Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாசி (பிப்ரவரி) 12, முருகதாசன் நினைவு நாளில் ஐ.நா அலுவலங்களை முற்றுகை இடுவோம்

Featured Replies

தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம்.

பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று முன்னறிவித்து நம்மை எச்சரித்தான்.  ஆனாலும் நாம் சர்வதேசத்தினை நெருக்கடிக்குள்ளாக்கும் போராட்ட்த்தினை முன்னெடுக்க தவறினோம்.

ஐ. நா என்கிற முகமூடியை வைத்துக் கொண்டு சர்வதேச கருத்தியலை தமது பக்கத்திற்கு சாய்த்து நின்ற இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் சதியால் சர்வதேச கருத்துருவாக்கம் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்து இனப்படுகொலையை தடுக்க இயலாமல் செய்தது. இந்தியாவின் தமிழின எதிர்ப்பு வெறியானது ஐ. நாவின் முக்கிய அதிகாரிகளை தமது திட்டத்திற்கு துணையாக வைத்து இனப்படுகொலையை செய்து முடித்தது. தற்போது விடுதலை கோரிக்கையை பணிய வைக்கவும், நீர்த்துப் போகவும் செய்கிற மறுவாழ்வு, நல்லிணக்கம், நல்வாழ்வு-வாழ்வுரிமை என்கிற வாதங்களை ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வைக்கிறது. இதற்கான இலங்கை எதிர்ப்பு நாடகங்களை சர்வதேச அரங்கிலும், ஐ. நாவிலும் இந்த நாடுகளின் கூட்டணி செயல்பாடுகள் நடத்துகின்றன.

இவற்றினை செய்து முடிக்க ஐ. நாவின் உயர் அதிகாரிகளாகவும், இனப்படுகொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்த அதிகாரிகளான விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ், பான் – கி- மூன் என்கிற அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக குற்றம் சாட்டி விசாரித்து தண்டித்தல் என்பது நடந்தால்தான் தமிழர்களுக்கு சர்வதேசம் செய்த துரோகத்தினையும், இலங்கை அரசின் இனப்படுகொலை திட்டத்திற்கு செய்த உதவிகளையும் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த இயலும். இவர்களது அயோக்கியத்தனத்தினை ஐ. நாவின் உள்ளக ஆய்வு அறிக்கை ‘சார்லஸ் பெட்ரி’ என்பவர் தலைமையில்  நடத்தப்பட்டு வெளியாகி உள்ளது.  இந்த ஆய்வு அறிக்கையை மூடிமறைக்கவும், பான் -கி- மூன் , விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் போன்ற குற்றவாளிகளை காப்பற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களது செயல்கள் கடுமையான குற்றத்தினை புரிந்தவை எனவும், இனப்படுகொலைக்கு துணை போனதாக அமையும் எனவும் அறியப்படுகிறது. இவர்கள் பின்னாலுள்ள நாடுகள் இவர்களை காக்க முயற்சிக்கின்றன. இந்த அறிக்கையில் வெளியான தகவல்களை, ஆதரங்களை சர்வதேசம் மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாது போகும் வகையில் இருக்கின்றன. இதனடிப்படையில் நாம் எடுக்கும் போராட்டம் நமது தமிழீழ விடுதலையை ’சர்வதேசத்தால் தவிர்க்க இயலாத’ ஒன்றாக மாற்றவேண்டும். இது நமது வரலாற்றுக்கடமை.


இந்த நாடுகள் மற்றும் நபர்களின் கூட்டணிதான் தமிழீழப் போராட்டம் மற்றும் போராளிகளை ’பயங்கரவாதம்’ என்று பிரச்சாரம் செய்து தமிழீழத்தின் இறையாண்மையை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இந்த அங்கீகார மறுப்பே நமது தாய் நிலமான தமிழீழத்தினை இலங்கை அரசின் படைகள் ஆக்கிரமிக்க உதவுகிறது. இலங்கை அரசின் ஆக்கிரமிப்பினையோ, தமிழீழத்தினை சிங்களமயமாக்குவதையோ, தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதையும், வாழ்வாதரத்தினை அழிப்பதையும் கண்டு கொள்ளாமல் ”இலங்கை அரசு, தமிழர்களின் வாழ்வினை மறுசீரமைப்பில் உலகிற்கே உதாரணமாய் இருக்கிறது” என்று ஐ. நாவின் மனித நேய மறுகட்டுமான உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஜிங் கடந்த ஆகஸ்டு1, 2012 இல் அறிவித்தார்.

