Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள்

08 அக்டோபர் 2012

ஆரம்பிக்கப்படும்

சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஒருவார காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை நாவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ளது. நாவுறு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் பணிகள் ஒரு வார காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூகினிக்கு அனுப்பப்படுபவர் களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாவும், ஒரு வாரத்துக்குள் முதல் தொகுதியினர் அங்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மானூஸ் தீவில் தங்கவைக்கப்படவுள்ளவர்களுக்கான வசதிகள் குறித்து இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு வாரத்துக்குள் முதல் தொகுதியினரை அனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூகினி தீவுக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன், அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதேநேரம், 18 இலங்கையர்களும் 14 ஆப்கானிஸ்தானியர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து, நாவுறு தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 181 பேர் நாவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாகச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது. கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால், இடநெருக்கடி காரணமாக கலவரங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கிறிஸ்மஸ் தீவின் நிர்வாக அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்ததை நினைவு கூர்ந்த அவர், இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83945/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.