Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் வதியும் ஈழத்தமிழ் அகதிகளின் தாயகம் திரும்பும் ஆர்வம் குறைந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri%20Lankan%20refugees%20in%20India.jpg

[size=4]பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்கின்ற அச்சம் காரணமாக இந்தியாவிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள், தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறு ஐநாவின் மனிதநேய விவகாரங்களை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் 1983-2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்கின்ற அச்சம் காரணமாக தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், இவர்களுள் இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் 112 முகாங்களில் வாழும் 68,000 மக்கள் உள்ளடங்குவதாகவும் ஏனையோர் முகாங்களுக்கு வெளியில் வாழ்வதாகவும் இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இங்கிருந்து சிறிலங்காவிற்குச் சென்ற எனது உறவினர்கள் அங்கு வரவேண்டாம் எனக் கூறுகிறார்கள். சிறிலங்காவில் தொழில் வாய்ப்புக்களைப் பெறமுடியாது. அத்துடன் வாழ்க்கைச் செலவும் மிக உயர்வாகக் காணப்படுகின்றது" என தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கும்மிபூண்டி என்ற இடத்தில் வாழும் ஈழத் தமிழரான 46 வயதுடைய சிவபாலன் பழனியாண்டி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வடக்கில் தொடரப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் போது காணாமற் போனோர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது இன்னமும் பொறுப்பளிக்காமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டும் சில ஈழத் தமிழ் அகதிகள் இவ்வாறான காரணங்களைக் கருத்திற் கொண்டு தாம் மீண்டும் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை எனக் கூறுகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் வற்புறுத்தலின் பேரில் 2008-2009 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்த நடவடிக்கையின் போது காணாமற் போனோர் நீங்கலாக, அதற்கு முன்னைய யுத்த நடவடிக்கைகளில் காணாமற் போன 5000 வரையானவர்களின் பதிவுகளை ‘வற்புறுத்தலின் பேரில் அல்லது தன்னிச்சையாக காணாமற் போனவர்கள் தொடர்பாக பணியாற்றும் செயற்குழு’ கொண்டுள்ளது.

"சிறிலங்காவில் தமிழர் வாழும் பகுதிகளில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதன் காரணமாக அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் என்பன அங்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாட்டின் தென்கிழக்கு நகரான திருச்சியிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொட்டப்பட்டு முகாமில் வாழும் 49 வயதான றதி பத்லொற்* இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்கள் வாழிடங்களில் தற்போதும் தொடர்ச்சியாக இராணுவத் தலையீடுகள் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதாக நாம் அறிகின்றோம். அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே நாம் சிறிலங்காவில் வாழ்ந்தோம். தற்போதும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் நிலங்கள் சட்டரீதியற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுவதாகவும் ஈழத் தமிழ் அகதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"எனது சகோதரன் சிறிலங்காவில் உள்ள எமக்குச் சொந்தமான நிலங்களைப் பார்ப்பதற்காக சென்றிருந்தார். ஆனால் எமக்குச் சொந்தமான நிலம் முழுவதும் சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் எனது சகோதரன் தெரிவித்தார்" என கொட்டப்பட்டு முகாமைச் சேர்ந்த 35 வயதான திவாகர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

"எமது தாய்நாடான சிறிலங்காவுக்குத் திரும்பிச் சென்ற எனது சகோதரி சுற்றுலாப் பயணியாக மீண்டும் இங்கு வந்திருந்தார். எனது சகோதரியிடம் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு பதிவுகளும் இல்லாததால் தனது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது" என 40 வயதான கோணேஸ்வரி நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் வாழும் சிறிலங்காத் தமிழ் அகதிகள் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்களை அறிவதால் அவர்கள் ஒருபோதும் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை" என தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும் 'மே 17 அமைப்பைச்' சேர்ந்த திரு முருகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதிலிருந்து, 5000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் [uNHCR] அனுசரணையுடன் தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். இவர்களுள் அதிகமானோர் திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

2011ல் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் அனுசரணையுடன் 1728 ஈழத் தமிழ் அகதிகள் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையானது பின்னர் குறைவடையத் தொடங்கியது.

"சிறிலங்காவுக்கு திரும்பிச் செல்கின்ற அகதிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணத்தை அடையாளங் காண்பதென்பது கடினமான விடயமாகும். தனிப்பட்ட காரணத்தைக் கருத்திற் கொண்டு தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முற்படுவதென்பது ஒரு தனிப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்" என சிறிலங்காவுக்கான UNHCR வதிவிடப் பிரதிநிதி மைக்கல் சுவாக் கடந்த யூனில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்கள் அபிவிருத்தி நிலையை எட்டியுள்ள போதிலும், தமிழர் வாழும் ஏனைய மாவட்டங்கள் யுத்தத்தின் அழிவைச் சந்தித்திருப்பதுடன், இங்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் என்பது பற்றாக்குறையாகவே காணப்படுவதாக Adventist Development Relief Agency திட்ட இயக்குனர் வலன் சச்சிதானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கும் அப்பால், இந்திய முகாங்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளில் அரைவாசியினர் இந்தியாவில் பிறந்தவர்களும், சிறிலங்காவில் சிறிது காலம் வாழ்ந்தவர்களுமாவர். 1983-1987 வரையான காலப்பகுதியிலேயே சிறிலங்காவிலிருந்து பெருமளவான தமிழ்மக்கள் இந்தியாவை வந்தடைந்திருந்தனர்.

தமிழ்நாட்டு அரசாங்கத்தால் நடாத்தப்படும் முகாங்கள் மிக மோசமாக உள்ளதாகவும், இங்குள்ள வீடுகளின் கூரைகள் கிடுகுகளால் வேயப்பட்டுள்ளதாகவும், பின்தங்கிய முகாங்களில் நீர் மற்றும் சுகாதார வசதிகள் பெரும் பிரச்சினையாக காணப்படுவதாகவும் உதவி அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இங்கு வாழும் அகதிகளுள் இரு வளர்ந்த பிள்ளைகளையும், ஒரு சிறு பிள்ளையையும் கொண்டுள்ள குடும்பமொன்றுக்கு மாதந்தோறும் அரசாங்கத்தின் உதவித் தொகையாக 38 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இவர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன. அகதி முகாங்களுக்கு வெளியில் சென்று தொழில் செய்கின்ற சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

UNHCR ஆனது இந்த முகாங்களை நேரில் சென்று பார்வையிடாவிட்டாலும் கூட, 2006லிருந்து நான்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 23 நலன் சார் திட்டங்களை முதன்மைப்படுத்தி பணியாற்றுகின்றன.

இதேவேளையில், முகாங்களுக்கு வெளியே வாழும் அகதிகள் போக்குவரத்து மேற்கொள்வதில் எவ்வித தடைகளையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இவர்களுக்கான அரசாங்கத்தின் உதவித்தொகை மற்றும் நலன் சார் திட்டங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாது.

*உண்மைப் பெயரல்ல.[/size]

[size=4]http://www.puthinapp...?20120906106933[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.