Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிவிருத்தி அல்ல அரசியல் தீர்வே எமது முதல் தேவை

Featured Replies

[size=4]பவலோஜினியும் அவரது கணவர் ரவிக்குமாரும் சைக்கிள்களை விற்றே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். வளைந்து, நெளிந்து, சிதைந்து உருக்குலைந்து போன சைக்கிள்களைத்தான் அவர்கள் கிலோ ஒன்று 49 ரூபாவுக்கு விற்கிறார்கள்.[/size]

[size=2]

[size=4] கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவின் ""சைக்கிள் புதைகுழிகளுக்குள்'' கிடந்து வெயிலிலும் மழையிலும் நனைந்து அந்தச் சைக்கிள்களின் டயர்கள் உருகி உருத்தெரியாமல் போய்விட்டன. [/size][/size][size=2]

[size=4]வலிகாமத்தில் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில்தான் பவலோஜினியின் வீடு இருக்கிறது. அங்கிருந்து வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் ரவிக்குமார் 95 கிலோ மீற்றர் தூரம் பயணித்து சைக்கிள் புதைகுழிக்குப் போய் வருகிறார்.[/size]

[/size][size=2]

[size=4]2009, போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத்தீவின் மிக ஒடுங்கிய நிலப்பகுதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் விடுதலைப் புலிகளும் தள்ளிச் செல்லப்பட்ட பின்னர் அவர்களால் கைவிடப்பட்ட ஒவ்வொரு துண்டு இரும்பையும் சேகரிப்பதற்காகவே ரவிக்குமார் அங்கு சென்று வருகிறார் என்கிறார் பவலோஜினி.[/size][/size][size=2]

[size=4]போரின் போது நடத்தப்பட்ட கடும் எறிகணை வீச்சுக்களால் சிதைந்து குப்பையாகிப் போன பஸ்கள், கார்கள், வான்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வீதியோரங்களில் இன்னும் அப்படியே கிடக்கின்றன. ரவிக்குமாரைப் போன்ற இரும்பு சேகரிப்பவர்கள் அவற்றுக்குள் சிறப்பானவையான சைக்கிள்கள் போன்றவற்றை வேட்டையாடி விற்பதற்காக வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.[/size]

[/size][size=2]

[size=4]பவலோஜினியின் வீட்டு முற்றத்தில் குவிந்து கிடக்கும் சைக்கிள் மலையின் நிழலில் நாம் இருந்து பேசிக் கொண்டிருக்கையில், இந்தச் சைக்கிள்களை கிலோ 49 ரூபா படி வாங்குவதற்கு முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்கிறார் பவலோஜினி. இவற்றை நாமே கொழும்புக்கு எடுத்துச் சென்றால் பழைய இரும்புச் சந்தையில் கிலோ 65 ரூபா வரைக்கும்கூட விற்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போக்குவரத்துச் செலவைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் மேலும் சொல்கிறார்.[/size]

[/size][size=2]

[size=4]கோணப்புலம் முகாமில் இருக்கும் ஏனைய பலரும்கூட இதே தொழிலில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், தனது அயல் வீட்டுக் குழந்தைகளுக்குத் தானே உணவூட்டினார் என்கிறார் பவலோஜினி. அவர்களின் பெற்றோர்கள் பழைய இரும்பு தேடி புதைகுழிக்குப் போன நிலையில் இரண்டு நாள்களாகத் திரும்பி வராமையே அதற்குக் காரணம்.[/size]

[/size][size=2]

[size=4]முல்லைத்தீவில் குவிந்து கிடக்கும் இந்தப் பழைய இரும்புக் குவியல்கள், போர் எவ்வளவு கொடூரமாக நிறைவுக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்ல, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்த போர் மற்றும் முரண்பாடுகளில் இருந்து வெளியேவர யாழ்ப்பாண மக்கள் எவ்வளவு தூரம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிக்கல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.[/size]

[/size][size=2]

