Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன்

17 நவம்பர் 2012

விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா

நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.

புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒரு தமிழ்-சிங்களப்படமும், தமிழகத்திலிருந்து இரண்டு தமிழ்ப்படங்களும் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து திரையிடப்பட்ட ஐந்து குறும்படங்களையும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நான் பார்த்திருந்தேன்.

எனது அனுபவத்தில் புகலிடத்தின் படங்களுக்கும், தமிழக-இலங்கைப் படங்களுக்கும் இடையில் பெரும் வித்தியாசத்தினைப் பார்க்க முடிந்தது. தமிழக-இலங்கைத் திரைப்படங்கள் அதிகமும் உணர்ச்சிவசமும் மனோரதியமும் நாடகீயமும் கொண்டவைகளாக இருந்தன. தமிழக-இலங்கை அரசியல் அனுபவங்கள் என்பது துப்புரவாகவே இல்லை. தமிழகம்-இலங்கை என இரண்டிலும் நம் காலத்தின் குறிப்பான அனுபவங்கள் என்பது திரையாக்கத்தில் இடம்பெறவில்லை.

புகலிடக் குறும்படங்கள் என்பது கதைத் தெரிவிலும் கதை கூறலிலும் தொழில்நுட்பம் தேர்ச்சியிலும் கச்சிதத்தன்மையைக் கொண்டிருந்தன. திரையிடப்பட்ட புகலிடத்தின் ஐந்து குறும்படங்களும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவை என்பது தற்செயலானது இல்லை. திரைப்படத்தைக் கலையாகவும் சமூக அனுபவமாகவும் பயிலும் ஒரு தலைமுறை பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டு எழுந்திருக்கிறது. தொடர்ந்தும் கணிசமாகவும் திரைப்படங்களைத் தரும் சதா பிரணவன், ஐவி ஜனா, பாஸ்கரன் போன்ற தனித்துவம் கொண்ட கலைஞர்களை, தேசுபன் எனும் தனித்தன்மை கொண்ட படத்தொகுப்பாளனை பிரான்ஸ் உருவாக்கியிருக்கிறது.

திரைப்படத்தனை கூட்டுக்கலையாகப் புரிந்து கொண்ட கலைஞர்களாக பிரான்சின் குறும்படக் கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். புகலிட அனுபவங்களை நுணகிப் பார்ப்பதோடு உக்கிரமான அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாகவும் இக்கலைஞர்கள் இருக்கிறார்கள். பிரான்சிலிருந்து நேர்த்தியான குறும்படங்கள் வெளியாக இதுவே காரணமாக இருக்கிறது.

சிறந்த பிரதேசப் படங்களுக்கான விருதுளை பொன். தயா இயக்கிய நகல்(புகலிடம்), வசந்த்குமார் இயக்கிய தமில்(தமிழகம்), சுஜீதன் இயக்கிய அடிவானம்(இலங்கை) போன்றன பெற்றுக் கொண்டன. சிறந்த நடிகருக்கான விருதை சதா பிரணவனும் (போராளிக்கு இட்ட பெயர்), சிறந்த நடிகைக்கான விருதை பொன்.தயாவும்(நகல்), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜெகன் கரிசும்(அடிவானம்), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தேசுபனும்(தினப் பயணங்கள்), சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன். கேதாரன்(செம்மலையான்). பார்வையாளர்களின் சிறந்தபடத் தேர்வுக்கான விருதை மீளவும் பொன்.தயாவும்(நகல்) பெற்றுக் கொண்டார்கள்.

விருதுத்தேர்வுகளின் பின்னிருந்த புகலிட இரசனை சார்ந்த மனநிலை திரைப்பட விமர்சகனாக என்னைத் துணுக்குற வைத்தது. தமிழக சினிமாவின் நீட்சியாகவே தமிழக-இலங்கைப் படங்களை என்னால் பார்க்க முடிந்தது. கண்ணீரின் சினிமா என இதனைக் குறிப்பிடலாம். உணர்ச்சிவசமும் நாடகீயமும் இதனது பிரதான பண்புகள். நகல் குறும்படம் புகலிடத்துக்கே உரிய கதைக் கருவைக் கொண்டிருந்தாலும், ‘அதீதமான பார்வையாளர் ஏற்பு மனநிலை’ தமிழக சினிமா இரசனையின் பின்னிருந்த மனநிலை என்றே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

கடந்த தசாப்த காலத்தினை தமிழகம்-புகலிடம்-ஈழம் என தமிழ்ச் சிந்தனைச் சூழலில் குறும்படம் எனும் வகையினம் உருவாகிவந்த காலம் எனலாம். குறும்படத்தைப் புரிந்துகொள்வதில் தமிழகத்தில் இரு சிந்தனைப்பள்ளிகள் இருந்தன. முழுநீளப் படத்திற்கான நுழைவுச்சீட்டாக குறும்படத்தைப் பார்க்கும் பார்வை ஒன்று. புதிதாக உருவாகிய தகவல் தொழில்நுட்ப ஊடகவியல் கல்லூரிகளும் பகாசுரத் தொலைக்காட்சிகளும் இதனை ஊட்டி வளர்த்தன. பிறிதொரு பார்வை அதுவரையிலும் திரைப்படத்தினை கையகப்படுத்த முடியாதிருற்த விளிம்பு நிலையாளர்களின் வெளிப்பாட்டு வடிவமாகக் குறும்படத்தைப் புரிந்துகொண்டிருந்த பார்வை.

