Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் - இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்: மனோ கணேசன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Manoganesan_150H.jpg

[size=4]கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.[/size]

[size=4]இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size]

[size=4]இந்தியாவிற்கு புனிதயாத்திரை சென்று இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள் மத்தியில், இலங்கை சிங்கள பிரஜைகளுடன், தமிழ் பிரஜைகளும் இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.[/size]

[size=4]இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால், இலங்கை தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் வன்முறையாளர்களின் இந்நடவடிக்கைகள், இந்நாட்டில் இருக்கின்ற தீவிரவாத இனவாத வன்முறை முட்டாள்களுக்குத்தான் உதவுகின்றன.[/size]

[size=4]அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அப்பாவி வேடம் புனைந்து, தீக்கோழியைப்போல் மண்ணில் தலையை புதைத்துக்கொள்ளவும் முடியாது. எமது நாட்டு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக எமது தேசிய இனப்பிரச்சினைக்கு எமது நாட்டுக்குள் நியாமான தீர்வு காணப்படாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.[/size]

[size=4]எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை நீண்ட நாட்களுக்கு முன்னமே கடந்து சென்றுவிட்டன என்ற வெட்கங்கெட்ட யதார்த்தத்தை நமது அரசாங்கம் இனியாவது உணர வேண்டும்.[/size]

[size=4]இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உலகின் பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டவை. ஆனால் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையும், மனிதர்கள் மீதும், சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளாக மாற முடியாது.[/size]

[size=4]எனவே இலங்கையிலிருந்து தமிழகம் செல்லும் சாதாரண மக்கள் மீதான தாக்குதல் எத்தனங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக கட்சிகளும், அமைப்புகளும் தங்களது எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசு இயந்திரங்களுக்கு எதிராக முன்னெடுக்கவேண்டும் எனவும், சாதாரண மக்களை விட்டு வைக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.[/size]

[size=4]எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை கடந்து சென்றுவிட்டன என்பது கண் முன்னே தெரியும் உண்மை. இன்று கூச்சல் இடும் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களும் அவரது தீவிரவாத இனவாத சகபாடிகளும்தான், நமது நாட்டு பிரச்சினைகள் கரைகடந்த விவாதங்களுக்கும், போராட்டங்களுக்கும் உள்ளாக்கப்படுவதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.[/size]

[size=4]இன்று, இலங்கையில் இந்திய பிரஜைகளுக்கு எதிராக வன்முறை நடந்தால் என்னாவது என கூச்சலிடும் இவர்கள் ஒன்றும் உத்தமர்களும் அல்ல. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காமல் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து கதிர்காமத்துக்கு புனிதயாத்திரை சென்ற இந்திய பிரஜை ஒருவர், தென்னிலங்கையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதேபோல் இந்தியாவின் பிரபல நடிகர் ஷாருக்கான், இலங்கை வந்து அவரது நிகழ்வில் கைக்குண்டு வீசப்பட்டபோது 'தப்பினோம், பிழைத்தோம்' என்று தனது நாட்டுக்கு ஓடியே போனார்.[/size]

[size=4]இன்று நாம் இந்த கறுப்பு வன்முறை வரலாற்றை கடந்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். எனவே இந்தியாவில் செயற்படும் இந்த தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படியும், புனித யாத்திரை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தமிழகம் வரும் சாதாரண இலங்கை பிரஜைகளுக்கு எதிரான போக்கை கைவிட அவர்களை வலியுறுத்தும்படியும் இந்திய அரசை நாம் கோருகிறோம்.[/size]

[size=4]நமது இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு முறைப்படி தெரிவிக்கும்படி இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்தா அவர்களையும் கோருகிறோம்.[/size]

[size=4]அதேபோல் நமது உள்நாட்டு விவகாரம் வெளிநாட்டு விவகாரமாக மாறிவரும் சூழலை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னெடுப்பதின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரும்படி இலங்கை அரசையும் நாம் வலியுறுத்தி கோருகிறோம்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=5]தமிழகத்தில் இடம்பெற்ற இலங்கையர் மீதான தாக்குதல்;தமிழ் கட்சித் தலைவர்கள் கண்டனம்[/size]

[size=2]

thiru(1).jpg[/size][size=2]

[size=4]தமிழ் நாட்டில் வைத்து இலங்கை யார்த்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ் கட்சித் தலவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தியாவிற்கு புனிதயாத்திரை சென்று இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள் மத்தியில், இலங்கை சிங்கள பிரஜைகளுடன், தமிழ் பிரஜைகளும் இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால், இலங்கை தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் வன்முறையாளர்களின் இந்நடவடிக்கைகள், இந்நாட்டில் இருக்கின்ற தீவிரவாத இனவாத வன்முறை முட்டாள்களுக்குத்தான் உதவுகின்றன.

அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அப்பாவி வேடம் புனைந்து, தீக்கோழியைப்போல் மண்ணில் தலையை புதைத்துக்கொள்ளவும் முடியாது. எமது நாட்டு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக எமது தேசிய இனப்பிரச்சினைக்கு எமது நாட்டுக்குள் நியாமான தீர்வு காணப்படாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை நீண்ட நாட்களுக்கு முன்னமே கடந்து சென்றுவிட்டன என்ற வெட்கங்கெட்ட யதார்த்தத்தை நமது அரசாங்கம் இனியாவது உணர வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உலகின் பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டவை. ஆனால் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையும், மனிதர்கள் மீதும், சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளாக மாற முடியாது.