[size=4]போருக்குக்குப் பின்னரான யாழ்ப்பாணம், அது முன்னர் இருந்த மாதிரியிலிருந்து மிக வித்தியாசமானதாக இருக்கிறது. இரவு நேரத்தைப் போர்த்தியிருந்த இருளும் பயமும் இப்போது அங்கில்லை, சோதனை நிலையங்களில் நின்றபடி டோர்ச்சு வெளிச்சத்தைப் பீச்சியடித்து வீதியை மறிக்கும் சிப்பாய்கள் இல்லை, பெரும் வெடிச் சத்தத்துடன் விழுந்து வெடிப்பதற்கு முன்னர் தலைக்கு மேலாகக் கூவிக் கொண்டு செல்லும் எறிகணைகளும் இப்போது இல்லை. [/size]

[/size][size=2]

[size=4]இப்போது சோதனைச் சாவடிகள் இல்லை. ஒப்பீட்டளவில் இராணுவத்தினரின் பிரசன்னமும் குறைந்துவிட்டது. இரவு வேளைகளிலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லா நேரங்களிலும் மக்கள் வீதிகளில் நடமாடுகிறார்கள். வீதிகளை நிறைத்திருந்த சைக்கிள்கள் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மண்ணெண்ணெயில் ஓடிய மொறிஸ் மைனர் கார்கள் என்பன எல்லாம் மறைந்து இப்போது வீதிகளை இயல்பான வாகனங்கள் நிறைத்துள்ளன. [/size]

[/size][size=2]

[size=4]இந்த மாற்றங்களுக்குள் ஒன்றாகத் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு முன்பாக (தபால் தலைமையகத்தின் அருகில்) பெரிய உல்லாச விடுதி ஒன்று முளைத்துள்ளது. அதன் உரிமையாளர் திலக் தியாகராஜா, இன்று யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய தனியார் முதலீட்டாளர். தியாகராஜா யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிய போது அவருக்கு வயது 17. ஐக்கிய இராச்சியத்தில் அவர் இப்போது வாழ்கிறார்.[/size]

[/size][size=2]

[size=4]42 அறைகளைக் கொண்ட அவரது விடுதியான டில்கோ தியாகராஜா மற்றும் அவரது மனைவியான கோகிலா ஆகியோரின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்துக்களைச் சேர்த்ததே டில்கோ என்ற பெயர் இப்போது எதிர்பார்ப் பின் குறியீடாக நின்று கொண்டிருக்கிறது. குறைந்தது தியாகராஜா சொல்வதைப் போன்று யாழ்ப்பாண மக்கள் இழந்துவிட்ட பெருமைகளை மீட்டு எடுக்கும் எதிர்பார்ப்பின் குறியீடாகியிருக்கிறது.[/size]

[/size][size=2]

[size=4]அமைதியை அடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை. நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வேலைகளை உருவாக்குவதும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதும்தான் என்கிறார் 56 வயதான விடுதி உரிமையாளர். அவர் லண்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மாறி மாறி தனது வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அங்கே, லண்டனுக்கு வெளியே அவரது வீடான சிங்வெல்லில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது மனைவி இரு பிள்ளைகளும் அங்கேயே இருக்கிறார்கள்.[/size]

[/size][size=2]

[size=4]அவரை வெளிநாட்டுக்கு ஓடவைத்த 1970களின் இலங்கையின் நிலைமையை நினைவுபடுத்திப் பார்க்கையில். தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது நோக்கம் என்கிறார் அவர். [/size]

[/size]

[size=2]

[size=4][size=5]இராணுவப் பிரசன்னம்[/size][/size]

[/size][size=2]

