Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கேற்ற அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்: மன்மோகன் சிங்

Featured Replies

[size=4]இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கேற்ப இலங்கையில் அதிகாரப்பரலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சாஞ்சியில் அமையவுள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்தியப் பிரதேச மாநில அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குமிடையில் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்த இணக்கம் காணப்பட்டது. இதன்போதே ஜனாதிபதியிடம், இந்தியப் பிரதமர் இவ்வாறு கூறினார்.

2010ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குமிடையில் நடைபெற்ற விபரமான கலந்துரையாடல் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர்களின் விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோது, 3 மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தியமை, அடுத்த வருடம் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் முன்னெடுவது தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஜனவரி மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ்க் கட்சிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறினார்.

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தீர்மானத்திற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்;தியா வாக்களித்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் இந்தியாவுடனான உறவை தனது அரசாங்கம் கைவிடப்போவதில்லையெனவும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

கடல் எல்லையை மீனவர்கள் கடக்கும் பட்சத்தில் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தினார். மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரு நாட்டு மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தென இவர்கள் இருவரும் இணங்கினர்.

வர்த்தக உறவின் மேம்பாடு மற்றும் பொருளாதார உத்வேகம் தொடர்பிலும் இவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு கபிலவஸ்து புனித சின்னம் எடுத்துவரப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, சுமார் 3 மில்லியன் இலங்கையர்கள் கபிலவஸ்து புனித சின்னத்தை தரிசித்ததாகவும் கூறினர். [/size]

[size=4](ரைம்ஸ் ஒவ் இந்தியா)[/size]

  • தொடங்கியவர்

[size=4]இந்தியாவின் சாஞ்சியில் அமையவுள்ள பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு மத்தியப் பிரதேச மாநில அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். [/size]

[size=4]சுஸ்மா தான் கூப்பிடவில்லை என்றா. ஆனால், டெல்லியில் அரச அமைச்சர் வரவேற்றார். [/size][size=1]

[size=4]இதிலும் ஆளும் காங்கிரஸ் 'பொய்' கூறியதாகவே தெரிகின்றது :([/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தீர்மானத்திற்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்;தியா வாக்களித்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் இந்தியாவுடனான உறவை தனது அரசாங்கம் கைவிடப்போவதில்லையெனவும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி உறுதியளித்தார். [/size]

[size=4]எதிரி என்றாலும் துணிவை பாராட்டித்தான் ஆகவேண்டும். இந்த துணிவை ஆரம்பத்தில் தந்தது இந்தியாவே. ஆனால், இன்று சீனா +பாகிஸ்தான் + ஈரான் என்ற முத்துமாலையில் இலங்கையும் சேர்ந்துவிட்டது. [/size]

[size=4]இதை உணர்ந்துள்ள இந்தியாவின் சிங் 'மௌனமாக' வழமை போல இருந்திருப்பார், சோனியாவின் செய்திக்காக :rolleyes:[/size]

  • தொடங்கியவர்

[size=6]Autonomy for Tamil regions figure in PM-Rajapaksa talks[/size]

[size=5]Prime Minister Manmohan Singh on Thursday raised the issue of devolution of power in Sri Lanka with visiting President Mahinda Rajapaksa in order to allow the Tamil population "to look forward to a future where they can live with dignity and respect'' . The meeting saw Rajapaksa and Singh having their first detailed discussion on all substantive issues since June 2010.[/size]

[size=5]http://timesofindia.indiatimes.com/india/Autonomy-for-Tamil-regions-figure-in-PM-Rajapaksa-talks/articleshow/16485682.cms[/size]

  • தொடங்கியவர்

[size=6]Has India lost influence in Sri Lanka over the Tamil issue?[/size]

[size=5]http://ibnlive.in.com/videos/293825/has-india-lost-influence-in-sri-lanka-over-the-tamil-issue.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.