Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் மக்களை தங்களுடைய சுயலாபத்திற்காகவே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்: � அருந்ததி ராய் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Arundhati-Roy-150.jpg

[size=4]காஷ்மீரில் இருக்கும் இந்தியாவின் முகமூடிகளைக் கிழிக்கிறீர்கள். இலங்கையில் ராஜபக்சேவின் முகமூடியைக் கிழிக்க நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி உங்கள் கருத்து என்ன?ஆரம்பத்திலேயே இதைப் பற்றி எழுதிய வெகுசிலரில் நானும் ஒருத்தி என நினைக்கிறேன்.[/size]

[size=4]போரின்போது, அது நடந்துகொண்டிருந்தபோது நான் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:நான் என்ன சொன்னேன் என்பதல்ல, நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதுதான்.[/size]

[size=4]தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள்? இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள்?[/size]

[size=4]நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் தங்களுடைய சுயலாபத்துக்காக மட்டுமே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அருந்ததி ராய் என்ன சொல்கிறார் என்ன சொல்லவில்லை என்பது பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் இந்தப் போரில் இலங்கை அரசோடு கைகோத்து நின்றன.[/size]

[size=4]சாதாரண மக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அருந்ததி ராயைத் தமிழகத்திலுள்ள சாதாரண மனிதர்கள் நெருங்க முடிவதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியுமா? அப்படி இருந்தால் அது ஏன்?[/size]

[size=4]இந்தப் பிரச்சினையை நான் அதிகம் சந்திக்கிறேன். அதற்குக் காரணம், மக்கள் ஒரு தனிநபரையும் ஒரு நிறுவனத்தையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் நிறுவனம் அல்ல. எனக்கு அலுவலகமோ தனிச்செயலரோ இல்லை. நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறேன். ஆனால் நான் அரசியல்வாதி அல்ல. நான் எழுத்தாளர். நான் வடக்கில் வாழ்கிறேன். அங்கே சில விஷயங்களைச் செய்கிறேன்.[/size]

[size=4]எல்லா விஷயங்களையும் செய்வதென்பது எனக்குச் சாத்தியமல்ல. தனிநபர்களையோ அவர்களது நட்சத்திர அந்தஸ்தையோ சார்ந்திருப்பதும் சரியான அரசியல் செயல்பாடு அல்ல. எனக்கு என்ன தெரியுமோ அதை மட்டுமே எழுதுகிறேன். நான் எல்லாவற்றையும் பற்றி எழுத முடியாது. எல்லா மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. நான் நிறுவனமாக மாறினால், அலுவலகம் இருந்தால், பத்துச் செயலர்கள் இருந்தால் நானும் அதைச் செய்வேன். ஆனால் அதன் பிறகு நான் எழுத்தாளராக நீடிக்க முடியாது.[/size]

[size=4]சின்ன விஷயங்களின் கடவுள் நாவலுக்குப் பிறகு நீங்கள் நாவல் எதுவும் எழுதவில்லை. அது உங்களுக்கு நிறைய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ஆனாலும் நீங்கள் ஏன் நாவலாசிரியராக அல்லாமல் சமூகச் செயற்பாட்டளராக இருக்க முடிவு செய்தீர்கள்?[/size]

[size=4]சின்ன விஷயங்களின் கடவுள் 1997இல் வெளிவந்தது. 1998இல் அணு ஆயுதச் சோதனை நடைபெற்றது. அது மிகவும் கொண்டாடப்பட்டது. எதிர்க்குரல் எழுப்ப எனக்கொரு வெளி இருந்ததை நான் உணர்ந்தேன். அதை நான் செய்தபோது, வேறொரு நீண்ட பயணத்தைத் தொடங்கினேன். நான் எப்போதுமே என்னை நாவல் தொழிற்சாலையாக நினைத்துக்கொண்டதில்லை. முந்நூறு நாவல்கள் எழுத வேண்டும் என்றெல்லாம் எனக்கு எண்ணம் இல்லை. நான் கொஞ்சமாகவே எழுத நினைத்தேன். எழுத எதாவது இருக்கும்போது மட்டுமே எழுத நினைத்தேன்.[/size]

