Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தை விடவும் அச்சம் தரும் பீதி

Featured Replies

யுத்தத்தை விடவும் அச்சம் தரும் பீதி

எஸ். கே. விக்னேஸ்வரன்

கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஐந்து துப்பாக்கிச் சூடுகள், இரண்டு கிளேமோர் தாக்குதல்கள், வீடு புகுந்து வெட்டுதல் அல்லது குடும்பத்தோடு சுட்டுக் கொல்லுதல் போன்ற படுகொலைச் சம்பவம் ஒன்றினைப் பற்றிய செய்திகள் தினசரிப் பத்திரிகைகளின் முன்பக்கங்களில் இடம்பிடித்து வருகின்றன. தவிர, காணாமல் போனதாக முறைப்பாடு, சுற்றிவளைத்துத் தேடுதல், வீதித் தடைச் சோதனைகள், சந்தேகத்தின் பேரால் கைதுகள் பற்றி மூன்று செய்திகளாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றிடையே யுத்தத் தவிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகைள், சர்வதேசச் சமூகத்தின் சார்பில் யாராவது ஒரு தலைவர், அரசுச் செயலாளர் அல்லது உயர் ஸ்தானிகரின் அறிக்கை என்பனவும் முக்கியமான செய்திகளாக தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவையெல்லாம் இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் வெடித்துவிட்டதற்கான அறிகுறிகளா என்று கேட்டால், இல்லை. நாம் யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து பேணவே செய்கிறோம். எதிர்த் தரப்பினரர் எல்லை மீறிச் செயற்படும் தருணங்களில் மட்டுமே நாம் பதில் தாக்குதலை நடத்த வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்று இரு தரப்புகளும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு முற்று முழுதான யுத்தத்தை விடவும் அச்சந்தருவதான பீதி மக்கள் மத்தியில் இப்போது நிலவுவதற்கான பல்வேறு சாட்சியங்களும் பத்திரிகைகளில் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இங்கு என்னதான் நடக்கிறது?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பின் புண்ணியத்தால், ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக்கொண்ட மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதலாய், யுத்தம் வெடிப்பதற்கான நாள் எண்ணப்பட்டுக்கொண்டே இருந்தது என்பது யாரும் அறிந்ததே. இலங்கையின் இனப் பிரச்சினைக்கான ஒரு சுமுகமான தீர்வுக்குரிய எல்லா வாய்ப்புகளையும் இறுக அடைத்துவிடுவதற்கு அடிப்படையாக அமைந்த ஒற்றையாட்சி முறைமையை மாற்றுவதில்லை என்று முன்மொழிவுடன் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கிய `மகிந்த சிந்தனை'யின் சமாதான முயற்சி இத்தகைய ஒரு யுத்த நிலைக்கு இட்டுச் செல்லாது என்று இலங்கை அரசியல் வரலாற்றுடன் மேலோட்டமான அறிவைக் கொண்டிருப்பவர்கள் கூடச் சொல்ல மாட்டார்கள். ஒற்றையாட்சிச் சிந்தனையும் அதை அடியாகக் கொண்டு நடைமுறையில் இருக்கும் அரசியல் அமைப்பும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பௌத்த பேரினவாதச் சிந்தனைக்கு அடி பணிந்து சமாதானத்தைப் பேண வேண்டும் என்பதையே தமது சாரமாக வெளிப்படுத்தி வருகின்றன.

