Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரன், கஜேந்திரகுமார், விக்கிரமபாகு ஆகியோரின் வாகனங்கள், பொதுமக்களின் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images(630).jpg

[size=4](எஸ்.கே.பிரசாத்)[/size]

[size=2][size=4]முல்லைத்தீவில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரின் வாகனங்கள் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பொதுமக்களின் பஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேட்பாபிளவு மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு திரும்பிய அக்கட்சியின் பொதுச் செயலளார் செல்வராசா கஜேந்திரன் பயணித்த வாகனத்தின் மீது இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மாங்குளம், ஒட்டிசுட்டான் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணித்த பஸ்கள் மீதும் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் விசுவமடு, தேராவில் பகுதியில் வைத்து கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலானது தேராவில் பகுதியிலுள்ள இராணுவ பொலிஸாரின் காவலரணுக்கு முன்னால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் வாகனத்தின் மீதும் கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக மேலும் கூறப்படுகின்றது. [/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...1-10-51-49.html[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.