Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Argo (2012) – English

Featured Replies

01_argo_wallpaper_1920x1200-960x600.jpg

01_argo_wallpaper_1920x1200-300x187.jpg

ஆல்ரெடி ஆயிரம் தடவைகள் எடுக்கப்பட்ட அதே ஃபார்முலாவை வைத்து ஒரு நிமிடம் கூட அலுக்காத படம் ஒன்றை எடுத்திருக்கிறார் பென் ஆஃப்லெக். அவரே நாயகனும் கூட.

இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவம்.

நவெம்பர் 1979லிருந்து ஜான்வரி 1981 வரை – 444 நாட்கள், இரானின் அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்ட அதன் அலுவலர்களையும், அதிலிருந்து தப்பி அருகாமையில் கனடா தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஆறு நபர்களையும், அவர்களைக் காக்க அமெரிக்க அரசு எடுக்கும் முயற்சிகளையும் பற்றிய படமே ‘Argo’.

இரானை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டு வந்த மொஹம்மத் ரேஸா பஹ்லாவி என்ற இரானின் மன்னர் (ஷா), 1979 ஃபெப்ருவரியில் நடந்த கிளர்ச்சி ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். இவர் அமெரிக்க அரசின் பொம்மையாக இருந்துவந்தவர். இரானின் ரகசிய உளவு நிறுவனம் SAVAKகின்(Sāzemān-e Ettelā’āt va Amniyat-e Keshvar – Organization of Intelligence and National Security) போலீஸாரை அமெரிக்க CIAவே பயிற்சி கொடுத்தது (இது அமெரிக்காவின் Standard template). இரானிய ஷாவை தடவிக்கொடுத்து வளர்த்துவந்த அமெரிக்காவின் கில்லாடி வள்ளல் வேலைகள் இரானின் ஊரறிந்த ரகசியமாக இருக்க, மெதுவே மக்களிடையே தொடங்கிய முணுமுணுப்பு மாபெரும் கிளர்ச்சியாக வெடிக்க, ரேஸா தூக்கியெறியப்பட்டார் (உண்மையில் ஊரைவிட்டே ஓடி ஊர் ஊராக திரிந்து, அடுத்த வருடத்தில் எகிப்தில் இறந்தார்). இப்படி ஷா மக்களால் வெறுக்கப்பட பல காரணங்கள். அவற்றில் ஒன்று – டிஸம்பர் 1977ல், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஜாலியாக தொலைக்காட்சியில் ஷாம்பெய்ன் டோஸ்ட் ஒன்றை ரேஸாவுக்கு அளித்ததே. டோஸ்ட்டைக் கொடுத்த கையோடு, இரானின் மக்களால் மிகவும் விரும்பப்படுபவர் ரேஸா என்று வேறு உளறிவைத்தார் கார்ட்டர். உடனடியாக மக்களின் கோபத்துக்கு ரேஸா ஆளாகி, ஊரைவிட்டே இதனால் ஓடவேண்டி வந்தது.

இந்த 1979 புரட்சியின் நாயகர் – அயதுல்லா கோமெய்னி. பல்லாண்டுகள் இரானின் ஷாவை எதிர்த்துத் தலைமறைவாக இருந்துகொண்டே குடைச்சல் கொடுத்தவர். ’ரேஸா ஷாவாக இருக்கும்வரை இரானுக்குள் நுழையமாட்டேன்’ என்று சொல்லி, அதன்படியே இராக்கிய நகரமான நஜாஃபில் இருந்துவந்தவர். இரானிய மக்களால் ஒரு ஹீரோ போலக் கொண்டாடப்பட்டவர். டைம் பத்திரிக்கையின் Man of the Year – 1979. இவரைப் பற்றி விகிபீடியாவில் விபரமாகப் படித்துக்கொள்ளவும்.