[size=4]என்ன இருந்தாலும் தியாகராஜாவுக்கு அதிகளவில் சகபாடிகள் கிடையாது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர், போருக்குப் பின்னரான காலத்தில் வருகிறார்கள், பார்க்கிறார்கள் உடனடியாக ஓடிவிடுகிறார்கள். ஆயுதச் சண்டை ஓய்ந்த சில மாதங்களில் வங்கிகள் எல்லாம், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட குடாநாட்டை நோக்கி ஓடிவந்தன. போருக்குப் பின்னர் பொருளாதார எழுச்சி ஏற்படும் என்று நம்பிக்கையிலேயே அவை ஓடிவந்தன. ஆனால் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது நடப்பதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள்.[/size]

[/size][size=2]

[size=4]வட்டி வீதங்களில் அண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பால் இலங்கை முழுவதும் வர்த்தகம் படுத்துவிட்டது. அதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் அதன் நிலையற்ற தன்மை காரணமாக மேலும் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதி தொடர்ந்தும் கொழும்பலிருந்தே நேரடியாக ஆளுகை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கு 18,000 படையினரின் பிரசன்னமும் காணப்படுகிறது. முழுவதும் சிங்களவர்களாலேயே ஆன இராணுவத்திடம் அதிகாரங்கள் காணப்படுவது யாழ்ப்பாணத்தின் நிலையற்ற தன்மையை மேலும் வளர்க்கிறது.[/size]

[/size][size=2]

[size=4]ஒரு வியாபாரத்தை ஆரம்பப்பதற்கோ கடன் பெறுவதற்கோ வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பல வருடங்களாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருந்ததனால், வங்கிக் கடனுக்குப் பிணையாக வைக்கக்கூடிய சொத்து ஆவணங்கள் எவையும் அவர்களிடம் இல்லை.

கடந்த வருடத்தில் மக்களை மேலும் பாதித்த சம்பவமாக கிறீஸ் பூதம் மாறி இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் பல பெண்கள் கிறீஸ் பூசிய உருவத்தால் பாதிக்கப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் அது இன்னும் அதிகம். இந்தச் சம்பவங்களுடன் இராணுவமே தொடர்புபடுத்தப்பட்டது. அதனால் போர்க் காலப் பீதியைப் போன்றே இப்போதும் இருப்பதான ஒரு நிலை உருவானது.[/size]

[/size][size=2]

[size=4]அதனால் எல்லோரும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். யாரும் முதலிடவில்லை'' என்கிறார் சி.ஜெனக்குமார். யாழ்ப்பாணம் வரத்தகர் சங்கத்தின் செயலாளர் அவர்.[/size]

[/size]

[size=2]

[size=4][size=5]தொழிற்துறை இல்லை[/size][/size]

[/size][size=2]

[size=4]யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் பெரிதும் சில்லறை வர்த்தகத்தினாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வருவதால் விவசாயமும் கடல் தொழிலும் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. யாழ்ப்பாணத்தின் வளம்மிக்க சிவப்பு மண்ணைக்கொண்ட அச்சுவேலியில் அண்மையில் இராணுவத்தினரிடம் இருந்து தாம் மீளப் பெற்றுக்கொண்ட நிலத்தில் விவசாயிகள் காய்கறிகளையும் பழங்களையும் பயிரிடுகிறார்கள். உள்ளூர் சந்தைகளில் அவை விற்கப்படுகின்றன. ஆச்சரியத்துக்குரியதாக இருக்குமாயினும் திராட்சை வைன் அங்கே பொதுவாகக் கிடைக்கிறது. [/size]

[/size][size=2]

[size=4]என்ன இல்லை என்றால்? அது தொழிற்சாலைகள்தான். அதன் அர்த்தம் தொழில் வாய்ப்பு அங்கு மட்டுப்பட்டது என்பதுதான். இன முரண்பாடு முழு அளவிலான போராய் வெடிப்பதற்கு முன்னதாகக் காங்கேசன்துறையில் அரசு சிமெந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. அதனை மீள ஆரம்பிப்பதான கதையே இப்போது கிடையாது. [/size]

[/size][size=2]

[size=4]குளிரூட்டப்பட்ட களஞ்சியம் ஒன்று இருந்தால் கடல்தொழிலுக்கு ஓர் உந்து சக்தி கிடைக்கும். ஆனால் அதனை அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை. [/size]

