Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ தளபதி வருகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sing(1).jpg

[size=2][size=4]இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு எதிராக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலேயே இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, இரு தரப்பு இராணுவ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்திய இராணுவ தளபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

"எதிர்வரும் டிசெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எனினும் அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்கள் தொடர்பில் இரு தரப்புகளும் தீர்மானிக்கும்" என இராணுவ தகவல்கள் தெரிவித்தன.

இந்திய இராணுவ தளபதியின் இந்த விஜயத்தின் போது கூட்டு பயிற்சி, இராணுவ உபகரணம் மற்றும் பயிற்சிகள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றான விடுதலை புலிகளை ஒழித்த அனுபங்களையும் இலங்கையிடமிருந்து அவர் பெற்றுக்கொள்ளவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size]

[size=4]http://www.tamilmirr...4-08-09-39.html[/size]

[size=5]கொழும்பு செல்லும் இந்திய இராணுவத் தளபதியின் நிகழ்ச்சி நிரலில் புலிகள் பற்றிய விவகாரமும்[/size] [size=4]GEN-BIKRAM-SINGH.jpgஇந்திய இராணுவத்தளபதி ஜெனரல் பிக்ரம்சிங் அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவுடன் எந்தவொரு இராணுவ ஒத்துழைப்பையும் இந்தியா வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே ஜெனரல் பிக்ரம்சிங் கொழும்பு செல்லவுள்ளதாக பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம்சிங் கொழும்பு செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பயிற்சி, போர்த்தளபாடங்கள், கூட்டுப்பயிற்சிகள் தொடர்பான ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக ஜெனரல் பிக்ரம்சிங் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்திய அனுபவங்கள் குறித்தும் அவர் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய, சிறிலங்கா இராணுவங்கள் இணைந்து அடுத்த ஆண்டு கூட்டுப்பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளன.

இது குறித்தும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்தழைப்புத் தொடர்பாகவும் கடந்தமாதம் புதுடெல்லி சென்ற கோத்தாபய ராஜபக்சவுடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், இந்திய பாதுகாப்புச் செயலர் சசிகாந்த சர்மாவும் கலந்துரையாடியிருந்தனர்.

சிறிலங்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு உறவுகளையும் வைத்துக் கொள்வதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், அடுத்த ஆண்டில் இருநாட்டு கடற்படைகளும் கூட்டுப் பயிற்சியை நடத்தவுள்ளன.

எனினும், தென்மாநிலங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவற்றுக்கு வெளியே இந்த கூட்டுப் பயிற்சியை நடத்துமாறு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிஐ தெரிவித்துள்ளது.[/size]

[size=4]http://www.puthinappalakai.com/view.php?20121104107240[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.