இந்தச் சிந்தனையின் உள்ளமைவான இன்னொரு நடைமுறை சார்ந்த கருத்து நிலைதான், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது யுத்தத்தை தீவிரமாகத் தொடுப்பதன் மூலம், அவர்களை அழித்துவிட முடியும் அல்லது அடிபணிய வைத்துவிட முடியும் என்பது. இதனை மங்கள சமரவீர முதல் ஜனாதிபதி வரையான ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சியினரும் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

புலிகளைத் தமிழ் மக்களிடமிருந்து- தனிமைப்படுத்தி அழித்துவிட முடியும் என்ற இவர்களது ஆசை சாத்தியமே என்று சாட்சி சொல்லும் தமிழ் மக்களது அரசியல் கோரிக்கையின் நியாயத்தன்மையை மறந்துபோன- ஒரு சில தமிழ் புத்திஜீவிகளும் அரசியல் கட்சியினரும் இந்த நம்பிக்கையை மேலும் மேலும் தக்கவைக்க அரும்பாடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கை ஒவ்வொன்றையும் மிகப் பெரிய அளவில் தொகுத்துத் தமது வாதத்திற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர். தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவு பற்றிய இவர்களது கணிப்பானது, தமிழீழ விடுதலைப் புலிகளை எத்தகைய விமர்சனங்கட்கும் அப்பாற்பட்ட, நூறுவீதம் சரியான இலட்சிய அமைப்பாக நிரூபிக்க முயல்பவர்களின் நோக்கத்தைப் போலவே, எந்த ஆதார அறிவோ அனுபவமோ அற்ற வெறும் மனப்பிரமையே.

புகழ்பெற்ற ஆபிரிக்க நாவலாசிரியரான சினுவ அச்செபே அவர்களின் நாவலொன்றில் சொல்லப்படுவதுபோல, `முதலில் நரியைக் கலைப்பது பற்றிப் பேசுவோம். அதன்பின் கோழிகளின் கரைச்சல்கள் பற்றிப் பார்க்கலாம்' என்ற முரண்பாடுகள் தொடர்பான மக்களின் இயல்பான கண்ணோட்டம் பற்றி இவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முயல்வது கிடையாது.

இலங்கை அரசுக்கும் தன்னை நியாயப்படுத்த இத்தகைய `மதியூகம்' மிக்க ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், இவர்களது துரதிர்ஷ்டம், உண்மை இவர்கள் நினைப்பதற்கு மாறாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் புலிகளை ஒடுக்க விரும்புவது புலிகள் என்ற அமைப்பின் மீது தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள வெறுப்புக் காரணமாக அல்ல. அந்த அமைப்பிலுள்ள எந்த நபர்கள் மீதுமுள்ள தனிப்பட்ட வெறுப்புணர்வாலும் அல்ல. மாறாக இதன் மூலம் தமிழ் மக்களது அரசியல் கோரிக்கைகளை புறக்கணித்துவிட முடியும் என்பதால்தான். ஆனால், புலிகளைத் தனிமைப்படுத்திவிட முடியும் என்று அரசுக்கு மதியுரைக்கும் யாரிடமும் தமிழ் மக்களது அரசியல் கோரிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தக் குறைந்தபட்ச அபிப்பிராயமும் கிடையாது. அவர்கள் அரசாங்கத்தைப் போலல்லாது, புலிகள் என்ற அமைப்பின் மீதான தனிப்பட்ட குரோதத்தின் அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, இலங்கையின் இன்றைய அரசுக்குப் புலிகளைப் பலவீனப்படுத்தி விடுவதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தையின்போது பலமான நிலையில் நின்று பேசலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. இத்தகைய ஒரு நிலையை ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புகள் தமது கோட்பாடாகவே வெளிப்படுத்தி வருகின்றன.

ஆனால், இலங்கையின் இன்றைய சூழ்நிலை சர்வதேசச் சமூகத்தின் உன்னிப்பான கவனத்துக்குட்பட்ட ஒன்றாக இருப்பதால், புலிகள் மீது தாமே முன்வந்து தாக்குதலை நடத்த முடியாத நிலையில் அரசு தவிக்கிறது. இதற்காகப் புலிகளை யுத்தத்தில் இழுத்து விட முடிந்த அளவுக்கு முயன்று வருகிறது. புலிகளிடமிருந்து பிரிந்த கருணா அணியுடன் உறவைப் பேணுவதன் மூலம், அவர்களது உதவியோடு இதைச் சாதித்து விட முயன்று வருகின்றது அரசு. அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பரவலாகச் செய்திப் பத்திரிகைகளாலும் கண்காணிப்புக் குழு அறிக்கைகளாலும் அம்பலப்பட்டுப் போயிருந்த போதும் அது இவற்றைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

