Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைப்பு 2 புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டனரானரா என போலந்து அரசாங்கம், கோதபாயவிடம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]gottabya_CI.jpg

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டனரான என போலந்து அரசாங்கம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.[/size]

[size=4]தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் சிகோர்ஸ்கீ இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.[/size]

[size=4]போலந்து அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்ட தலைவர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size]

[size=4]உத்தியோகப் பற்றற்ற ரீதியில் போலந்து ஜனாதிபதி கொமரோஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் சந்தித்துள்ளார்.[/size]

[size=4]பாதுகாப்பு கண்காட்சியொன்றில் கலந்து கொண்ட முக்கிய இராஜதந்திரிகளுக்கு போலந்து அரசாங்கம் அளித்த விருந்துபசாரத்தின் போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.[/size]

[size=4]'இலங்கையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டு விட்டனரா' என பாதுகாப்புச் செயலாளரிடம், போலந்து வெளிவிவகார அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.[/size]

[size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் இதன் போது சுருக்கமாக போலந்து வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.[/size]

[size=4]இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]கோத்தபாய ராஜபக்ஷ போலந்துக்கு விஜயம்[/size]

[size=4]போலந்து நாட்டின் 'கீல்ஸ் பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போலந்துக்கு விஜயம் செய்துள்ளார்.[/size]

[size=4]இம் முக்கியமான மாநாட்டில் பங்கேற்பதற்கென உலக நாடுகளில் இருந்து பல முக்கிய இராஜதந்திரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இராணுவத்தினரின் தேவைகள் மற்றும் வரவு செலவு திட்டத்தின் குறைப்பின் போது பாதுகாப்புத்துறையின் நிலை' என்ற தலைப்பில் இக்கருத்துரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யூரோ-அட்லான்டிக் சங்கம் இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]இந்த கருத்தரங்கின்போது உயர்மட்ட அதிகாரிகளையும், இராணுவத் தலைவர்களையும் பாதுகாப்புச் செயலாளர் சந்தித்து கலந்துரையாடினார்.[/size]

[size=4]இப் பாதுகாப்புக் கருத்தரங்கானது, போலந்து நாட்டின் 20ஆவது சர்வதேச பாதுகாப்புத்துறை கண்காட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியானது மத்திய ஐரோப்பாவின் பிரதான கண்காட்சியாக கணிக்கப்படுகின்றது.[/size]

[size=4]இந்நிகழ்வில் போலந்து நாட்டின் ஜனாதிபதி பொரின்ஸ்லோ கொமொரவ்ஸ்லி, பாதுகாப்பு அமைச்சர் டொமாஸ் சைமொனிக் மற்றும் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். மேலும் இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உஸ்பகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர். [/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.