Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசுக்கு மு.க. மற்றும் ஜெ எழுதும் கடித லட்சணம்..! மக்களை மாங்காய் மடையர்கள் என்று நினைக்கிறார்கள்..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=4]மத்திய அரசுக்கு மு.க. மற்றும் ஜெ எழுதும் கடித லட்சணம்..! மக்களை மாங்காய் மடையர்கள் என்று நினைக்கிறார்கள்..?! ஈழதேசம் செய்தி..![/size]

[size=4]

2009 - ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து தான் பதவி விலகிய 2011 - ம் ஆண்டு வரை சோனியா தலைமையில் மன்மோகன் சிங் பிரதமர் அவர்களுக்கு எத்துனை கடிதம் எழுதியிருக்கிறார். எதைக் கேட்டாலும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்பது, கடிதம் எழுதினாலே கோரிக்கை எல்லாம் முடிந்து விட்டது போன்ற மாயையை பித்தலாட்டத்தை மோசடித்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும், இவர்கள் எழுதும் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் யாரும் பார்ப்பதில்லை என்பது போல் தான் இருக்கிறது. அண்மையில் முதல்வர் ஜெ அம்மையார் காவிரி குறித்து கடிதம், மூன்று பேர் தூக்கு குறித்து கடிதம், முல்லைப் பெரியாறு குறித்து கடிதம், அணுமின் நிலையம் குறித்து கடிதம், அதிக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்ற கடிதம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை என்னமோ ஆகாயத்தில் போய் கோட்டை கட்டியது போல இங்கே தமிழக மக்களிடம் கூறினார்கள். அதிலும் தி.மு.க.வின் கருணாநிதி இருக்கிறாரே..! அடேயப்பா..எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதலை செய்துள்ளார் தமிழர்களுக்கு தமிழ் மக்களுக்கு.[/size]

[size=4]

ஈழத் தமிழ் விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியதாக தங்களது ஊடகங்கள் வழியே ஊதிப் பிரச்சாரம் செய்தார் மு.கருணாநிதி அவர்கள். பிரதமர் அலுவலகமோ அந்த கடிதத்திற்கு செப்டம்பர் மாதம் கடிதம் எழுதி இருக்கிறது. அந்தக் கடிதத்தை அக்டோபரில் வெளியிடுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்..? கடிதமா அது..? நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனை குறித்து நான் கவனத்தில் கொண்டுள்ளேன். ஈழத் தமிழர்கள் நலன்கள் மீது இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று ஒரு பதில். இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்ந்த பேசி வருகிறோம். என்று கடிதம் எழுதி எழுதி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் திராவிடக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிகளும். [/size]

[size=4]

இலங்கை அரசுடன் தான் தொடர்ந்து பேசிக் கொண்டுதானே இருக்கிறது மண் மோகன் அரசு, என்ன பேசுகிறார்கள்..? மகிந்தா ராஜபக்சே கும்பலும் என்ன பேசிற்று என்பதெல்லாம் பரம ரகசியம். மீடியாக்களிடம் பொத்தம் பொதுவாக சொல்வது, இலங்கைத் தமிழர்கள் விசயம் குறித்து தான் பேசுகிறோம் என்று. கடந்த மூன்று ஆண்டுகளாக பேசி வருகிறோம், நல்ல முன்னேற்றம் ஏற்படும், உறுதி அளித்துள்ளார். என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவருகின்றன. எப்படி பார்த்தாலும் மூன்று ஆண்டுகள் பேசுவதற்கு அங்கு ஒன்றும் இல்லையே, இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதியுங்கள், அரசியல் உரிமை கொடுங்கள் என்று பேசுவதற்கு என்னத்துக்கு மூன்று ஆண்டுகள்..? [/size]

[size=4]

உண்மையில் இவர்கள் மக்கள் குறித்தெல்லாம் பேசுவதில்லை. தங்களின் முதலீடுகள் குறித்தும், அந்த திட்டத்தில் எவ்வளவு கமிசன் கொடுப்பாய்..? இந்த திட்டத்திற்கு எவ்வளவு கமிசன் கொடுப்பாய் என்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சில தேசியவாதிகள் அய்யோ...சீனாக்காரன் இலங்கையில் முழுதும் குடியேறி விட்டான், அவனால் இந்தியாவிற்கு இனி ஆபத்து தான். அதுவும் தமிழ் நாட்டிற்கு இனி பயங்கர அச்சுறுத்தல் ஏற்படும் என்று இங்கு ஒப்பாரி வைக்கிறார்கள். சீனாக்காரனிடம் கமிசனை வாங்கிக் கொண்டு இந்தியாவை விற்பதற்கு நீ முந்தி..நான் முந்தி..என்று அணைத்து அரசியல் கட்சிகளும் தயாராக உள்ளன. அதைவிட சூட்டிக்காக இருக்கிறது பார்ப்பனிய கூட்டமும் சங் பரிவார் கும்பலும். [/size]

[size=4]

கமிசன் ஒன்றையே லட்சியமாக ஒற்றை நிபந்தனையாக வைத்திருக்கிறது இந்திய ஆளும் கும்பலும், இவர்கள் தாங்கிப்பிடிக்கும் கார்ப்பரேட் க்ரூப்புகளும் என்றால், யாராவது அப்படியெல்லாம் இல்லை என்று சொல்ல முடியுமா என்ன..? [/size]

[size=4]

மாயாண்டிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.