யுத்தச் சூழ்நிலை உருவாகத் தொடங்கிய நாளிலிருந்து தான், அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுப் போகாமல் இருந்து கொண்டு புலிகளை யுத்தத்தில் இழுத்து விடும் முயற்சியில் பல விதத்திலும் முயன்று வந்த போதும்தான் அம்பலமாகும் ஒவ்வொரு தடவையும் மறுப்பறிக்கையை வெளியிடுவதன் மூலம் தனக்கு அதில் சம்பந்தமில்லை என்று காட்டப் பல பொய்த் தகவல்களையும் பரப்பி வருகிறது அரசாங்கம். திருகோணமலை மாணவர்கள் படுகொலை முதல் அண்மையில் தீவுப் பகுதியில் நடைபெற்ற படுகொலை வரை அரசாங்கமும் படையினரும் தமக்குச் சம்பந்தமில்லை என்று சாதித்து வந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாகப் புலிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கை ஒவ்வொன்றும் கூட இதே விதத்தில் தமக்குச் சம்பந்தமில்லை என்று புலிகளால் மறுக்கப்பட்டு வந்துள்ளதையும் மறுக்க முடியாது. காரண காரியத் தொடர்புகள், சம்பவம் நடந்த இடங்கள், அதற்கான சூழல்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சமாதான முயற்சிக்குத் தாம் ஆதரவு என்பதைக் கூறுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் முன் எதிராளி மட்டுமே இந்த நிலைமையைக் குழப்புகிறார் என்ற தோற்றத்தை இரு தரப்பினரும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அணுகு முறையில் எந்தத் தரப்பும் உண்மையில் வெற்றி பெறவில்லை என்ற போதும், இனப் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான முயற்சியை மிகவும் மோசமாக இவை பாதித்த போதிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச அளவிலும் மிக மோசமாக அம்பலப்பட்டுப் போயுள்ளது இலங்கை அரசாங்கமே என்பதில் ஐயமில்லை.

இறுதியாக, அண்மையில் துருப்புகளை ஏற்றிச் சென்ற எம்.வி.பேர்ள் குரூஸ் என்ற கலன்மீது வெற்றிலைக்கேணியில் வைத்துப் புலிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடற்பிராந்திய அதிகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையின் மூலம் அரசு மிக அதிகமாக அம்பலப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்தாகி இதுவரை காலமும் இல்லாத ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டது. யுத்தத்தை நோக்கிச் செல்லும் அரசின் விருப்பினை வெளிப்படுத்துகின்ற ஒரு சம்பவமாகவே இது புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தக் கப்பல் போக்குவரத்து, கடந்த மாதம் விமானப்படை, உலங்கு வானூர்திகளை இனிப் புலிகளுக்கு வழங்குவதில்லை என்று அரசாங்கம் எடுத்த திடீர் முடிவு வரை, சுமுகமாக நடந்து கொண்டிருந்த ஒன்று தான் என்பதை யாரும் அறிவர். இந்தச் சுமுக நிலையை உடைத்ததற்காக அரசாங்கம் பரவலாக விமர்சிக்கப்பட்ட போதிலும், அது தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி புலிகளின் ஜெனீவாப் பயணம் நடைபெறாமல் போனதற்கு அரசின் இந்த முடிவே முழுக் காரணியாக அமைந்தது.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் பிரவேசித்ததாகக் கூறி, கப்பல் மீது புலிகள் தாக்குதலை நடத்தியது. யுத்தத் தவிர்ப்புக் கண்காணிப்புக் குழுவால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டதுடன் கண்காணிப்புக் குழு கடல் பிராந்தியத்திலான தனது கண்காணிப்பு நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தியும் உள்ளது.

