Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு

Featured Replies

  • தொடங்கியவர்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார். 404

 

படிக்காதவனுடைய அறிவு சில இடங்களில் மிகவும் நன்றாய் இருப்பினும் , கற்றறிந்த சான்றோர்கள் அதை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

 

எனது கருத்து:

 

இதென்ன அனியாயம் ?? வாழ்க்கையிலை அனுபவத்தை மட்டுமே படிச்ச மேதையள் உலகத்தின்ரை சரித்திரத்தையே புரட்டி போட்டிருக்கினம் . இவையை படிச்சவை ஏற்றுக்கொள்ளேலையோ ஐயன் ?? உங்கடை ஒருபக்க சார்பான கருத்துகளை என்னாலை ஏத்துக்கொள்ளேலாது .

 

The wise receive them not, though good they seem to show.

 

La connaissance d'un homme sans instruction, si elle est parfois appréciable, n'est pas prisée par les hommes instruits.

 

  • Replies 146
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 405

 

கல்லாதவன் தன்னைக் கற்றவன் போல மதித்துக் கொண்டு பேசினால் அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போகும் .

 

எனது கருத்து:

 

படிப்பறிவில்லாதவன் தான் பெரிய கொம்பன் மாதிரி படிச்சவனோடை கதைக்கேக்கை அவன்ரை வேசம் கலைஞ்சு போடும் எண்டு நீங்கள் சொன்னாலும் , படிச்சவனே இந்த பணம் பதவியளுக்காக படிக்காவனுக்கு சலாம் போடுறதை என்னெண்டு சொல்லிறது ஐயன் ??

 

As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discerned.


L'estime dont s'abuse un illettré, se dissipe lors qu'il converse avec Un homme instruit.

 

  • தொடங்கியவர்

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். 406

 

கற்கவேண்டிய நூல்களைக் கற்று அறிவு பெறாதவர் உயிரோடு வாழ்பவர் என்று கூறும்அளவினரேயல்லாமல் தமக்கோ பிறர்க்கோ பயன்படாத உவர் நிலத்துக்கு ஒப்பாவர் .

எனது கருத்து:

 

படிக்காதவை இந்த உலகத்திலை உயிரோடை இருக்கிறதும் ஒண்டுதான் இல்லாமல் இருக்கிறதும் ஒண்டுதான் . எப்படியெண்டால் இவைதரவளியள் ஒண்டுக்குமே உதவாத பலைவனத்துக்க சமனானவை எண்டு செரியா நொந்து போய் ஐயன் சொல்லியிருக்கிறார் .

 

'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us nought!


Les illettrés sont bons pour être recensés, mais ils ressemblent (parce qu'ils ne sont utiles à personne) à la terre à soude, qui est improductive.

 

  • தொடங்கியவர்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.407

 

நுட்பமான நூல்களைக் கல்லாதவன் பெற்ற உடலழகு , மண்ணால் மாட்சிமைப்படச் செய்யப்பட பதுமையின் அழகு போன்றதாம் .

 

எனது கருத்து:

 

சிலபேரை பாத்தியள் எண்டால் அந்தமாதிரி இருப்பினம் . அவையோடை கதைக்க வெளிக்கிட்டியள் எண்டால் கூவம்தான் ஓடும் . அவ்வளவு அறிவு . இப்பிடி இருக்கிறவையை வடிவான மண்பானையோடை ஐயன் ஒப்பிட்டாலும் , ஆள் பாதி ஆடை பாதி எண்ட சொலவடையும் என்ரை மண்டையுக்கை இடிக்கிது கண்டியளோ .

 

Who lack the power of subtle, large, and penetrating sense,

Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.


La grâce et la beauté de celui qui n'a pas des connaissances fines et dignes d'estime, ressemblent à celles d'une statue en plâtre, artistement façonnée.

 

  • தொடங்கியவர்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408

 

கற்றவரிடமுள்ள வறுமையைக் காட்டிலும் , கல்லாதவரிடம் உள்ள செல்வம் மிகவும் துன்பம் தருவதாகும் .

 

எனது கருத்து:

 

இதை எங்கடை பெரிசுகள் " குரங்கின்ரை கையிலை பூமாலையை குடுத்திருக்கிறாங்கள் " எண்டு சொல்லுவினம் . ஒருபடிச்சவினிட்டை இருக்கிற கஸ்ரத்தைவிட இந்த கைநாட்டுகளிட்டை இருக்கிற செல்வம் செரியான டேஞ்சர் மாற்றர் கண்டியளோ .

