Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு களம் அமைக்கும் கண்டு பிடிப்பாளர் தேடல்- 2012 கண்காட்சி

Featured Replies

[size=2][size=4]இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.[/size][/size]

[size=2][size=4]யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் - 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர் பி.ஜோன்சன் தலைமையில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.[/size][/size]

[size=2][size=4]இக் கண்காட்சியில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் மாணவர்களினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தனியார் கண்டுபிடிப்புக்களும் இதன் போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2][size=4]விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மிதிவெடி அகற்றும் புதிய கருவிகள், மரத்தில் செதுக்கப்பட்ட தலைவர்களின் உருவப்படங்கள் உட்பட பல்வேறு புதிய கருவிகள் 60 காட்சியறைகளில் வைக்கப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2][size=4]இக் கண்காட்சி தொடர்பில் தலைவர் ஜோன்ஸ்சன் தெரிவிக்கையில்,[/size][/size]

[size=2][size=4]இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கும், தமிழர் திறமையினை உலகறியச் செய்யவும் இக் கண்காட்சிகள் நடாத்தப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]இதில் 15 பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன. முன்னர் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களது உபகரணங்கள் மாகாணமட்டத்தில் காட்சிப் படுத்தப்பட்டது.[/size][/size]

[size=2][size=4]அதிலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களது உபகரணங்கள் தேசிய மட்டப் போட்டியில் காட்சிப் படுத்தப்பட்டது அவ்வாறான 50 மாணவர்களது புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இதன் போது பார்வையாளர்களால் முக்கியப்படுத்தப்பட்ட சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உரிய இலக்கங்களை அதற்கு உரிய பெட்டியில் இடவேண்டும். அதன்படி தெரிவாகும் 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படும்.[/size][/size]

[size=2][size=4]கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பரிசில்களும் வழங்கப்படவுள்ளது என்றார்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை, கண்காட்சியினைப் பார்வையிட வந்திருந்த மாணவர்களிடம் இது தொடர்பில் கேட்கும் போது,[/size][/size]

[size=2][size=4]பாடசாலை மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. ஏனெனில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இதனை அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் மற்றைய மாணவர்களும் இது போன்ற கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவதற்கு இது சிறந்த களமாகும். [/size][/size]

[size=2][size=4]நாம் இதுவரை பார்த்திராத சில கண்டுபிடிப்புக்களும் உள்ளன. எமக்குத் தேவையானதொரு கண்காட்சியாகவே இது அமைந்துள்ளது என்றனர்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=505461592308816381

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]இவ்வாறான முயற்சிகளுக்கு திட்டங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்னாள் பாடசாலை அமைப்புக்கள், ஊர் சங்கங்கள், நலன் விரும்பிகள் செயல்படலாம். [/size]

இணைப்புக்கு நன்றி அகூதா.

எம் இளைய சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள விஷயம். தேடல் என்று தொடங்கும் போது தான் மாணவர்களின் தனிப்பட்ட திறமை வெளிவர வாய்ப்புக்கள் அமையும்.

  • தொடங்கியவர்

[size=4]உலகிலே தேடலை Resarach and Development ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் முதலாவதாக நிற்பது - அமேரிக்கா. [/size]

[size=1]

[size=4]தனது நாட்டின் உற்பத்தி திறனில் GDP அதி கூடிய பங்கை இந்த புதிய தேடலுக்கு ஒதுக்குகின்றது அத்துடன் பல வேறு வரி சலுகைகள், மானியங்களை தருகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]அண்மையில் புதிய தேடல்களை முயற்சி செய்து தோல்வி அடைந்தவர்களுக்கும் நிதி உதவிகளை வழங்கி ஊக்குவித்தது. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]யாழ் இளைய சமுதாயத்தின் கல்வி திசைமாறிச் செல்கிறதா ?[/size]

[size=4]இக்கால இளம் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவிகள் அவர்களின் வாழ்க்கைப் பயணம் செல்லும் பாதை சரியா கலாச்சார மாற்றம் என்ன போரில் ஏற்பட்டு வரும் சீரழிவிற்கு பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது பெண்களில் 90% பாடசாலை மாணவிகளே. சிறுவயதில் கருத்தரிக்கிறார்கள். இது ஒரு அதிர்ச்சித்தகவல் தான். என்ன செய்வது நம் இளைய சமுதாயம் எதை நோக்கிச் செல்கிறது. யாழ் மண்ணிற்கு இவர்கள் என்ன நன்மை செய்யப் போகிறார்கள்.[/size]

[size=4]யாழ். மண்ணின் தனித்துவம் இப்படியே மங்கிவிடுமா என்ன? ஒரு அரசியலை, எம் யாழ். மண்ணின் தனித்துவத்தை, அழகை, பெருமையை உடைத்தெறியும் நோக்கம் ஒரு அரசியல் தந்திர உபாயமாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அரசு யாழ். மண்ணிற்கு சுற்றுலாத்துறை கேளிக்கை நிகழ்ச்சிகளை யாழ்ப்பாணத்தில் ஏன் புகுத்த வேண்டும். [/size]

[size=4]ஏன் அடிக்கடி கேளிக்கை நிகழ்ச்சிகளை யாழ் மக்களிற்கு புகுத்த வேண்டும். எங்கு இனப் பிரச்சினையும் கொடூரமும் இருந்ததோ அங்குதான் இவற்றையெல்லாம் செயற்படுத்த வேண்டும். அவர்கள் தான் மகிழ்ச்சியுற்று வாழ்வார்கள். அவர்களுக்கு அது தேவைதான். அது எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வல்ல எம்மண்ணின் தனித்துவத்தை அடியோடு பிடுங்கி எறிய சில இராஜதந்திரிகள் போட்ட திட்டம்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.