன்னார், வவுனியா மாவட்டங்களில் சிங்களவர்களே அரசாங்க அதிபர்களாக அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 6 குடிமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விழுக்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.[/size]

[size=4]இவற்றைப் பார்க்கும் போது இராசபக்சேயின் அரசின் நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதாக அமைந்திருக்கிறதா?[/size]

[size=4]பூனைக்கு விளையாட்டு எலிக்கு உயிர் போகுது என்பது போல போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்கும் மகிந்த இராசபக்சே அரசுக்கு தமிழர்களது அவலம் விளையாட்டாக இருக்கிறது.[/size]

[size=4]இவையாவும் இலங்கையில் தமிழ்மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு தக்க சான்றாக இருக்கின்றன.[/size]

[size=4]தமிழ்மக்களை ஒத்துரிமையோடு வாழப் பெரும்பான்மை சிங்களவர்கள் அனுமதிக்காத காரணத்தினால்தான் தமிழ் நாட்டுக்கு செல்லும் சிங்களவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுகிறது. அதன் மூலம் சிறீலங்காவின் பாசீச ஆட்சியின் அலங்கோலத்தை பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வாய்ப்பும் ஏற்படுகிறது.[/size]

[size=4]நக்கீரன்.(கனடா)[/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120902_mullikulamlandgrab.shtml[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.