[size=4]நானொரு எழுத்தாளர் என்பதால் மட்டும், எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதால் மட்டும், விருதுகள் கிடைத்திருக்கின்றன என்பதால் மட்டும், மக்கள் என் எழுத்துக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்பதால் மட்டும் நான் எழுத நினைக்கவில்லை. அவை எழுதுவதற்கான காரணங்களாக இருக்க முடியாது. இன்னொரு நாவல் எழுதுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று என் அனுபவங்கள் எப்போது என்னிடம் சொல்கின்றனவோ அந்த நேரத்தில் நான் எழுதுவேன். அதுவே சரியான காரணமாக இருக்கும். தொழில்முறைக் காரணங்களுக்காக நான் எழுத நினைக்கவில்லை. நான் பிழைப்புவாதி அல்ல. நான் தயாராக இருக்கும்போது, அது நடக்கும். உங்கள் நாவலுக்கு நிறைய விமர்சனங்கள் வந்திருக்கும். உங்களை மிகவும் கவர்ந்தது எது?[/size]

[size=4]நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் விமர்சனங்களைக் கவனமாக வாசிப்பதில்லை. என்னுடைய படைப்புகளைப் பற்றி அதி தீவிரமாக ஆராயும் நபராக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பிடித்த விமர்சனம் என்பது மக்கள் நேரடியாக என்னிடம் சொல்வதுதான். உதாரணமாக, ஒரு இளைஞரைச் சந்தித்த நினைவு இருக்கிறது. அவர் தன்னுடைய காதலியை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அவர்களுக்கிடையே மின்னஞ்சலில் நட்பு தொடங்கியது. அந்த இளைஞர் மின்னஞ்சல் அனுப்பினார்:[/size]

[size=4]'அய் மனத்தில் மே வெப்பமான, பயமுறுத்தும் மாதம்.' அந்தப் பெண் அனுப்பிய பதில்: 'நீண்ட புழுக்கமான பகல்கள்.' அவர்களிருவரும் ஒருவரையொருவர் நேசிப்பதற்கு என் வார்த்தைகள் சங்கேதமாகப் பயன்பட்டிருக்கின்றன. அதுபோல நிறைய விஷயங்கள். போஸ்னியாவில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்கள் எனக்கு எழுதியிருக்கிறார்கள்:[/size]

[size=4]'இந்தச் சூழலைக் கடக்க உங்களது புத்தகத்தில் ததும்பும் அன்பை உறுதியாகக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறோம்' என்று இதுபோல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இருக்கின்றன. மரியா மொழிபெயர்ப்பு பற்றிப் பேசினார். என்னைப் பொறுத்தவரையில் மொழிபெயர்ப்பு பல அடுக்குகளில் வேலைசெய்கிறது. மொழி மட்டும் மாற்றம் செய்யப்படுவதில்லை. அது மனித உணர்வுகளின் மொழிபெயர்ப்பும்கூட எந்த மொழியாக இருந்தாலும் � தமிழ் அல்லது உருது அல்லது மலையாளம் � அந்த மொழிகளுக்குள் அடக்குமுறையும் அடிமைத்தனமும் இருக்கின்றன. நாம் சாதிரீதியான சமூகத்தில் வாழ்கிறோம். நமது மொழிகளிலும் அது படிந்திருக்கிறது. ஆங்கிலத்தைச் சுதந்திரம் தரும் மொழியாக நினைக்கும் தலித்துகள் இருக்கிறார்கள். எனது எஸ்டோனிய மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்தபோது, அது தன்னுடைய குழந்தைப் பருவத்தைப் பற்றியது என்று சொன்னார். ஒரு கலாச்சாரத் தனித் தன்மையை மீட்டுக்கொள்ளும் அதே வேளையில் வன்முறை, காதல், அவமானம், வெட்கம், தீவிரவாதம் போன்ற பொதுவான மனித உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது எப்படிச் சாத்தியமாகிறது? அந்த இடத்துக்கு நாம் எப்படிப் போகிறோம்?[/size]

