Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு கொலைகளைச் செய்து விட்டு சாதாரனமாகத் திரிகின்றார் யாழ்ப்பாண மருத்துவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு கொலைகளைச் செய்து விட்டு சாதாரனமாகத் திரிகின்றார் யாழ்ப்பாண மருத்துவர்.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:55

கடவுளுக்கு அடுத்தபடியாக மக்களால் நினைக்கப்படுபவர்கள் வைத்தியர்கள். இறப்பு, பிறப்பு ஆகியவற்றுக்கு இடையில் நடக்கும் வாழ்க்கை என்னும் மனித சுற்று வட்டத்தில் மிக முக்கிய இடத்தில் மக்களால் வைக்கப்படுபவர்கள் வைத்தியர்களே ஆவர்.

இவ்வாறான புனிதமான வைத்தியத் தொழில் யாழ்ப்பாணத்தில் என்ன நிலையில் இருக்கின்றது என்பதற்கு உதாரணமாக அமைந்தது அண்மையில் இரு தாய்மார்களின் மரணமும் இரட்டைக் குழந்தைகளின் மரணமுமாகும்.

பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் சேவை புரிந்த வைத்தியர்கள் இங்கு இருந்துள்ளார்கள். இருக்கின்றார்கள். இந்திய இராணுவத்தால்; யாழ் போதனாவைத்தியசாலையில் கொத்தாகக் கொல்லப்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள், முள்ளிவாய்க்கால் முடிவுவரை சேவை புரிந்த வைத்தியர்கள், செப்ரிசீமியா பெருக்கம் இருந்த 1995ம் ஆண்டு காலப்பகுதியில் சேவையாற்றிய இடம்பெயர்திருந்த நேரம் என்று பார்க்காது அது தொடர்பான ஆராட்சியில் ஈடுபட்டு அந்த நோய்க்கே தன்னைப் பலிகொடுத்த வைத்திய மாணவன், அத்துடன் உண்ணா நோன்பிருந்து உலகத்தில் எவராலும் முடியாத தியாகத்தைச் செய்து தனது உயிரை விட்டு உடலையும் தியாகம் செய்த வைத்திய மாணவன் திலீபன் , தற்போதும் தமிழ் மக்களுக்கான மகத்தான சேவையினை பெற்றுக் கொடுப்பதற்காக ஆர்வமாக இருக்கும் வைத்தியர்கள், வைத்திய மாணவர்கள் ஆகியோரால் யாழ்ப்பாணம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம் இல்லாது போய்க் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாண மக்களுக்காக இருக்கும் வைத்தியசாலைகளில் மிக முக்கியமான வைத்தியசாலையாக இருப்பது யாழ் போதனா வைத்தியசாலையாகும். யுhழ்ப்பாணத்தில் தற்போது இருக்கும் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்களின் இறுதி நேர சிகிச்சைக் கூடமாக இருப்பது யாழ் போதனா வைத்தியசாலையாகும். யாழ்ப்பாணத்தில் கடும் நோய்வாய்ப்பட்ட எந்த நோயாளியும் இறுதியில் சரணடையும் இவ்வாறான போதனா வைத்திசாலையில் பணியாற்றும் வைத்திய நிபுனர்களில் சிலர் செய்யும் மனித நேயமற்ற செயல்களால் யாழ்ப்பாண வைத்தியத்துறை தலை குனிந்து நிற்றல் வேண்டும்.

அண்மையில் குழந்தைப் பேற்றிற்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் இரட்டைக் குழந்தைகளுடன் சேர்ந்து மரணமானார். யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுனராகக் கடமையாற்றும் சுரேஸ்குமாரிடம் தனியார் வைத்தியசாலையான ஹோலிக்குறோஸ் மருத்துவமனையில் மாதந்தோறும் பரிசோதிக்கப்பட்டு இறுதியில் அவராலேயே இறந்து போனார் இளம் தாய் ஒருவர்.

வயிற்றில் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து சந்தோசப்பட்ட தாய்க்கு இவர் கொடுத்த பரிசு குழந்தைகளுடன் தாயையும் சேர்த்துக் கொலை செய்ததுதான்.