[/size][size=2]

[size=4]கடைகளிலும் சிறிய சேவை வழங்கு நிலையங்களிலும் மட்டுமே தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டுமே அங்கிருக்கிறது. அதிலும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களே கிடைக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் உயர்தரப் படிப்புக்குப் பின்னர் கல்வியை இடைநிறுத்துகிறார்கள். அதனால் தொழில் தேடிக்கொள்வது அவர்களுக்கு இன்னும் சிரமமாகிறது.[/size]

[/size][size=2]

[size=4]இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருக்க விரும்பமில்லை. இவை அனைத்தும் சேர்ந்து மக்களிடம் சந்தேகங்களைக் கிளப்புகிறது. இவ்வாறான நிலைமைகள் மூலம் யாழ்ப்பாணத்தின் சனத் தொகையை வெளியேற்றிவிட்டுச் சிங்களவர்களைக் குடியேற்றத் திட்டமிடுகிறார்கள் என்பதே அந்தச் சந்தேகம்.[/size]

[/size]

[size=2]

[size=4][size=5]சீன உதவியுடன் வீதித் திட்டங்கள்[/size][/size]

[/size][size=2]

[size=4]யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் சொத்துக்களின் விலையும் எல்லா இடங்களிலும் நடைபெற்றுவரும் நிர்மாணப் பணிகளும் குடாநாடு பற்றிய ஒரு சாதகமான பார்வையை வழங்குகின்றன. போர்க் காலத்தில் உடைந்தும் சிதைந்தும் போன தமது சொத்துக்களை (யாழ்ப்பாணத்தவர்கள் என்றாலே வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் பணம் அனுப்புபவர்கள் என்று அர்த்தம்) திருத்துகின்றார்கள். பெரிய அங்காடிகள் மற்றும் வர்த்தகக் கட்டங்களும் எழும்பிக் கொண்டிருக்கின்றன.[/size][/size][size=2]

[size=4]நிர்மாணப் பணிகளால் எழும் தூசினால் யாழ்ப்பாணம் மூடப்பட்டிருக்கின்ற போதும் அவை வீதிக் கட்டுமானப் பணிகளில் இருந்து வருகின்றன. 423.9 மில்லியன் டொலர்களை வழங்கி சீனாவின் எக்ஸிம் வங்கி அந்தப் பணிகளுக்குக் கைகொடுக்கிறது. வடமாகாணத்தில் 512 கிலோ மீற்றர் நீள வீதிகள் அரசால் புனரமைக்கப்படுகின்றன. [/size]

[/size][size=2]

[size=4]ரயில்வே புனரமைப்பில் பெரும் பாகம் எண். 5 பொறியியல் நிறுவனம் என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிறுவனம் ஒன்றிடம் உப ஒப்பந்தமாக வேலைகளை ஒப்படைத்துள்ளது அந்தச் சீன நிறுவனம். சீன தேசிய வான்தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனம் மற்றொரு பெரும் ஒப்பந்தகார நிறுவனமாக இருக்கிறது. அதுவும் பின்னர் இலங்கை நிறுவனத்துக்கு உப ஒப்பந்தங்களை வழங்குகிறது.[/size]

[/size][size=2]

[size=4]தெற்கையும் வடக்கையும் இணைக்கும் பிரதான ஏ9 நெடுஞ்சாலையின் புனரமைப்புப் பணிகள் அனேகமாக முடிவுக்கு வந்துள்ளன. விடுதலைப் புலிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான போரின் போது இரத்தத்தில் தோய்ந்த பெரு வீதி என ஒரு காலத்தில் அறியப்பட்டிருந்த வீதி இப்போது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பொருள்களும் மனிதர்களும் பயணிப்பதற்கு இலகுவான வீதியாகிவிட்டது. [/size][/size]

[size=2]