[size=4]அது எனக்கு மிகவும் முக்கியம். சின்ன விஷயங்களின் கடவுள் பற்றி மட்டுமல்ல, நான் எதைப் பற்றி எழுதினாலும் மிகப் பெரிய சன்மானமாக நினைப்பது நான் எந்த நாட்டுக்கும் செல்லலாம், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, எங்கே சென்றாலும் நான் என் எழுத்தின் மூலம் என்னுடைய தோழர்களைச் சந்திக்கிறேன். ஒரே மொழி பேசும் மக்களைச் சந்திக்கிறேன். அவர்கள் அங்கு நடக்கும் பிரச்சினைகளின் மையத்துக்கு என்னை அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் புத்தகம் இவ்வளவு பெரிய விற்பனையைச் சாதித்திருக்கும்போது, எனக்கு இப்படித் தோன்றியது: சின்ன விஷயங்களின் கடவுளில் உள்ள ஒவ்வொரு உணர்வும் ஒரு வெள்ளி நாணயத்துக்குப் பண்ட மாற்றுச் செய்யப்பட்டதாகவும் நான் விறைப்பான, வெள்ளி இதயம் கொண்ட வெள்ளிச் சிலையாக மாறிவிடக்கூடும் என்றும் தோன்றியது. ஆனால் ஒரு நண்பர் சொன்னார்: ஒவ்வொரு நாணயத்துக்குப் பின்னாலும் ஒரு மனிதர் இருக்கிறார்.[/size]

[size=4]அவர்கள் எதையோ பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருமுறை போர்ட்டொ அலெக்ரேவில் உலக சமூக அமைப்பின் சந்திப்பில் கலந்துகொண்டபோது எதோவொரு பிரச்சினை சம்பந்தமாக ஒரு பெண் ஒரு மனுவில் பலருடைய கையெழுத்துகளையும் பெற்றுக்கொண்டிருந்தார். அந்த மனுவில் நமது பெயர் மற்றும் நாம் சார்ந்த அமைப்பின் பெயரைக் குறிப்பிட வேண்டும். பெயரை அருந்ததி ராய் என்றும் அமைப்பின் பெயருக்குக் கீழே வீஸீ என்றும் எழுதினேன்.[/size]

[size=4]அதற்கு Sweethearts International Network என்று விளக்கம் கொடுத்தேன். அதன் பிறகு நிறைய பேர் வந்து தாங்கள் எப்படி இந்த அமைப்பில் சேருவது எனக் கேட்டார்கள். �நீங்கள் ஒரு ஸ்வீட் ஹார்டாக இருந்தால் போதும், நீங்கள் அதில் உறுப்பினர்� என்றேன். என்னளவில் இவையெல்லாம்தான் இலக்கியம் எனக்குத் தந்த பரிசுகள். இந்த உலகில் இவற்றைத் தொலைப்பது மிக எளிது.[/size]

[size=4]இன்று எழுத்தாளராக இருப்பது வங்கி ஊழியராக இருக்கும் அளவுக்கு அபத்தமானதாக இருக்கிறது. நாம் அவ்வளவு வணிகமயமாகிவருகிறோம். ஆனால் இந்த வித்தையை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? இந்த அழகை எப்படிப் பராமரிப்பது? நமது ஆயுதங்களை எப்போதும் கூராகவே எப்படி வைத்திருப்பது? எப்படி நாம் நம்மைச் சுற்றி நடப்பவைமீது கவனத்தை வைத்திருப்பது? இவை தான் எனக்கான சன்மானங்கள். விமர்சனங்கள் அல்ல. நான் விமர் சனங்களுக்காக எழுதவில்லை. அதைவிடப் பெரிய விஷயங்களுக்காக எழுதுகிறேன்.[/size]

[size=4]மிகப் பெரிய விஷயங்களுக்காக. உங்கள் நாவலை வாசித்திருக்கிறேன். அதில் நீங்கள் பரவன் இனத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் தமிழ்நாட்டின் தென்கரையோரப் பகுதியில் வாழும் இனத்தினர். அவர்களுள் வெகுசிலர் தான் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்து போனார்கள்.[/size]

[size=4]அப்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்தார்கள். அந்த இனத்தவருடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா? எந்தத் தருணத்தில் பரவன் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாவலுக்குள் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தீர்கள்?[/size]

[size=4]நான் அய்மனத்தில்தான் வளர்ந்தேன். அவர்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அது அந்தரங்கமான விஷயம். இனங்களைப் பற்றி அரசியல் சரிதத்தன்மையோடு ஒரு நாவலை எழுத வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. அது ஒரு குழந்தையாக என்னுடைய அனுபவம்தான். சொல்லப்போனால் என்னுடைய தாய் தன் இனத்திற்கு வெளியே திருமணம்செய்துகொண்டு பின்னர் விவாகரத்து செய்தார். அவர் திரும்ப வந்தார்.[/size]

