Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வஜன வாக்கெடுப்பு: ஜெனிவா நோக்கியும் அதனைத் தாண்டியும்...

Featured Replies

ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் பெப்ரவரி 25, 2013 தொடக்கம் மார்ச் 22, 2013 வரை மனித உரிமைகள் சபைக்கான கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இம்முறை நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர் பார்க்கப்படுகின்றது. ஆனால் இப் பூகோள அரசியலில் மிக திடமாக எதனையும் கூற முடிவதில்லை.

 

இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்பவர்கள், வரும் முடிவு எவ்வாறானாலும் அதனை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட அந்த மாதிரியான ஒரு தயார்ப்படுத்தலுக்கு தம்மை உள்ளாக்கி வைத்திருக்க வேண்டுமென்பதும், ஆனால் அதனைத் தாண்டிய வேலைத்திட்டங்களின் புரிதலுக்கு தம்மை உள்ளாக்கி கொள்ளுதலும் அவசியமானதொன்றாய் இருக்கின்றது.
 

அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மருந்து போடும் நடவடிக்கையாக  அமைந்தாலும், 60  ஆண்டுக்கு மேலாக புரையோடி இருக்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பது இக்காலகட்டத்தில் உன்னிப்பாக அவதானித்து அதற்குரிய காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைகளைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு இக்காலகட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து அதனை முன்னெடுப்பது அவசியமாகின்றது.
 

மேற்குறிப்பிட்டிருக்கும் இக்கருத்துக்களை எமது அனுபவமாகக் கொண்டு, பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினவழிப்பை ஓர் அனைத்துலக சுயாதீன விசாரணையின் ஊடாக ஆராய்ந்து தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் சர்வஜன வாக்கெடுப்பையும்; ஒரே நேரத்தில் சமாந்தரமாக கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சியை உலக நாடுகளில் செயற்பட்டு வரும் அனைத்துலக மக்கள் அவைகள் அனைத்தும் சேர்ந்து நிரந்தரமான அரசியில் தீர்வை வேண்டி பல வேலைதிட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்களை வைத்து:
ஐக்கிய நாடுகள் சபை தம்மை தாமே ஆராயும் முகமாக  வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்  இலங்கையில்  நடந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதையும்  அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஐ.நாவே தெரிவித்திருக்கும் இவ் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய, ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்கள் சுயமாக தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக, ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் முக்கிய பன்னாட்டு தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத பிரமுகர்களின் பங்களிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து, ஒரு மகாநாடு ஏற்பாடாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ஈழ மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.

கருப்பொருள்: தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா. மேற்ப்பார்வையில் சரவஜன வாக்கெடுப்பு

 

காலம்: மார்ச் மாதம்.
 

இடம்: ஜெனிவா
 

நோக்கம்:



  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு குரல் கொடுக்கும் முக்கிய பன்னாட்டு தமிழர்கள் தமிழர்களல்லாத பிரமுகர்களை ஒழுங்குபடுத்துதல்.
  • ஐ.நா பொதுச் சபையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பை கொண்டு வருவதற்கான அடித்தளம் இடல்.


2. மனித உரிமை மகாநாட்டுக்கு முன்னரான வேலைத்திட்டம்:

 

  காலம்: ஜனவரி 2013 - மார்ச் 2013

  • ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக அலுவலகம் அமைத்தல்
  • முக்கிய தூதுவர்களை சந்திப்பதற்கான நியமனங்களைப் பெறல்
  • மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்பாக ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையைப் பற்றி தூதுவர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி தயார்படுத்துதல்.