[size=4]ஆனால், இரு வழிப் போக்குவரத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் வீதிகள், போக்குவரத்தை இலகுவாக்கக் கூடியதாக இருப்பதாக தமிழர்கள் கருதுகின்ற அதேநேரம், தென்னிலங்கை தனது பொருள்களை அப்படியே வடக்குக்கு அனுப்புவதற்கே உதவுகின்றன என்றும் நம்புகின்றார்கள். அதேநேரம் தெற்குக்கு அனுப்புவதற்கு வடக்கிடம் பெரிதாக பொருள்கள் ஏதுமில்லை.[/size]

[/size][size=2]

[size=4]அதேநேரம், இந்த வீதி வலையமைப்புக்கள் வடமாகாணத்தை இன்னும் அதிக சிங்களவர்கள் வாழக்கூடிய பகுதியாகத் தயார்ப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தின் சந்தேகபுத்தி கருதுகின்றது.

நாங்கள் ஒருபோதும் வீதிகளைக் கேட்கவில்லை. அபிவிருத்தி அவசியம்தான், ஆனால் அதனை நாங்களே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்கிறார் ஜெனக்குமார். எந்த வகையிலான அபிவிருத்தி எமக்கு வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதற்கு எமக்கு இப்போது அரசியல் தீர்வு ஒன்றுதான் தேவை என்கிறார் அவர்.[/size][/size]

[size=2]

[size=4]தமிழில்: ரேணுபிரேம்[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5610341722677522[/size]

  • தொடங்கியவர்

[size=5]நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்கள் கட்டுப்படுத்துகின்றன; ஈ.சரவணபவன் காட்டம்[/size]

[size=2]

[size=4]வடக்கில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்கினால் வடமாகாணத்தின் அபிவிருத்தி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,[/size][/size]

[size=2]

[size=4]வடக்கின் பொருளாதார அபிவிருத்தி பற்றி பார்க்கையில் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீன்பிடி அபிவிருத்தி 29 வீதமாக காணப்பட்டது ஆனால் தற்போது 8 வீதமாக குறைவடந்து காணப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]உயர் பதுகாப்பு வலயங்கள், பாஸ் நடைமுறைகள் போன்றவற்றை நீக்கி மீனவர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்தால் 29% ற்கும் மேலாக அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்படாத போதும் கூட விவசாயம் செய்ய விவசாயிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் வடக்கின் விவசாயம் முற்று முழுதாக மழுங்கடிக்கப்பட்டுவருகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]ஆரம்ப காலத்தில் குறிப்பாக 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3 வீதமாக இருந்த நெல் உற்பத்தியானது தற்போது 0.07 வீதமாக குறைவடைந்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]1990ம் ஆண்டு காலப்பகுதியில் சிகப்பு வெங்காளம் உள்நாட்டு உற்பத்தியில் 54 வீதமான பங்கை பெற்றுக் கொண்டது ஆனால் தற்போது 10.5 வீதமாக காணப்படுகிறது இவ்வாறு ஒவ்வெரு துறையிலும் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]வடமாகாணத்தின் கல்வி செயற்ப்பாட்டை எடுத்துக் கொண்டால் கல்விச் செயற்ப்பாடுகளை உரிய முறையில் சுதந்திரமாக செயற்படுத்த முடியாது காணப்படுகிறது குறிப்பாக வடமாகாண ஆளுநர் இவ்வாறு கல்விச்செயற்பாடுகளில் தலையிட்டு வருகின்றார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். [/size][/size]

[size=2]

[size=4]தொடர்ந்து உரையாற்றுகையில் [/size][/size]

[size=2]

[size=4]இன்று எம் தமிழ் பெண்கள் தம் தாலி, பொட்டு என்பவை தமக்கு சொந்தமா இல்லையா என்று தெரியாமலேயே தம் வாழ்நாளைக் கழிக்கும் பரிதாபம் எம் யாழ்மண்ணில் தொடர்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் கவலை தெரிவித்தார்.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=231991633722654770

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.