[size=4]ஆனாலும் சாதியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவராகவே இருந்தார். மிகவும் மரபு சார்ந்த இந்த நஸ்ரானி கிறிஸ்துவ இனத்தில் எங்களையும் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களுக்கு நிலப்பிரபுத்துவ மனப்பான்மை இருந்தது, மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக, சமூகத்தில் தங்களது இடம் பற்றி மிகுந்த கவனம் கொண்டவர்களாக இருந்தார்கள். என்னிடமும் என் சகோதரனிடம் எப்போதும் அவர்கள் இது உங்கள் வீடு அல்ல. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?[/size]

[size=4]உங்களை யாரும் மணந்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். நான் என்னவோ அவர்களுள் ஒருவரை மணந்துகொள்வதற்காகக் காத்துக்கிடந்ததுபோல. ஆற்றங்கரையோரத்தில் வளர்ந்ததும் எல்லா விழாக்களிலிருந்தும் நாங்கள் விலக்கி வைக்கப்பட்டதுமான � எங்களை யாரும் அழைக்கமாட்டார்கள் � சூழலில்தான் நான் வளர்ந்தேன். அதனால் அதை அறிவுசார்ந்த முடிவு என்று சொல்ல முடியாது.[/size]

[size=4]கேள்வி: (சரியாகப் பதிவாகவில்லை)[/size]

[size=4]உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும் எனத் தெரியவில்லை. நான் கட்டடக்கலை பயின்றிருக்கிறேன். ஒரு புத்தகத்தின் கட்டமைப்பு என்பது மொழி அல்லது கதை சொல்வதுபோல எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எப்படி ஒரு கதையைச் சொல்கிறோம், அதை எந்தக் கட்டமைப்பில் சொல்கிறோம் என்பதுதான் எல்லாமே. இப்போது இந்தப் புத்தகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம், அதன் ஓர் இழை ஒரு நாளின் மீது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு அது வருடங்களுக்கும் நூற்றாண்டுகளுக்கும் பயணிக்கிறது.[/size]

[size=4]ஆனால் அதை நான் முதல் பக்கத்தில் எழுதத் தொடங்கிக் கடைசிப் பக்கத்தில் முடிக்கவில்லை. நான் தொடங்கியபோது இப்படியொரு படிமம்தான் என் மனத்தில் இருந்தது. ரயில்வே கிராஸிங் அருகில் குழந்தைகள் இருக்கும் காரை மிகப் பெரிய சிபிஎம் பேரணி ஒன்று கடந்து செல்லும். நான் எழுதத் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து அந்தக் கார், அதே கிராஸிங்கில் இருந்தது.[/size]

[size=4]இந்தப் புத்தகத்தை எப்போதாவது முடித்துவிட முடியுமா என்று நினைத்தேன். முடிக்கும்போது எனக்கு மிகவும் வயதாகியிருக்கும் என்று நினைத்தேன். இரண்டு மூன்று வருடங்களில் நான் கட்டமைப்பை உணர்ந்தேன். குறிப்பாக இந்த அத்தியாயம் அதை எனக்குத் தெளிவுப்படுத்தியது. நான் ஒரே மூச்சில் எழுதி முடித்த புத்தகத்தின் மிகப் பெரிய பகுதியும் அதுவே. நான் நிறைய எழுதித் தேவையற்றவற்றை எறிவது போன்றெல்லாம் செய்யவில்லை. நிதானமாக எழுதினேன்.[/size]

[size=4]ஆனால் அதில் ஓர் அடுக்கை உருவாக்கினேன். அதனால் தேவையற்ற உரைநடையை நான் நிறைய உற்பத்திசெய்யவில்லை. காரணம், நான் எழுதுவதற்கு முன்பு அதை என் மண்டைக்குள் வடிவமைத்துக்கொண்டேன். என்னைப் பொறுத்த வரையில் என் மொழி என் சிந்தனையை மூடியிருக்கும் தோல் போன்றது. அப்படித்தான் நான் சிந்திக்கிறேன். நான் சிந்திக்கும்போது அதை எப்படி எழுதுவது என்றும் யோசிக்கிறேன்.[/size]