நமக்குத் தேவையான தகவல் – 1979 நவம்பரில் அமெரிக்காவுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. இதன் காரணமாக, இரானின் அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அதிலிருந்த அத்தனை அமெரிக்கர்களும் அங்கேயே சிறை வைக்கப்பட்டனர். இந்த சிறைவாசம் 444 நாட்கள் நீடித்தது என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால், தூதரகம் சூழப்பட்டபோது அதிலிருந்து ஆறு அமெரிக்கர்கள் தப்பி, கனடா தூதரகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இந்த ஆறு பேரின் பொறுப்பை கனடா அரசாங்கம் ஏற்றது. ஒருவேளை இவர்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், கனடாவின் தூதராக அப்போது இருந்த கென் டைலர் தூக்கிலிடப்பட்டிருப்பது உறுதி. தன் உயிரைப் பணயம் வைத்து இந்த செயலை செய்தார் அவர். மொத்தம் 79 நாட்களுக்கு இந்த ஆறு பேரும் ரகசியமாக ஒளித்துவைக்கப்பட்டிருந்தனர். அதேபோல், இந்த ஆறுபேரை மட்டுமல்லாது சிறைப்பட்டிருந்த பிற ஊழியர்களை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொள்ள முயலாத அமெரிக்க அரசு, படுமெத்தனமாக செயல்பட்டதே இந்த 444 நாட்களுக்குக் காரணம்.

கனடா தூதரகத்தில் ஒளிந்திருந்த ஆறு பேரைக் காப்பாற்றி அமரிக்கா அழைத்துவருவதற்கு, CIAவின் infiltration expert டோனி மெண்டெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாலியாக உள்ளே போய் ஆறு பேரை அழைத்துக்கொண்டுவர முடியாதல்லவா? ஆகவே அப்போது உருவான கதைதான் Argo.

என்னவென்றால், ஹாலிவுட்டில் Argo என்ற பெயரில் ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், அந்தப் படத்துக்கு லொகேஷன் பார்ப்பதற்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஆறு கனடா குடிமக்கள் இரான் வந்ததாகவும், லொகேஷன் பார்த்துவிட்டு கனடா திரும்புவதாகவும் ஒரு ‘போலி’ திரைக்கதை தயார் செய்யப்பட்டது. ஆறு பேருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டது. இயக்குநர், திரைக்கதையாசிரியர், ப்ரொடக்‌ஷன் டிஸைனர், அஸோஸியேட் ப்ரொட்யூஸர், கேமராமேன் போன்ற பொறுப்புகள். இதற்காக ஆறு ஃபைல்கள் ரெடி செய்யப்பட்டு, போலி பெயர்களில் பாஸ்போர்ட், விஸா ஆகியவையும் கனடா அரசாங்கத்தால் தயார் செய்யப்பட்டன. CIA உதவியோடு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போலி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் பிறப்பு முதல் அந்த நிமிடம் வரை அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற அத்தனை விபரங்களும் தயார். இந்த ஃபைல்களை பத்திரமாக இரான் சென்று இந்த அறுவரிடமும் அளித்து, அவர்களை தயார் செய்து, தப்புவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டோனி மெண்டெஸ், இரான் சென்றார்.

முன்னதாக, ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருது வாங்கிய மேக்கப் நிபுணர் ஜான் சேம்பர்ஸ் CIAவினால் தொடர்பு கொள்ளப்பட்டார். ஏனெனில், ஹாலிவுட்டில் ஒரு போலி தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்படவேண்டியிருந்தது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள்தான் அந்த அறுவரும் என்று ‘திரைக்கதை’ தயார் செய்யப்பட்டதால். இந்த ‘டுபாக்கூர்’ நிறுவனத்துக்கு ஒரு தொலைபேசி நம்பரும் அளிக்கப்பட்டது. என்னேரமும் அதில் பேசி சந்தேகம் வராமல் பதிலளிக்க ஜான் சேம்பர்ஸ் தயாராக இருந்தார்.

இந்த ‘டுபாக்கூர்’ திரைப்படத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைக்கதையின் பெயர் – Lord of Light. அதே பெயரில் வெளிவந்திருந்த நாவல் ஒன்றின் திரைக்கதை அது. பின்னர் CIAவின் வசம் இந்த ப்ராஜெக்ட் வந்தபோது, Argo என்ற பெயரை இந்த எடுக்கப்படாத படத்துக்கு சூட்டினர்.