ஈழத்திலும் நிதர்சனம் தொலைக்காட்சி உருவாக்கிய குறும்படங்களும், நியூஸ் ரீல் உருவாக்கிய குறும்படங்களும் புகலிடப் படங்களும் இரண்டாவது சிந்தனைப் பள்ளி சார்ந்தே எழுந்தது. புகலிடத்தைப் பொருத்து பிரான்சிலிருந்து இன்று வெளியாகும் படங்கள் - குறுகிய கால தேக்கத்தின் பின் - அதனது தர்க்க நீட்சியாக இருக்கிறது. தமிழக-இலங்கைக் குறும்படங்கள் இந்த வகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாளைய இயக்குனர்கள் போன்ற குறும்படத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதற்கான ஒரு காரணமாக இருக்கிறது எனக் கருத வேண்டியிருக்கிறது. இந்த வகையில் திரையிடப்பட்ட தமிழக-இலங்கை குறும்படங்கள் சோர்வான மனநிலையையே தந்தன. குறிப்பாகத் திரையிடப்பட்ட சிங்களக் குறும்படங்கள் எந்தவிதமான தனித்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.

எப்போதுமே திரைப்படப் பார்வை அனுபவத்தில் நேர்த்தியை விரும்பும் எனக்குச் சில விடயங்கள் பதட்டத்தைத் தந்தது. திரைச்சட்டகம் அரங்க மேடையின் மையத்தில் இல்லை. முன்பகுதித் திரைநேரத்தில் திரையிடல் பரப்பின் இடதுபக்கம் கால்பகுதித் திரையை விருதுமேசையும் விருதுகளும் மறைத்துக் கொண்டிருந்தது. அது படங்களின் துணைத் தலைப்புக்களை மறைத்துக் கொண்டிருந்தது.

திரைச்சட்டகத்தின் இடப்பக்கம் உள்ள திரை படியாமல் இருந்தது.

செம்மலையான் திரைப்படத்தினை நான் ஏற்கனவே பிறிதொரு திரைப்பட விழாவில் நடுவராக இருந்து பார்த்திருந்ததால் அதனது ஒளிப்பதிவுத் தரம் என்பது இந்தத் திரையிடலில் இருக்கவில்லை என்பதனை உணர முடிந்தது. அதுவும் ஒளிப்பதிவுக்காக விருதினைப் பெற்ற ஒரு படத்தின் திரையிடலில் இது நிகழ்ந்திருந்தது பார்வையாளனாக எனக்கு உறுத்தலாக இருந்தது.

கனடாவில் திரையிடப்பட்ட செம்மலையான் திரைப்பிரதி இதைவிட மோசமாக இருந்தது என எனது நண்பர்.மு.புஷ்பராஜன தெரிவித்தார். விம்பம் விழா அமைப்பாளர் கிருஷ்ண ராஜாவும் தமக்கு அனுப்பப்பட்ட பிரதி அவவாறாகவே இருந்தது எனவும் சொன்னார். செம்மலையான் ஒரு நேர்த்தியான குறும்படம். அதனது இயக்குனர் ரமணன் திரையிடலுக்கு அனுப்பப்படும் பிரதி இதற்கு நியாயம் செய்வதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

விமர்சகனாக விழாவில் திரையிடப்பட்ட படங்களில் எனக்குப் பிடித்த படம் என போராளிக்கு இட்ட பெயர் படத்தினைச் சொலவேன். அதனது கதை சொல்லல், மாயத்தன்மை கொண்ட அதனது காட்சியமைப்பு, தேர்ந்த நடிப்பும் கச்சிதமான வசனங்களும், நம் காலத்தின் முக்கியமான பிரச்சினை ஒன்றின் மீது அமைந்த கதையும் என அதனைத் தேர்ந்துகொள்ள எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

திரைப்படங்கள் குறித்த இந்த அவதானங்களுக்கு அப்பால், விம்பம் திரைப்பட விழா என்பது பார்வையாளர்களை ஈர்ப்பது எனும் அளவில் வெற்றிகரமான நிகழ்வாக ஆகியிருக்கிறது என்பதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இருறூறு பேர் அளவில் கலந்துகொண்ட இந்நிகழ்வு மண்டபம் நிறைந்த காட்சியாக இருந்தது. நிகழ்ச்சித் தொகுப்பு, திரையிடல் நேரம், இடைவேளை, பாலாஜி சக்திவேலுடனான நிறைவு உரையாடல் என்பது கச்சிதமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. நேர்த்தியின் அழகியல் என்பதனை திரைப்பட விழா திட்டமிடலில் விம்பம் சாதித்திருக்கிறது. நானறிந்த காரணங்களோடு தனிப்பட்ட முறையில் கிருஷணராஜாவுக்கு எனது அன்பும் நன்றியும் உரியது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85511/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.