Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடிந்தகரையில் மக்கள் போராட்டம்- யார் இந்த உதயகுமார்?

Featured Replies

201593_10151035714601513_1976011352_o.jpg

வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்ட பத்தாவது நினைவு விழா தஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேச விழாவாக கொண்டாடப்பட்டது. அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள் குறித்து மிக காத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அவரது பேச்சு அன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒரு செரிவான உரையாடலைச் சாத்தியமாக்கியது.

அன்று மாலை ஒர் உரையாடலின் போது என்.ராம் எனக்கு இவர் ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம் செய்து வைத்தார். உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது

அப்பொழுது அவர் அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ள மினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் வறுமை Race and poverty பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராக இருந்தார். அவரது பல கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கினேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பான Intervention in srilanka – history and prospects , இந்திய ஹிந்துத்துவ அரசியல் தொடர்பான Presenting the past: the politics of hindu history writing in india வும் உலகம் வரலாறு சமூகம்சார் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. அவர் இணையத்தில் அமைதிக்கான சமாதானத்துக்கான ஒரு படிப்பை நடத்தி வந்தார்.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தன் வலைத்தளத்தில் எழுதி வந்தார். இந்த வலைத்தளம் சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார்.

இங்கு அவுட்லுக், இந்தியாடுடே என பல ஆங்கில பத்திரிக்கைகளில் தொடர்ந்து அவரது கட்டுரைகள் வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம் செய்தார். ஆஷிஷ் நந்தி, என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின் விநாயக், க்யான் பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் என பல எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்கா அழைத்துச்சென்று பல்கலைக்கழகத்தில் உரைகள் நிகழ்த்தச்செய்தார்.

அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் மிகவும் சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார். 2007 ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை அவரது பணிகளைப்பாராட்டி விருது கொடுத்து கௌரவித்தது.

அவரது பிரியத்திற்குறிய பாட்டி புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு மரணம் அடைந்தார், அப்பொழுது அவரின் பெற்றோர் அந்த பாட்டிக்கு அருகில் அவரை பல ஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரது குடும்பத்தில் பலர் புற்றுநோயால் இறந்தனர்.

இந்த பிண்ணணியில்தான் கதிரியக்கம் ஏற்கனவே அதிகமாக உள்ள கன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ள மக்கள் மிக வேகமாக புற்றின் வலையில் விழுந்து மடிவார்கள் என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்த நாள் முதல் அது சார்ந்து செயல்படத் தொடங்கினார்.

ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் அவர் இங்கு வரும் போது தன் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தை விட, இந்த ஆபத்தை எப்படியும் விளக்கிவிட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மத்தியிலும், நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும் செலவிட்டதுதான் அதிகம்.

சில விடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் தில்லியில் சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லா ஆதாரங்களையும் கொடுத்தாள்ளார். பின் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கே வந்து தங்கிவிட்டார். தொடர்ந்து

இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணு ஆயுத, அணு உலை எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழ்ந்தபின் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல். தன் தாய் நாட்டிற்காக எல்லாவற்றையும் விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்து வந்த மிகச்சிலரில் முதன்மையானவர்.

கூடங்குளம் விழித்தெழும்….

உண்மைகள் நூலிலிருந்து திரு ஆ.முத்துகிருஷ்ணன்

http://www.thinakkathir.com/?p=41355

நன்றி நெல்லையன் அண்ணா இணைப்பிற்கு உதயகுமார் பற்றிய மேலதிக தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி

[size=5]உதயகுமாரை உயிர் போனாலும் காவல் துறையிடம் ஒப்படைக்க மாட்டோம் – மக்கள் சக்தி[/size]

[size=4]ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது….[/size]

[size=4]koodankulam-uthayakumar-1-300x200.jpg[/size]

[size=4]மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் [/size]கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.

[size=4]koodankulam-1-300x200.jpg[/size]

[size=4]இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.[/size]

[size=4]மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.இந்தப் போர்க்குணமும், மான உணர்ச்சியும் தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்![/size]

http://www.eelamview.com/2012/09/11/koodankulam-uthayakumar/

Edited by akootha

"ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.இந்தப் போர்க்குணமும், மான உணர்ச்சியும் தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்!"

அது தமிழகத்தை பற்றிக்கொண்டால் மட்டும் போதாது. உலகிலுள்ள எல்லாத்தமிழரிடமும் அந்தப் போர்க்குணமும்

மான உணர்ச்சியும் பற்றிக்கொள்ளவேண்டும்! கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி நேரடிவிபரித்தலைக் கேட்டுப்பாருங்கள்.

http://www.yarl.com/...howtopic=107972

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.