ஆக, இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் fake experience தயார் செய்வதுபோல், சிறைப்பட்ட அறுவரைக் காக்க பின்னணித் தகவல்கள் அத்தனையும் போலியாக அமெரிக்க அரசாலும் கனடா அரசாலும் தயார் செய்யப்பட்டன.

இத்தனை பின்னணியுடன் ஒரு தயாரிப்பாளராக வேடமிட்டு, இரான் சென்று இறங்கினார் CIAவின் டோனி மெண்டெஸ்.

இதன் பின்னர் என்ன ஆனது? அறுவரும் தப்பித்தார்களா அல்லது மாட்டினார்களா?

Argo பாருங்கள்.

நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் செல்லும் இந்தப் படத்தின் திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்தது. க்ரிஸ் டெர்ரியோ(Chris Terrio) என்ற மனிதர் இதை எழுதி, வசனங்களில் கலக்கியெடுத்திருக்கிறார். படம் நெடுக சிரித்துக்கொண்டே இருக்கலாம். உத்தரவாதம். அதேபோல் படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் – கனகச்சிதமான நடிகர் தேர்வு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், மெனக்கெட்டு நடிகர்களைத் தேர்வு செய்திருப்பது கண்கூடு.

டோனி மெண்டெஸாக பென் ஆஃப்லெக். அவரது இதுவரையிலான படங்களில், அவரை எனக்கு சுத்தமாகவே பிடிக்காது. அதனாலேயே Goodwill Hunting, Reindeer Games ஆகிய படங்களை மிக மிக லேட்டாகப் பார்த்தேன் (ஆனால் Daredevil சீக்கிரமாகப் பார்த்து மண்டை கலங்கினேன்). அவரை இப்போதுதான் – இந்தப் படத்தில்தான் எனக்குப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக, தாடியுடன் கூடிய அவரது கெட்டப். அவரே இயக்குநராகவும் இருப்பதால், படத்தை திரைக்கதையின் வேகத்துக்கு ஏற்ப நகர்த்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பெரிதாக எந்தப் புதுமையும் இல்லை. அதே ஹாலிவுட் மசாலா. ஆனால், ஒவ்வொரு காட்சியும் படுவேகமாக நகர்வதில் இப்படம் வெற்றிபெற்றிருக்கிறது. நல்ல த்ரில்லர்.

Argo – Fuck Yourself! (பயந்து விடாதீர்கள். இந்தப் படத்தில் விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் ஒரு டயலாக் இது).

பி.கு

1. உண்மையில் இந்தப் படத்தில் வருவதுபோல, அமெரிக்கா ஹீரோ வேலை செய்யவில்லை. எல்லாவற்றையும் செய்து ஆறு பேரை பெர்ஸனலாகவே பரிவுடன் பார்த்துக்கொண்டது கனடா அரசாங்கம். வழக்கப்படி ஹாலிவுட்டில் அதை உல்டா செய்து இந்தப் படத்தில் அமெரிக்காவை ஹீரோ ஆக்கிவிட்டனர் (ஆனால் டோனி மெண்டெஸின் முயற்சிகள் நிஜம் – கனடா அரசாங்கத்தின் உதவியோடு).

2. படத்தின் வசனங்கள் – தவறவே விட்டுவிடாதீர்கள். செம்ம காமெடி.

3. படத்தில் நாயகன் Tony Mendez வேடத்துக்கு முதலில் இயக்குநர் பென் ஆஃப்லெக்கினால் தேர்வு செய்யப்பட்டவர் – ப்ராட் பிட்

http://karundhel.com/2012/11/argo-2012-english.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Quote: "Fuck Yourself! (பயந்து விடாதீர்கள். இந்தப் படத்தில் விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் ஒரு டயலாக் இது)"

இந்த வசனம் என்னையும் சிரிக்க & சிந்திக்க வைத்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.