Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளில்லா பயணிகள் வானூர்தி

Featured Replies

ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன.

 

இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டதில் முதலில் பறக்க விடும் வானூர்தி Jetstream எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது The Flying Test Bed எனவும் ஆழைக்கப்படுகிறது. தற்போது வானோடிகள் ஓட்டும் பல வானூர்திகளில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. வானூர்திகள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன. ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு வானூர்திகளில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் வானோடியில்லா வானூர்திகள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது. அத்துடன் இதில் 3 முக்கிய செயற்ப்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.

 

1) Weather Avoidance Test.... (காலநிலையைச் சமாளித்தல்) Cockpit இல் உள்ள electronic eye ஆக செயற்படும் காணொளி கருவி கணணி அமைப்புடனும், நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். weather avoidance system ஆனது செய்மதி மூலமும், காணொளி கருவி மூலமும் மேகம், முகில், மழை, காற்று, இடி, மின்னல், காற்றின் ஈரப்பதன், காற்றின் அடர்த்தி, காற்றின் அமுக்கம் போன்றவற்றின் துல்லியமான தகவல்களைப் பெற்று நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவிப்பதுடன், தன்னிச்சையான முடிவுகளையும் எடுத்து காலநிலையைச் சமாளிக்கிறது.

 

2) Sense And Avoid Test...... (உணர்ந்து தவிர்த்தல்) காணொளி கருவி (Camera) மற்றும் வானூர்தியின் அடையாளம்காண் உணரி (Aircraft Identification Antenna) ஆகியவை இணைந்து செயற்பட்டு வானூர்திக்கு அண்மையில் உள்ள வானூர்திகள் மற்றும் வேறு பறக்கும் பொருட்களை இனம் கண்டு அதிலிருந்து விலகிகொள்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறது. Aircraft Identification Antenna சமிக்ஞைகளை வெளியிட்டு அதனை உள்வாங்கி கொள்வதன் மூலம் அயலில் உள்ளவற்றை உணர்கிறது. Camera அயலில் உள்ளவற்றை படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகிறது.

 

3) Emergency Landing Test.. (அவசர தரையிறக்கம்) வானூர்தி பயணங்களிற்கு அவசர தரையிறக்கம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஆளில்லா வானூர்தி பயணங்களில் அவசர தரையிறக்கம் என்பது முக்கியமானதும் சிக்கலானதும் ஆகும். தரையிறக்கும் இடத்தை கண்டு பிடித்தல், தரையிறக்கும் இடம் பாதுகாப்பானது என உறுதிசெய்தல் அதில் உள்ள தடைகளை தவிர்த்தல், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக தரையிறங்குதல் போன்றவற்றை தீர்மானிக்கிறது. வானோடிகள் இல்லாத வானூர்திகளை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு வானோடிகள் இல்லாத வானூர்திகள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://vinnummannum.blogspot.com/2012/12/blog-post.html

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.