ஆனால், படையினரை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு வழித்துணை போக வேண்டாம் எனப் புலிகள் மூன்று தடவை கடிதம் மூலம் எச்சரித்தும் கண்காணிப்புக் குழு திருமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு வந்து இந்தத் துருப்புக் காவிக் கலனுக்கு வழித்துணை போனமை, அரசாங்கத்தின் யுத்தத்தைத் தொடங்கும் நோக்கத்திற்கு உதவியாகச் சென்றதாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது பற்றிப் பின்னர் அறிக்கை வெளியிட்ட கண்காணிப்புக் குழுத் தலைவர், புலிகளுக்குக் கடலில் கட்டுப்பாடு அதிகாரம் எதுவும் இல்லை என்று அறிவித்தார். ஆனால், தாக்குதல் நடத்தப்படும் என்ற அர்த்தப்பட புலிகள் எச்சரிக்கைக் கடிதம் வந்ததைப் புறக்கணித்து கண்காணிப்புக் குழு புலிகளின் தாக்குதல் நடக்கும் வரை காத்திருந்தது, பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் ஒரு விவகாரமாகவே தோன்றுகின்றது. கடல் பிராந்தியம் தொடர்பாக போர்த் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றும் சொல்லவில்லை என்றால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில் கடலில் பயணம் செய்வதற்குத் தமக்கும் அனுமதி இருக்க வேண்டும் என்று புலிகள் கூறுகிறார்கள். அதை அரசாங்கம் மறுக்கின்றபோது, அரச சபையினர் போவதையும் எம்மால் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை இப்போது புலிகள் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலைமை சமாதான முயற்சிகளுக்கு மிகவும் மோசமான நெருக்கடியைத் தரப் போகிறது என்பது தெளிவாக் காணக் கூடியதாக உள்ளது. வடக்கிலுள்ள படையினருக்கான போக்குவரத்து, உணவு மற்றும் அத்தியாவசிய வழங்கல்களை எடுத்துச் செல்வது இனிச் சிக்கலுக்கு உள்ளாகக் கூடும். இது கடலில் போரும் தரையில் போர் நிறுத்தமும் என்ற ஒரு நிலையை நோக்கி நகர்த்திவிட்டுள்ளது. இதன் விளைவு நிச்சயமாக சமாதான முயற்சிகட்கு ஆதரவானதல்ல என்பது வெளிப்படை.

ஆனால், அரசாங்கமோ, புலிகள் கரும்புலிப் படகுகளில் வந்து தாக்கினார்கள் என்று பலமாகப் பிரசாரம் செய்து சர்வதேச ஆதரவைக் கோருவதுடன் கடலில் தமக்குள்ள அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறி வருகிறது.

யுத்தத்தை முழு அளவில் தொடங்குவதற்கு அரசுத் தரப்பில் செய்யப்பட்ட இந்தச் சீண்டல் முயற்சி நோர்வேயினதும் சர்வதேச சமூகத்தினதும் தலையீட்டால் ஓரளவு தணிந்துள்ள போதும், இனி எந்த நேரத்திலும் வான் மற்றும் கடல் ரீதியான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சமும் அதற்கான சூழ்நிலையும் தணிந்துவிடவில்லை.

இந்த நிலையில், ஜப்பானிய விசேட தூதுவர் அகாசி அவர்களின் இலங்கை விஜயமும் அவர் இரு தரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தையும் அதன் பின் வெளியிட்ட அவநம்பிக்கை கலந்த அறிக்கையும் முழு அளவிலான யுத்தத்திற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன என்ற எண்ணத்தை வலுப்படுத்துபவையாகவே உள்ளன.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவைக்க அவை போதிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஒருபுறத்தில் புலிகளைப் போருக்குத் தள்ளும் முயற்சியில் உள்நாட்டில் ஈடுபட்டபடி, அரசியல் ரீதியாக உலக நாடுகள் மத்தியிலும் புலிகளைத் தனிமைப்படுத்த அரசு முயல்வது, அரசின் செயல்கள் எல்லா வகையிலும் போரை நோக்கியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.