இன்னொரு கொலை யாழ் போதனா வைத்தியசாலையின் 22ம் விடுதியில் நடைபெற்றது. வைத்திய நிபுனர் சுரோஸ்குமாரின் பொறுப்பில் இருக்கும் விடுதியில் அண்மையில் இன்னொரு தாய் குழந்மை பெறும் போது இறந்துள்ளார். இவருக்கு இரத்த அழுத்தம் இருந்துள்ளது. இவ்வாறான நிலையில் இவரது வயிற்றில் இருந்த குழந்தையின் நஞ்சுக் கொடி என சாதாரண மக்களால் கூறப்படும் பகுதி கீழ் இருந்ததால் நிச்சயம் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருந்ததாகவும் கூறப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

மகப்பேற்று நிபுனர் சுரேஸ்குமாரிடம் சில கேள்விகள்?

1) உயர் குருதி அமுக்கம் உடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கு எவ்வாறு சிசேரியன் செய்வது என்பது உலக நாடுகளில் இன்னும் அறியப்படவில்லையா???

2) உயர் குருதி அமுக்கம், மற்றும் நஞ்சுக் கொடி படருதல் என்பனவற்றால் உலக நாடுகளில் அவ்வாறான பிரச்சனைகள் உள்ள அத்தனை தாய்மார்களும் பலியாகின்றார்களா??

3) ஒருசில சத்திரசிகிச்சைகள் பலனின்றிப் போவதை பெரிதாகக் காட்டப் போகின்றீர்களா என எம்மை நீங்கள் ஏளனப் படுத்தலாம். ஆனால் வாகனங்கள், விமானங்கள், புகையிரதங்கள் செலுத்தும் சாரதிகளும் தினந் தோறும் விபத்தை ஏற்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு சில தடவைகள் தான் விபத்து ஏற்படும். அது சாரதியால் ஏற்பட்ட கவணக் குறைவு எனின் நீதிமன்றம் கடும் தண்டனைகள் வழங்கும். இது உங்களுக்கும் பொருந்துமா??

4) இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்ணிடம் இருந்து ஒரு குழந்தையைக் களவாடி அதனை விற்றதாக மகப் பேற்று நிபுனர் பவானி அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வழக்கு அவர் சாகும் வரை நடைபெறும். அவ்வாறு உங்களது இந்த தவறு நீதிமன்றத்தில் கையாளப்படும் என நினைத்து நீங்கள் சந்தோசப்படுகின்றீர்களா???

5) இறந்த தாய்மார்களது மருத்துவக் குறிப்பில் நீங்கள் பார்வையிட்டவை தொடர்பான தகவல்களும், அத் தாய்மாருக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்பதையும் சரியாக எழுதி வைத்திருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு கொலையா???

6) இரட்டைச் சகோதரர்களுடன் தாயைக் கொலை செய்த உங்களுக்கு அந்தக் குடும்பத்திடம் இருந்து ஹோலிக்குறோஸ் மருத்துவமனை வாங்கிய பணத்தில் எவ்வளவு கிடைத்தது? அந்தப் பணத்திற்கு நீங்கள் எங்கு முதலீடு செய்துள்ளீர்கள்???

7) நீங்கள் செய்த கொலைகளுக்கு நிச்சயம் தகுந்த காரணங்களைத் தேடி கண்டு பிடித்து ‘மெடிக்கல் ரேம்ஸ்’ வார்தைகளைப் பிரயோகித்து உங்களில் ஒரு வித சிறு தவறும் இல்லை என்பது போல் காட்டிக் கொள்ள முயல்வீர்களா????

8) மகப்பேற்று அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி என ஊடகவியலாளர்களான நாங்கள் யூரிப் இணையத்தில் பார்த்து கொஞ்சம் அறிந்துள்ளோம். முடிந்தால் நீங்களும் இணைத்தளங்களுக்கு சென்று சிலவற்றைக் கற்று மக்களுக்கு சரியான முறையில் அறுவைச் சிகிச்சைகளை அளிப்பீர்கள் என நம்புகின்றோம்.

9) ஊடக தர்மத்துடன் செயற்படும் ஒரு ஊடகமானது சம்மந்தப்பட்ட அனைவரிடத்திலும் தகவல்கள் சேகரிக்க வேண்டும். அதன் பின்னர் சரியான முறையில் தனி நபர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது செய்திகளை வெளியிட வேண்டும். ஆனால் அவ்வாறு நாங்கள் உங்களிடமும் விளக்கம் கேட்டு உங்கள் பெயரைப் போடாது வெளியிட்டால் நீங்கள் இன்னும், இன்னும் பல கவலையீனக் கொலைகள் செய்வீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா???