எனவே இலங்கையிலிருந்து தமிழகம் செல்லும் சாதாரண மக்கள் மீதான தாக்குதல் எத்தனங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக கட்சிகளும், அமைப்புகளும் தங்களது எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசு இயந்திரங்களுக்கு எதிராக முன்னெடுக்கவேண்டும் எனவும், சாதாரண மக்களை விட்டு வைக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.

எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை கடந்து சென்றுவிட்டன என்பது கண் முன்னே தெரியும் உண்மை. இன்று கூச்சல் இடும் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களும் அவரது தீவிரவாத இனவாத சகபாடிகளும்தான், நமது நாட்டு பிரச்சினைகள் கரைகடந்த விவாதங்களுக்கும், போராட்டங்களுக்கும் உள்ளாக்கப்படுவதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.

இன்று, இலங்கையில் இந்திய பிரஜைகளுக்கு எதிராக வன்முறை நடந்தால் என்னாவது என கூச்சலிடும் இவர்கள் ஒன்றும் உத்தமர்களும் அல்ல. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காமல் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து கதிர்காமத்துக்கு புனிதயாத்திரை சென்ற இந்திய பிரஜை ஒருவர், தென்னிலங்கையில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதேபோல் இந்தியாவின் பிரபல நடிகர் ஷாருக்கான், இலங்கை வந்து அவரது நிகழ்வில் கைக்குண்டு வீசப்பட்டபோது 'தப்பினோம், பிழைத்தோம்' என்று தனது நாட்டுக்கு ஓடியே போனார்.

இன்று நாம் இந்த கறுப்பு வன்முறை வரலாற்றை கடந்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். எனவே இந்தியாவில் செயற்படும் இந்த தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படியும், புனித யாத்திரை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தமிழகம் வரும் சாதாரண இலங்கை பிரஜைகளுக்கு எதிரான போக்கை கைவிட அவர்களை வலியுறுத்தும்படியும் இந்திய அரசை நாம் கோருகிறோம்.

நமது இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு முறைப்படி தெரிவிக்கும்படி இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்தா அவர்களையும் கோருகிறோம். அதேபோல் நமது உள்நாட்டு விவகாரம் வெளிநாட்டு விவகாரமாக மாறிவரும் சூழலை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னேடுப்பதின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரும்படி இலங்கை அரசையும் நாம் வலியுறுத்தி கோருகிறோம்.' என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனின் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யும் இலங்கையருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும் எதிர்ப்பும் ஒரு போதும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத்தரப் போவதில்லை. மாறாக தென்னிலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.

இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு இலங்கையிலுள்ள களநிலவரங்கள் சரியாக தெரிவதில்லை. தென்னிலங்கையில் சிங்களவர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் 16 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் இருக்கிறார்களா என்பது கூட இவர்கள் தெரிந்திருக்கவில்லை. இலங்கையிலுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்குள்ள அக்கறையை நாம் பாராட்டுகின்றோம் மதிக்கின்றோம். அதே சமயம் அவர்களது அதிகபட்சமான நடவடிக்கைகளின் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவடைந்த இறுதி கட்டத்திலும் சரி எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இன்று தமது அரசியல் இலாபங்களுக்காக இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மீது காட்டும் எதிர்ப்பு வேடிக்கையாக உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்குமுள்;ள கலாச்சார உறவுகள் பற்றிய சிந்தனை இவர்களுக்கு இல்லை.

ஸ்ரீமா சாஸ்திர ஒப்பந்தத்தின் மூலம் நாடு கடத்தப்பட்ட ஐந்து இலட்சம் இலங்கையர்களின் சொந்தபந்தங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவிற்கு சென்று வருவதற்கான அடித்தள காரணம் இதுவேயாகும்.

சிங்கள மக்களுக்கு எதிரான போக்கு என்ற போர்வையில் இறுதியில் பாதிப்புக்குள்ளாவது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களே. அது மட்டுமின்றி யுத்த காலத்தில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த வடகிழக்கு மக்களும் இன்று நிரந்தரமாக இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கடுமையான இப்போக்கு காரணமாக பாதிக்கப்படுவது இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களேயாவார்கள்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் இந்திய அரசாங்கத்தின் அசமந்த போக்கு இலங்கை தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள நம்பிக்கையை குறைவடைய வைத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது இனப்பிரச்சினை தீர்விற்காக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு அழுத்தத்தை உருவாக்குமேயானால் அது வரவேற்கத்தக்கதாகும். அதை விடுத்து இந்தியாவிற்கு வரும் இலங்கையர்கள் மீது அடாவடித்தனமான தாக்குதல் நடத்துவது முறையற்றது. அதிலும் குறிப்பாக அண்மைக்கால சம்பவங்கள் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடனேயே தமிழ் நாட்டு அரசு செயல்பட்டு வருவதைப்போன்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகின்றது.

இன்று தென் இலங்கையில் ஐக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகங்கள் மத்தியில் இனக்குரோதத்தை உருவாக்க கூடிய சூழ்நிலையையே உருவாக்கப்படுகின்றது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் சம்பந்தமான தெளிவான போக்கை கொண்டிருக்கும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் இவ்விடயத்தில் மும்முரமாக கவனம் செலுத்த வேண்டும். இதுவே இன்றைய இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது' என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size][/size][size=2]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48026-2012-09-05-07-03-51.html[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.