 

 

To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

 

La richesse des illettrés engendre plus de souffrances que la pauvreté des hommes instruits.

  • தொடங்கியவர்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. 409

 

மேற்குடியில் பிறந்த கல்லாதவர் , தாழ்ந்த குடியிற் பிறந்த கற்றவரைப் போலப் பெருமை உடையவர் ஆகார்.

 

எனது கருத்து:

 

லொஜிக் பிழைக்குதே ஐயன் ??? மேற்குடியிலை பிறந்தவனுக்கு படிப்பில்லாட்டிலும் அவனின்ரை சொத்துப்பத்துகளாலை படிப்பை விலைக்கு வாங்கி , தான் ஏதோ கொம்பன் எண்டகணக்காய் சுத்தித்திரிவான் . சாதி குறைஞ்சவனிட்டை பெரிசாய்சொத்துப்பத்து இருக்காது . அவனைன்ரை படிப்பை ஆர் மதிக்கினம் ?? இதை எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் " ஏழை சொல் சபையேறாது " எண்டு .

 

Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace.


Les illétrés, bien qu'ils soient d'une haute extraction, sont moins estimés que les hommes instruits de basse origine.

 

  • தொடங்கியவர்

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410

 

கற்றவரே மக்கள் என மதிக்கப்படுவார் , கல்லாதவர் மிருகத்திற்குச் சமம் ஆவர்.

 

எனது கருத்து:

 

நாங்கள் சிலபேரை கோபத்திலை மிருகங்கள் எண்டு பேசுவம் . ஏனெண்டால் , ஆறாவது அறிவான பகுத்தறிவு எண்ட படிப்பால வாற அறிவு இருந்தும் , பகுத்தறிவில்லாத மிருகங்களைப் போல நடக்கிறதாலைதான் . இதைத்தான் ஐயனும் சொல்லியிருக்கிறார் .

 

Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train.


Les illettrés ressemblent aux animaux, comparés avec les gens instruits qui sont des hommes.

 

 

 

 

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - கேள்வி ( Hearing , De l'audition 411 - 420)

 

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411

 

கேள்விச் செல்வமே மற்றையெல்லாச் செல்வங்களிலும் உயர்வானது . ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்களில் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும் .

 

எனது கருத்து:

 

இண்டையான் நிலமையிலை இந்தசெல்வத்தை பாக்கிறது கஸ்ரம் . எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்கிற காலம் இப்ப . என்னைப் பொறுத்தவரையில ஒரு செய்தியை அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கவேணும் . ஆனால் நானா நீயா அறிவிலை பெரிசு எண்ட ஈகோவால இந்த செல்வம் அல்லாடி, பெரிசாய் எடுபடுறேலை பாருங்கோ .

 

Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent.

 

La richesse des richesses est celle de l'oreille. Elle est la première de toutes les richesses.

  • தொடங்கியவர்

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412

 

காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில் , வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும் .

 

எனது கருத்து:

 

இதை அவசியம் அத்தியாவசியம் எண்ட கோணத்திலை பாக்கவேணும் . உலகத்திலை உள்ள மனிசருக்கு பசி எண்ட உணர்வுதான் அத்தியவசியம் . அதுக்குப்பிறகுதான் கேள்வி எண்ட அவசியமான செவிக்கு உணவு .

 

When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need.


Quand l'oreille n'écoute pas, (quand elle n'a pas d'aliment) il faut offrir un peu d'aliment à l'estomac.

  • தொடங்கியவர்

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

 

செவியுணவாகிய கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர் இந்நில உலகில் வாழ்பவராயினும், அவிர்பாகமாகிய உணவையுடைய தேவர்களுக்குச் சமமாவர்.

 

எனது கருத்து:

 

இந்த இடத்திலை ஒரு சமன்பாட்டை நிறுவிறார் ஐயன் . ஒருத்தன் குறைஞ்ச சாப்பாட்டோடை அறிவு ஞானம் கொண்டு சீவிச்சாலும் , அனுபவம் எண்ட கேள்வி ஞானம் கிடைச்சவனும் , இந்தப்படிச்சவனோடை சரிசமனாய் வைச்சு பார்க்கப்படுகறான் எண்டு சொல்லியிருக்கிறார் .

 

Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share.


Ceux qui ont l'aliment de l'oreille (écoutent) bien. qu'ils soient sur terre,
sont égaux aux dieux aux quels, l'aliment est offert dans les sacrifices.

