Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக்குள்ளாக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்குள்ளாக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

[Thursday, 2012-11-22 12:24:06]

'தமிழினப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசு தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை மழுங்கடிக்கவும், தாயகத்தில் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே பேச்சுவார்த்தை நாடகம் ஆடுகிறது.' என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்க உள்ளதாக கொழும்பை மையப்படுத்திய இணையத் தளம் ஒன்றின் செய்தியை மறுக்கும் முகமாகவே பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் இந்த மறுதலிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் ருத்திரகுமாரனுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இத்தகையதொரு முன்னெடுப்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் அல்லது அது சார்ந்த செயற்பாட்டாளர்கள் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

கடந்த வருடத்திலும் கே.பி.யால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வாறானதொரு சந்திப்பில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாதிருந்த போதும், அதில் சம்பந்தப்பட்ட அனைவருமே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பின்னின்று இயக்குபவர்களே என்பதை இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் கே.பி. சார்பானவர்களே பதவி வகிக்கின்றனர். அவர்களே, புலம்பெயர் தேசங்களில் மக்களைப் பிளவு படுத்துவதிலும், போட்டிக் குழுக்களை உருவாக்குவதிலும், போட்டி மாவீரர் தினம், போட்டி முள்ளிவாய்க்கால், போட்டி நினைவு தினங்கள், போட்டி விளையாட்டு நிகழ்வுகள் என்ற அத்தனை குழப்பங்களுக்கும் மூலகர்த்தாக்களாக இருக்கின்றனர் என்பதையும் தமிழ் மக்கள் மக்கள் நிதர்சனமாக அறிந்தே உள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூல கர்த்தாக்களில் ஒருவராகத் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கே.பி. குறித்த தகவல் தரவுகளிலும் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் மிகுந்த பௌவியத்தைக் காண்பித்துள்ளார்.

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக உறவுகள் துறைப் பொறுப்பாளர் கே.பி தொடர்புகளை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாக இலங்கை கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்று தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் எப்படித்தான் இதனை மறுதலித்தாலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினுள் வியாபித்துள்ள கே.பி. குழுவினரை இவரால் கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.

ஏனென்றால், இருவரை காலமும் நாடு கடந்த அரசாங்கம் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்துவதிலும் பார்க்க, தமிழ்த் தேசிய தளங்களைச் சிதறடிக்கும் முயற்சியிலும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்துவதிலும்தான் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.

சிங்கள ஆட்சியாளர்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனான பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாகத் தமக்கான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள முயல்வதைப் போன்றே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்துவதன் ஊடாகப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒன்று திரண்ட போராட்டத்தின் வேகத்திலிருந்து சிங்கள தேசத்தைக் காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றது.

தமது நாட்டுக்காகவும், தமது மக்களுக்காகவும் போராடும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளையும், போட்டிகளையும் உருவாக்கி, இந்த வருடமும் இரண்டு மாவீரர் தினம் எனக் கங்கணம் கட்டிச் செயற்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சிங்கள தேசத்தின் பேரினவாத இலக்கிலிருந்து எந்த அளவில் வேறுபடுகின்றது என்பது குறித்து பிரதமர் ருத்திரகுமாரன்தான் அவரை நோக்கி விரல் நீட்டும் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பதில் கூறவேண்டும்!

சி. பாலச்சந்திரன் � மக்கள் பிரதிநிதி

ஆசிரியர் � ஈழநாடு

http://seithy.com/breifNews.php?newsID=70617&category=TamilNews&language=tamil

நடுநிலைமை என கூறும் செய்தி இணையம் இதைப்பிரசுரித்து காட்டுமா..?

(ரொறன்ரோவிலிருந்து - மாலா)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.