மகப்பேற்று வைத்திய நிபுனர்களான சுரேஸ்குமார், சிறீதரன், பவானி, போன்றோருக்கு யாழ் போதனா வைத்தியசாலையையில் பணியாற்றுவதால் வரும் சம்பளம் அவர்களின் பொக்கற் மணியாக கருதப்படுகின்றது. தனியார் வைத்தியசாலைகள், மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்களில் இவர்கள் ஒரு நோயாளரைப் பார்ப்பதற்காக எடுக்கும் கட்டணம் 650 ரூபாவாகும். ஒரு சிகிச்சை நிலையத்தில் நாளொன்றுக்கு குறைந்தது 20 நோயாளர்களுக்கு மேல் இவர்கள் பார்வையிடுகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளால் இவர்களுக்கு வரும் நாள் வருமானம் 20 ஆயிரத்திற்கு மேல் ஆகும்.

இவ்வாறன வருமானம் பெறும் இவர்கள் நோயாளர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்குகின்றார்களா???? கடவுளாகக் கருதி இவர்களிடம் வரும் நோயாளர்களை அரக்க மனம் கொண்டு சரியான கவனிப்பின்றி கொலை செய்வது சரியா???

யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் தற்போது ஹோலிக்குறோஸ் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை செய்வதை தடை செய்துள்ளார். குறிப்பிட்ட வைத்தியசாலையில் முழுமையான அறுவைச் சிகிச்சைக் கருவிகள் பொருத்தப்பட்ட பின்னரே இவ் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை நடாத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இன்னொரு சந்தேகம் என்னவெனின் அவரும் கை நிறைய லஞ்சம் வாங்குகின்றாரா? என்பதே தான்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் ஹோலிக்குறோஸ் வைத்தியசாலை தவிர ஏனைய தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றிலும் இவ்வாறான அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அவற்றில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, பிலிப்நோசிங்கோம், யாழ் வைத்தியசாலை, நொதேன் நேசிங்கோம் போன்றவற்றில் இவ்வாறு சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதாகத் தெரியவருகின்றது. அங்கேயும் இவ்வாறான இறப்புகள் நடைபெறும் வரை அவற்றை தடைசெய்தாது விட்டுள்ளாரா என்பதே எமது சந்தேகம். பொதுவாக யாழ் போதனா வைத்தியசாலையைத் தவிர அறுவைச் சிகிச்சைகள் செய்யும் ஏனைய வைத்தியசாலைகளில் பூரனமான வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கேதீஸ்வரனுக்கும் தெரியும். அப்படியாயின் ஏன் அவர் ஏனைய வைத்தியசாலைகளைத் தடைசெய்யவில்லை. பூரனமான அறுவைச் சிகிச்சை வசதிகள் வரும் வரை அவற்றையும் தடைசெய்தல் அவசியமாகும்.

எம்மால் அறியப்பட்ட சில முக்கிய தகவல்கள்

1) ஹோலிக்குறோஸ் மருத்துவனையில் இருந்து இறந்து போன இரட்டைக் குழந்தைகளின் தாயை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே அத் தாயின் நுரையீரல்கள் செயலிழந்து போய் விட்டதாகவும் அரையுயிருடனேயே கொண்டு வந்ததாகவும் தெரியவருகின்றது.

2) இரட்டைக் குழந்தைகளை சுமந்த தாய் தனக்கு வயிற்றில் துடிப்புக் காணப்படவில்லை என ஹோலிக்குறோய் மருத்துவமனையில் இருந்த வைத்தியருக்குத் தெரிவித்த போது அவ் வைத்தியர் அதனை மறுத்து குறித்த தாயை ஏசியுள்ளார்.

3) ஹோலிக்குறோஸ் மருத்துவமனையில் கடமையாற்றும் தாதியர்களில் பலர் 8ம் வகுப்பும் ‘பாஸ்’ பண்ணாதவர்கள் எனத் தெரியவருகின்றது.

4) இவ்வாறு ஏனைய தனியார் மருத்துவமனைகளிலும் கடும் சுகவீனமடைந்து சாகும் தறுவாயிலேயே யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை அத் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர் அனுமதிப்பதாகத் தெரியவருகின்றது.

5) சுரேஸ்குமார் உட்பட முக்கிய சத்திரசிகிச்சை நிபுனர்கள் தனியார் வைத்தியசாலைகளில் மாலை 3 மணிக்கே சென்றடைந்துவிடுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்காக…

http://thaaitamil.com/?p=36682

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.