[size=4]சில நாட்களுக்கு முன்பு புக்கர் விருதுக்கு ஜீத் தயாள் முன்மொழியப்பட்டிருக்கிறார். அப்போது புக்கர் விருது வாங்கிய இந்தியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. உங்கள் பெயரை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டார்கள் எனத் தோன்றுகிறது.[/size]

[size=4]அதெல்லாம் முக்கியமே அல்ல. எந்த விதத்தில் அது முக்கியம் என நினைக்கிறீர்கள்? நமக்குக் கிடைக்கும் பரிசுகளைப் பற்றி யோசித்துக்கொண்டே வாழ்க்கையை நகர்த்த நாம் குழந்தைகள் அல்ல. உண்மையிலேயே அது முக்கியமான விஷயம் அல்ல. விருது வாங்கியது, நல்ல விஷயம்தான். புக்கர் விருது வாங்கிவிட்டேன் என்றெல்லாம் நான் புகார் சொல்லவில்லை.[/size]

[size=4]ஆனால் அது நான் அதிகம் சிந்திக்கும் விஷயம் அல்ல. அது எழுத்தாளர்களைச் சிறுபிள்ளைத்தனம் மிக்கவர்களாக மாற்றிவிடுகிறது என்று எனக்குத் தோன்றும். பாட்டியிடம் போய் நான் தான் வகுப்பில் முதல் மாணவர் என்று சொல்வதுபோல. நாம் அதைவிடப் பெரியவர்கள். இவையெல்லாம் யோசிப்பதற்கு மிகவும் அபத்தமான விஷயங்கள்.[/size]

[size=4]தமிழ் மக்கள், இங்குள்ள சமூக ஆர்வலர்கள் பற்றி ரவிக்குமார், மாலதி மைத்ரி போன்ற அறிவுஜீவிகளின் வாயிலாக நீங்கள் அறிவதாகத் தோன்றுகிறது. அவர்கள் சொல்லும் தகவல்கள் எல்லாம் உண்மையா அல்லவா என்று நீங்கள் ஆராய்கிறீர்களா?[/size]

[size=4]கடந்த புத்தக வெளியீட்டின்போது மே 17 இயக்கம் செய்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்தது சரி. உங்களுக்கு இங்கிருந்து வரும் தகவல்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். நான் எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது, யாரோ ஒருவர் சொல்லும் தகவலின் அடிப்படையில் எழுதுவதே இல்லை.[/size]

[size=4]எப்போதும் இல்லை. நான் தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் எழுதியிருப்பதாகச் சொல்லவில்லை. யாரோ சொல்லும் தகவலின் அடிப்படையில் எழுத நான் முட்டாளல்ல. எனக்கு வேண்டிய தகவல்களை நான் நேரடியாகத் தேடியடைகிறேன். ஒரு புத்தக வெளியீட்டில் ஆர்ப்பாட்டம் செய்வது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய நினைத்தால், நிச்சயமாகச் செய்ய வேண்டும். ஆனால் உங்களது கருத்துகளோடு முரண்படுபவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் தங்களது கருத்துகளை வெளியிட அனுமதி இல்லை என்று நீங்கள் சொன்னால், அது சரியல்ல.[/size]

[size=4]அன்று அதுதான் நடந்தது. ஆர்ப்பாட்டம் செய்தார்கள், சரி. ஆனால் கார்டன் வைஸின் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு இவ்வளவு நடந்த பிறகு, எல்லாத் தரப்பினரும் தங்களைக் கேள்விக்குட்படுத்திக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.[/size]

[size=4]அவர்களுக்குப் பொறுப்பு இருந்திருக்கிறதா எதாவது தவறு செய்தார்களா, செய்யவில்லையா என்று உள்முகத் தேடுதலில் ஈடுபடுவதும் தங்களை கேள்விக்குட்படுத்துவதும் அவர்களுடைய கடமைகள் அல்லவா? ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு நாம் கைதட்டிப் பாராட்டிக் கொண்டிருக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எல்லோரும் எல்லா அடுக்குகளிலும் எல்லாத் தருணங்களிலும் தங்களைக் கேள்விக்குட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து. குறிப்பாக இது போன்ற தோல்விக்குப் பிறகு யோசிக்க எதுவுமே இல்லை என்று நான் சொல்லிவிட முடியாது. யோசிக்க நிறைய இருக்கின்றன.[/size]

