Jump to content

இறால் பிரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

shrimp_biryani-300x225.jpg

[size=4]தேவையானவை :[/size]

[size=4]அரிசி - 3/4 கிலோ[/size]

[size=4]இறால் - அரை கிலோ[/size]

[size=4]வெங்காயம் பெரியது - 4[/size]

[size=4]தக்காளி பெரியது - 3[/size]

[size=4]பச்சை மிளகாய் - 3[/size]

[size=4]மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி[/size]

[size=4]மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]சீரக தூள் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி[/size]

[size=4]சோம்பு தூள் - அரை தேக்கரண்டி[/size]

[size=4]பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி[/size]

[size=4]தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]பட்டை - 2[/size]

[size=4]கிராம்பு - 6[/size]

[size=4]ஏலக்காய் - 4[/size]

[size=4]புதினா - 5 கொத்து[/size]

[size=4]மல்லி கீரை - 5 கொத்து[/size]

[size=4]எண்ணெய் - 50 மில்லி[/size]

[size=4]தயிர் - அரை கப்[/size]

[size=4]முந்திரி - 10[/size]

[size=4]மஞ்சள் கலர், சிகப்பு கலர் - தலா ஒரு சிட்டிகை[/size]

[size=4]நெய் - 2 தேக்கரண்டி[/size]

[size=4]பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி[/size]

[size=4]உப்பு - தேவையான அளவு[/size]

செய்முறை :

[size=4]இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். மல்லி புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.[/size]

[size=4]அரிசியை கழுவி விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.[/size]

[size=4]ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.[/size]

[size=4]வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பிரியாணி மசாலா, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.[/size]

[size=4]தக்காளி நன்கு வதங்கியதும் இறால் போட்டு நன்கு கிளறி விடவும்.[/size]

[size=4]அதனுடன் எல்லா மசாலாதூள் வகைகள், தயிர், தக்காளிசாஸ், உப்பு, பன்னீர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.[/size]

[size=4]வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு பரப்பி விடவும். முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடவும். மல்லி தழை போடவும். மஞ்சள், சிகப்பு கலர், இரண்டையும் தனித்தனியே இரண்டு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து அதில் ஊற்றவும்.[/size]

[size=4]தட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து 5 நிமிடம் தம்மில் வைக்கவும். பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு திரும்பவும் 15 நிமிடம் தம்மில் வைக்கவும்.[/size]

[size=4]சுவையான இறால் பிரியாணி தயார்.[/size]

[size=4]http://www.arusuvai....amil/node/23911[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பகிர்வுக்கு [/size][size=4]நன்றி [/size]

Link to comment
Share on other sites

பகிர்விற்கு நன்றி தமிழரசு அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.