 

 

  • தொடங்கியவர்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414

 

ஒருவன் சிறந்த நூல்களைக் கல்லாதவனாயினும் அறிவுடையார் கூறுவனவற்றைக் கேட்டறிய வேண்டும் . அக்கேள்வியறிவு அவனுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும் போது ஊன்றுகோல் போல் துணைபுரியும்.

 

எனது கருத்து:

 

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் . ஒருத்தன் பெரிசாய் படிக்காட்டிலும் படிச்சவனின்ரை கதையளைக் கேட்டாலே அவனுக்கு அது அவன் கஸ்ரப்படுகிற நேரத்தில உதவி செய்யும் கண்டியளோ .

 

Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay.
 

Que ceux qui ne sont pas instruits» écoutent ; ce sera pour eux un soutien dans le malheur.

  • தொடங்கியவர்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.415

 

நல்லொழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் வழுக்குதலையுடைய நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் துன்பம்ஏற்படும் போது நம்மக்கு உதவி செய்யும்.

 

எனது கருத்து:

 

இப்ப மழை பெஞ்சு சேறாய்போய் கிடக்கிற நிலத்துக்கை எப்பிடி நடப்பியள் ?? தையா தக்கா நடனம் போடுவியள் . அப்ப ஒருத்தர் கைபிடிக்கிற பொல்லு மாதிரி உங்களுக்கு கை தந்தால் எப்பிடியிருக்கும் உங்களுக்கு ?? அப்பிடித்தான் படிச்சவன் பெரியவன் சொல்லிற கதையளும் கஸ்ரமான நேரத்திலை கைகுடுக்கும் கண்டியளோ .

 

Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways.


Telles que le bâton qui empêche de glisser dans la boue,
les paroles des hommes vertu eux servent de soutien.

  • தொடங்கியவர்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416

 

ஒருவன் மிகச்சிறிய அளவினதாயினும் நன்மைதரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்க்கவேண்டும் . அது சிறிதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும் .

 

எனது கருத்து:

 

இது எப்பிடி எண்டு எனக்கு விளங்கேலை . எங்களுக்கு 25 பேருக்கு கிட்ட நல்லதைதான் சொல்லீச்சினம் . எங்களுக்கு பெருமையா கிடைச்சுது ???

 

Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity.


Ecoutez les bonnes paroles, si peu nombreuses soient-elles. Elles procurent une grande dignité, proportionnée à leur petit nombre.

  • தொடங்கியவர்

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417

நுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையபவர்கள் , ஒரு பொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள் .

எனது கருத்து:

இதை எங்கட பெரிசுகள் " நிறைகுடம் தளும்பாது " எண்டு சொல்லுங்கள் . படிச்சவன் ,வாழ்கை அனுபவஞானம் உள்ளவன் தான் கேள்விப்பட்ட விசையம் பிழையாய் இருந்தாலும் , பொது இடங்களிலை லூசுக் கதையள் கதைக்க மாட்டான் .

 

Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard.


Ceux qui ont examiné et saisi le sens délicat ( des choses ) et qui en ont discuté avec les sages ne disent pas des paroles qui trahissent l'ignorance, même lorsqu'ils ont mal compris.

 

  • தொடங்கியவர்

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418

 

சான்றோர் கூறும் நூற்பொருளைக் கேட்டலால் நலம் பெறாத காதுகள் , கேட்க்கும் இயல்பினவே ஆனாலும் செவிடான தன்மை உடையனவாகவே மதிக்கப்படும்.

 

எனது கருத்து:

 

நாங்கள் சிலபேரை பாத்து கேப்பம் " உனக்கு மண்டையுக்கை ஏதாவது இருக்கோ??" எண்டு . ஏனெண்டால் அவன் மூளை இருந்தும் அதை பாவிக்காமல் இருக்கிறதாலை இப்பிடி கேப்பம் . அதைமாதிரித்தான் காது இருந்தும் கேள்வியறவு இல்லாட்டில் அவனை செகிடன் எண்டு சொல்லிறம் .

 

Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear.

 

L'oreille où n'a pas pénétré l'enseignement entend des sons mais est insensible en réalité.

  • தொடங்கியவர்

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419

 

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பிறரிடம் பணிவுடன் கூடிய சொற்களைக் கூறுதல் இயலாது.