[size=4]மொழிபெயர்ப்பாளராக இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். உங்கள் புத்தகம் வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்படும்போது, உங்களைக் கட்டுப்படுத்தும் விஷயங்கள் என்று எதையாவது நினைக்கிறீர்களா?[/size]

[size=4]நீங்கள் எழுதி வேறொருவர் வாசிக்கும்போது, அவரவருக்கான அர்த்தத்தை அவரவர் உருவாக்கிக்கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் இறந்துவிட்டார்கள் என்பது மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்.[/size]

[size=4]ஆனால் உங்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு மொழியில் மொழிபெயர்க்கப்படும்போது, அது வாசகர்கள் தங்கள் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்வதற்கான அடிப் படையாகிறது. மூலத்தை எழுதியவர் என்கிற முறையில் நீங்கள் எதாவது கட்டுப்பாடுகளை உணருகிறீர்களா?[/size]

[size=4]இது மொழிபெயர்ப்புக்கு மட்டுமல்ல, வாசிப்புக்கும் பொருந்தக் கூடிய கேள்வி. வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பார்கள், அதில் நான் அறிந்திராத விஷயங்களை வாசிக்கிறார்கள். ஒரு புத்தகத்தை எழுதி முடித்த பிறகு சில வகைகளில் அதற்கு நீங்கள் சொந்தம்கொண்டாட முடியாது.[/size]

[size=4]கேரளாவில் புத்தகம் வெளியானபோது எதேதோ காரணங்களுக்காக ஐந்து வழக்கறிஞர்கள் எனக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். ஆபாசத்துக்காகவும் பொது ஒழுங்கைக் குலைப்பதாகச் சொல்லியும் அந்த வழக்குகள் என்மீது போடப்பட்டன. வழக்கு நீதிமன்றத்துக்கு வருவதற்குள் நான் புக்கர் பரிசு பெற்றிருந்தேன்.[/size]

[size=4]அதனால் வழக்கு அவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாயிற்று. 'ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு என்முன்பு வரும்போதும், எனக்கு நெஞ்சுவலி வருகிறது� என்று சொல்லிவிட்டு நீதிபதி வழக்கைத் தள்ளிவைத்து விடுவார். நவீன உலகில் மிகுந்த பிரபலமடையும் ஒரு நபருக்கு என்ன நடக்கலாம் என்பது மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கிறது.[/size]

[size=4]என் புத்தகத்தை மறந்துவிடுங்கள். இன்று டுவிட்டரில் அருந்ததி ராய் எனச் சொல்லிக்கொண்டு இருபது பேர் இருக்கிறார்கள். முகப்புத்தகத்தில் அருந்ததி ராய் என்று சொல்லிக்கொண்டு பத்து பேர் இருக்கிறார்கள். என் அடையாளத்தை யாராவது எப்போதும் திருடிக்கொண்டேயிருக்கிறார்கள்.[/size]

[size=4]மோசமான கவிதைகளை எழுதி அவற்றை நான் எழுதியதாகச் சொல்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து உங்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் - நீங்கள் சொன்னது பற்றி, சொல்லாமல்விட்டது பற்றி எல்லாம் படிக்கிறீர்கள். என்னைச் சிலர் விடாமல் பின்தொடர்ந்தபடி இருக்கிறார்கள். பூங்காக்களில் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். தினந்தோறும் பத்துக் கடிதங்கள் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். புத்தகம் 40, 45 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. என்னால் எல்லாவற்றையும் சரிபார்க்க முடியாது.[/size]

[size=4]சில விதங்களில் பார்த்தால், இந்தப் பெரும் விரிவாக்கத்தால் நான் சுருங்கிப்போயிருக்கிறேன்! என்னால் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது என்கிற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். நான் எப்படி நடந்துகொள்கிறேன், ஒழுங்காக, நாகரிகமாக நடந்துகொள்கிறேனா என்பது பற்றி எனக்கு உண்மையிலேயே பெரிய அக்கறை இல்லை. நான் யாரையும் எனக்கு வாக்களிக்கக் கேட்கவில்லை.[/size]

[size=4]நான் அரசியல்வாதி அல்ல. நான் கடந்து செல்லும் போதெல்லாம் எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்வதற்கு, அவற்றைச் சிறப்பாகச் செய்வதற்கான வெளியில் நான் என்னைச் சுருக்கிக்கொண்டிருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.