Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள் மாணவர்கள் தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள் மாணவர்கள் தாக்குதல்.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 2, 2012 AT 00:10

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட சித்தமருத்துவ தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்.

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் சிறுபான்மையாக 25 இருக்கும் தமிழ் மாணவர்கள் மீது பெரும்பான்மை இன 200- 240 மாணவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்ட வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக வளாக நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கைகளையும“ எடுக்க முன்வரவில்லை எனத் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 27.10.2012 அன்று இரு தமிழ் மாணவர்கள் தாக்குதல்களுககு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று திரும்பினர். மீண்டும் நேற்று 31.10.2012 காலை வேறு சில மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளது.

மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி திருகோணமலை நகர்ப் பகுதியிலும் விரிவுரைகள் நடைபெறுவது 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில். இவர்களை விடுதியிலிருந்து வளாகத்திற்கு செல்வதற்கென பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட பேரூந்து சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது.

நேற்று வழமைபோல் சென்ற போது பேரூந்தில் ஒட்டப்பட்டிருந்த புத்தர் உருவப் படமொன்று கிழிந்து காணப்பட்டது. இதனை தமிழ் மாணவர்கள் தான் கிழித்துள்ளார்கள் எனத் தெரிவித்து பேரூந்து வளாகத்தைச் சென்றடைந்ததும் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரியவருகிறது.

பேரூந்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு சாரதியும் அதன் நடத்துனருமே பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இருக்க, அவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் தமிழ் மாணவர்கள் இதனைச் செய்துள்ளார்கள் எனக்கூறியே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கு பெற்றுள் இம்மாணவர்களின் நடத்தை காணரமாக இங்கு கல்வி பயில செல்வதற்கு தமிழ் மாணவர்கள் தமத அச்சத்தை வெளியிடடள்ளனர்.

நேற்றைய தாக்குதலையடுத்து மாணவர்கள் எவரும் விடுதிக்கு செல்லவில்லை. தமிழ் மாணவர்களை இந்த வளாகத்திலிருந்து வெளியேற்றுதல் அல்லது திருகோணமலையில் அமைந்துள்ள இந்த வளாகத்தை சிங்களப் பகுதிக்கு மாற்றுவதற்காக சிங்கள மாணவர் இதனைத் திட்டமிட்டுச் செய்வதாகவும் தெரியவருகிறது

இந்த வளாகத்தில் சித்தமருத்துவம், தொடர்பாடல், மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகள் செயற்பட்டுவருகின்றன. இங்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களைக் கொண்டதால் அவர்களின் விரும்பு வெறுப்புக்கு ஏற்பவே விரிவுரைகளும் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://thaaitamil.com/?p=37261

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.