 

எனது கருத்து:

 

இப்ப அரைவாசி தண்ணி இருக்கிற செம்பு எந்த நேரமும் சளக்குப் புளக்கு எண்டு சத்தம் போட்டு , மற்றவனின்ரை பிறசறை ஏத்திக் கொண்டு இருக்கும் . ஆனல் இந்த நுட்பம் எண்ட தண்ணி நிரம்பின செம்பு ஆடாமல் அசையாமல் அமைதியாய் இருக்கும் . இதைத்தான் பெரிசுகள் சொல்லுவினம் நிறைகுடம் தளும்பாது எண்டு கண்டியளோ .

 

'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard.

Ceux qui n'ont pas l'oreille délicate ne peuvent avoir le langage respectueux

 

  • தொடங்கியவர்

 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420

 

காதுகளால் கேட்டறியும் சுவைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளாமல் , வாயால் சுவைத்து உண்ணப்படும் சுவைகளையே அறிந்த மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு நன்மை ஒன்றும் இல்லை .


எனது கருத்து:

கேள்விஞானமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் , வெறுமன வண்டி வளர்க்கிறதுதுக்கு மட்டும் சீவிக்கிற சனங்களாலை சிவசத்தியமாய் ஒரு பிரையோசனமும் இல்லை . இப்பிடியான ஆக்கள் இருக்கிறதும் ஒண்டுதான் செத்துபோறதும் ஒண்டுதான் .

 

His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live?

 

Qu'importe que ceux qui ne connaissent pas les délices de l'oreille mais seulement le goût du palais, meurent ou vivent ?


 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பொருட்பால் - அரசியல் - அறிவுடைமை ( The Possession of Knowledge , -De l'entendement. 421 -430 )

 

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 421

 

அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும் , மற்றும் பகைவரால் அழிக்கமுடியாத உள் அரணும் ( கோட்டை ) ஆகும்.

 

எனது கருத்து :

 

இதிலை வாழ்க்கைப் படிப்பும் ஏட்டுப்படிப்பும் ஒருத்தனுக்கு சேந்து இருந்தால் தான் , தன்னை சுத்தி இருக்கிற நல்லது கெட்டதுகளை அறியேலும் . தனிய ஏட்டுப் படிப்பு இருந்தால் அவன் படிச்ச கோமாளி . அவனுக்கு வலு சிம்பிளாய் ஆப்பு அடிக்கலாம் .

 

True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy.


L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut.

 

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422

 

மனத்தை அதுபோன போக்கில் போகவிடாமல் தடுத்து , தீமைகளிலிருந்து விலக்கி , நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும் .

 

எனது கருத்து :

 

இதை எங்கடை பெரிசுகள் " மதி இழந்தாலும் மந்தி கொப்பிழக்காது " எண்டு . ஆனால் பெரிய ஹைரெக் குற்றவாளியளை பாத்தமெண்டால் நல்லாய் படிச்சிருப்பங்கள் . நல்ல அந்தஸ்த்திலை இருப்பங்கள் ? ஏன் அவங்கள் கிறிமினல் வேலை செய்யிறாங்கள் ?? இந்து அறிவு எண்டிற சாமான் ஏன் அவங்களை திருத்தேலை ?? எண்ட கேள்வியள் எனக்கு வந்து துலைக்குது .

 

Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of good.


Freiner l'esprit en l'empêchant de vagabonder, le préserver du mal et le diriger dans la voie du Bien, c'est l'entendement.

  • தொடங்கியவர்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423

 

எந்தச்செய்தியை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் .

 

எனது கருத்து :

 

கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்காமல் ஒருத்தன் சொல்லுறதை நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒரு முடிவுக்கு நீங்கள் வரச்சொன்னாலும் , ஒருத்தர் சொல்லுறதை ஆள்ஆளுக்கு இப்பிடி நாலுவளத்தாலையும் யோசிக்க வெளிக்கிட்டால் அந்தக்காரியம் ஒழுங்குமுறையா நடக்குமோ ???

 

Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern.


De quelque bouche qu'on entende quoi que ce soit,
en saisir le véritable sens est l'entendement.

  • தொடங்கியவர்

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. 424

 

உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும் , பிறர் கூறும் தெளிவற்ற சொற்களில் நுட்பமான பொருளைக் காண்பதும் அறிவாகும் .