3. மனித உரிமை மகாநாடு நடைபெறும் போதான வேலைத்திட்டம்:

  • தமிழினவழிப்பை ஓர் அனைத்துலக சுயாதீன விசாரணையின் ஊடாக ஆராய்ந்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும், ஐ.நா. பொது வாக்கெடுப்பிற்குரியதும் ஆன வேலைத்திட்டங்களை  சமாந்தரமாக கொண்டு செல்லல்.
  • பன்னாட்டுத் தூதுவர்களை தொடர்ந்தும் இந்த வேலைத்திட்டங்களில் பங்கெடுக்க ஊக்கமளித்து ஆதரவைத் திரட்டுதல்.


இம்முயற்சி எம்மின விடுதலைக்கான ஒரு சரியான அடித்தளத்தை இடுமென்ற நம்பிக்கையுடன்,  இம் முயற்சிக்கான உங்கள் ஆதரவையும் எதிர் பார்த்து இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுகின்றோம்.

இவ்வேலைத்திட்டங்கள் சார்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுமிடத்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

கனடியத் தமிழர் தேசிய அவை - Phone: 416.830.7703 - Email: info@ncctcanada.ca

நோர்வே ஈழத்தமிழர்  அவை                                                     
டென்மார்க் ஈழத்தமிழர் பேரவை                                                              
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு                                                     
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை                                                     
ஹோலண்ட் ஈழத்தமிழர் பேரவை                                                           
சுவிஸ் ஈழத்தமிழரவை                                                                    
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை                                            
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை 




 



International Council of Eelam Tamils (ICET)
Head Office Address:
UTE
La Maison des Associations
1a Place des Orphelins
67000 Strasbourg
France
Web: www.iceelamtamils.com
Email: sec@iceelamtamils.com

  • தொடங்கியவர்

முழுமையான அறிக்கை:

 

http://www.iceelamtamils.info/icet/wp-content/uploads/2012/12/VKR_report.pdf

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா. மேற்ப்பார்வையில் சரவஜன வாக்கெடுப்பு

 

Date: 2013-03-02 at 6:00 pm
Address: Geneva, Geneva, Switzerland

 


ஐக்கிய நாடுகள் சபை தம்மை தாமே ஆராயும் முகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதையும் அதனால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஐ.நாவே தெரிவித்திருக்கும் இவ் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்துக்கு அமைய, ஈழத்தமிழ் மக்களுக்கு அவர்கள் சுயமாக தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக, ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் முக்கிய பன்னாட்டு தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத பிரமுகர்களின் பங்களிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து, ஒரு மகாநாடு ஏற்பாடாகி உள்ளது.

 

இவர்கள் அனைவரும் ஈழ மக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.

 

Name: National Council of Canadian Tamils
Phone: 416.830.7703
Email: info@ncctcanada.ca

  • தொடங்கியவர்

அறிவித்தல்: இராப் போசன விருந்து (நீதி நோக்கி) :

இராப் போசன விருந்தின் இடம் மற்றும் திகதி மாற்றப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து குறித்துக் கொள்ளவும்: புதிய விபரம் பின்வருமாறு:

சனிக்கிழமை பிப்ரவரி 9 2013
6:30 மணி முதல் 9:30 மணிவரை
Metropolitan Centre, 3840 Finch Avenue East , Toronto , ON   M1T 3T4

இந்த இரவு விருந்தில் கிடைக்கும் சகல பணமும் மனித உரிமைகள் பிரச்சாரம் மற்றும் மார்ச் 1 வதுஇ 2 வது மற்றும் 3 ம் நாட்களில் ஜெனீவாவில் ஏற்பாடாகியிருக்கும் மாநாட்டிற்காக பயன்படுத்தப்படும்.


DINNER TOWARDS JUSTICE: CHANGE OF DATE AND LOCATION

Please do note that the original place and location of the dinner has been changed. The new information as follows:

Saturday Feb 9th 2013, 6:30 PM to 9:30 PM

Metropolitan Centre, 3840 Finch Avenue East , Toronto , ON   M1T 3T4

Proceeds from this dinner will be used towards human rights campaign and the conference organized in Geneva on March 1st, 2nd and 3rd.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703 - 1.866.263.8622
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.