 

எனது கருத்து :

 

நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் என்ன கதைக்கினம் எண்டே விளங்காது . ஆனால் கதைப்பினம் . இவையாலை ஆருக்கு என்ன பிரையோசனம் ??? அப்பிடி இல்லாமல் ஒருத்தருக்கு சிம்பிளாய் விளங்கிறமாதிரி சொல்லி , மற்றவை வித்துவங்களை காட்டினாலும் அதிலை இருந்து எடுக்கவேண்டியதை எடுக்கிறதுதான் உண்மையான அறிவு பாருங்கோ .

 

Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes in.


Faire comprendre par un exposé clair et intelligible ce que l'on a à dire,
saisir le sens subtil des réponses d'autrui. c'est l'entendement.

 

  • தொடங்கியவர்

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. 425

 

உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு .அத் தொடர்பில் முதலில் மகிழ்ந்து விரிதலும் வருந்திக் குவிதலும் இல்லாததே அறிவாகும் .

 

எனது கருத்து :

 

சிலபேரைப் பாத்தியள் எண்டால் அடுகிடைபடுகிடையாப் பழகுவினம் . பேந்து சின்ன பிரச்சனையளை பெரிசாக்கி மூஞ்சையைத் தூக்கிவைச்சுக் கொண்டிருப்பினம் . இவையள்தரவளியாலைதான் பிரச்சனையளே . உண்மையிலை படிச்சவன் எண்டால் இப்பிடிச் செய்யாமல் எல்லாரையும் விரும்பிறவனாய் இருப்பான் .

 

Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.


Acquérir l'amitié du monde est le fait de l'intelligence. La garder intacte, en ne l'exagérant pas d'abord pour la diminuer ensuite, est le fait de l'entendement.

  • தொடங்கியவர்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. 426

 

உலகில் உள்ள சான்றோர்கள் எவ்வழியில் ஒழுகுகின்றார்களோ , அவ்வழியில் தானும் ஒத்து நடப்பதே அறிவுடமையாகும் .

 

எனது கருத்து :

 

ஊரோடு ஒத்தோடு எண்ட ஒரு பழமொழி இருக்கு . இதைத்தான் ஐயனும் தன்ரை றூட்டிலை சொல்லிறார் . ஆனால் இந்த வரலாறுகளை புரட்டிப்போட்டவையை கொஞ்சம் வடிவாய் பாத்தியள் எண்டால் இந்தக்குறளின்ரை லொஜிக் டோட்டலாய் உடைஞ்சுபோகுது . வாரலாற்ரைத் திருப்பினவன் எல்லாம் " ஏன் ? எதற்கு ? எப்படி ? " எண்டு ஓடிற உலகத்தைப் பாத்து கேள்வியளைக் கேட்டதாலைதான் வரலாறு முன்னேறிச்சுது . அப்ப எது உண்மையான அறிவு ??? ஓரோடை ஒத்தோடுறதா ??அல்லது திக்குதெரியாமல் ஓடுற ஊரை சரியான றூட்டிலை கொண்டுபோறதா ???

 

As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well.


Connaître le sens dans le quel marche le monde, conformer sa conduite à son inclination, c'est l'entendement.

 

  • தொடங்கியவர்

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். 427

 

பின்னால் வருவதனை முன்னால் அறியும் ஆற்றல் உடையவரே அறிவுடையவராவர் . அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர் அறிவில்லாதவரேயாவர் .

 

எனது கருத்து :

 

அறிவு எண்டிறது தனிய புத்தகப் படிப்புகளாலையும் , அவை படிக்கிற யூனியளாலையும் கிடைக்கிது எண்டு கனபேர் இருக்கினம் . உண்மையிலை வாழ்க்கை அனுபவத்தை கரைச்சுக் குடிச்சவன்தான் நாளைக்கு என்ன நடக்கப்போகிது எண்டு இண்டைக்கே சொல்லி றானே ஒழிய , இந்த படிச்ச கோமாளியள் இல்லை .

 

The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be.


Les hommes intelligents prévoient l'avenir; les inintelligents sont ceux qui n'ont pas ce don.

 

  • தொடங்கியவர்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428

 

அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத செயலாகும் . அஞ்சவேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையோர் செயலாகும் .

 

எனது கருத்து :

 

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டு சொல்லுவினம் . ஐயன் சொல்லிற குறளின் படி பாத்தால் அறவாளியள் எல்லாம் கோழையள் மாதிரி எல்லோ சொல்லிறார் .

 

Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part.


Ne pas craindre ce qui doit être craint, c'est la sottise.Craindre ce qui doit être craint est au contraire, le propre des hommes intelligents.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.