இது போன்ற பல இலங்கை அரசு ஆதரவு நாடகங்களை ஐ. நாவின் மூலமாக நடத்தும் சர்வதேச ஆற்றல்களை தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையான தமிழீழ விடுதலையை உறுதி செய்வதென்றால் இந்த அதிகாரிகள் அம்பலப்பட்டாக வேண்டும்.  வரும்  மார்ச் 2013, மாத ஐ. நா அமர்வில் சர்வதேச நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக நடப்பதாக  நாடகம் நட்த்துமானல் நமது இந்தப் போராட்டங்கள் பெரும் நெருக்கடியை அவர்களுக்கு அளிக்கும். இந்த அதிகாரிகளின் துணையே ராசபக்சே அரசின் திமிர் பிடித்த பாசிச போக்கிற்கு காரணம். ஆகவே அதன் அடிப்படையாக அமையும் இந்த அதிகாரிகளையும் அதன்பின்னுள்ள அரசுகளையும் அம்பலப்படுத்த போராடுவோம். இதுவே நமது விடுதலை போராட்டத்தில நமது பங்காக அமையும்.

விடுதலையை நோக்கிய பயணத்தில் இது மிக மிக முக்கிய மைல் கல்லாக அமையும் விதத்தில்  நாம் அனைவரும் கைகோர்த்து அடையாள போராட்டங்களை செய்யாமல் போர்க்குணத்துடன், தமிழீழ போராளிகளின் சளைக்காத தொடர் போராட்ட்த்தினைப் போல எதிர்களின் கூட்டணியை உடைக்கவும், அவர்களை பின்னடைய வைக்குமாறும் நாம் செயல்படவேண்டும். இதுவே நமது நோக்கத்தினை ஒரு அடி முன்னே நகர்த்தும் பணியாகும். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற நகரங்களில் வருகின்ற பிப்ரவரி12ஆம் தேதி 2013 இல் ஐ. நா அலுவலகங்களை முற்றுகையிட அனைத்து கட்சி, இயக்க தோழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இதே நாளில் இந்தியாவின் பிற நகரங்களில் ஐ. நா அலுவலகம் நோக்கிய போராட்ட்த்தினை முன்னெடுக்கவும் பிற மாநில, தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதே போராட்டம் ஒரே காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பட்சத்தில் ஐ. நா அதிகாரிகளுக்கும் , அவர்கள் பின்னுள்ள இந்தியா உள்ளிட்ட அரசுகளுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும். சர்வதேச அளவில் தேசிய இனப்போராட்டத்தினை ஒடுக்குவதற்கு துணை நின்ற ஐ. நாவின் செயலை கண்டிக்கும் விதமாகவும், அம்பலப்படுத்தும் விதமாகவும், போராடி பின் ஐ.நாவின் சூழ்ச்சியால் பலியிடப்பட்ட அந்த மக்களின் நினைவாகவும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே முருகதாசன் தீக்குளித்து ஐ. நா அலுவலகம் முன் உயிர் நீத்தான். அவனது தியாகம் அனைத்துச் சமூகங்களுக்குமானது. அதை அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்குமான தினமாக மாற்றி ஐ.நாவினை எதிர்கொள்வோம். பிப்ரவரி12இல் உலகம் அதிர, அதிர ஐ.நா அலுவலக முற்றுகையை நடத்தி நாம் நமது போராட்டத்தினை ஆரம்பிப்போம்.

முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும் மற்றும் ஏனைய தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமே இந்தப் போராட்டம். மைகோர்த்து சர்வதேச இனமாக தமிழினம் எழவேண்டும், இது வரலாற்று கட்டாயம். தமிழருக்கு கடைக்கோடியில் இன்னல் நிகழ்ந்தால் உலகெங்குமுள்ள தமிழினம் இவ்வாறு கைகோர்க்கும் என்பதை உருவாக்கிடுவோம்.

நாம் வெல்வோம்.

மே பதினேழு இயக்கம்
contact.may17@gmail.com

9600 781111

  • தொடங்கியவர்

கமலஹாசனின் உரிமை பறிபோகிறது எனக் கவலைப்படவோ, அல்லது வக்காலத்து வாங்கவோ அக்கறையில்லை... தமிழீழம் என்கிற உரிமை களவுபோகிற காலத்தில், பொழுதுபோக்கு வியாபாரிகளின் உரிமைக்காக கவலைப்படும் வசதியும் இப்போது இல்லை. கமலகாசனால் முகவரியற்ற இயக்கம் என்றழைக்கப்பட்ட எங்களுக்கு, தமிழனின் முகவரியை அழிக்கும் ஐ.நாவினை எதிர்த்து நின்று களமாடவேண்டிய கால கட்டாயம் இருக்கிறது.. பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும், தலைவர்களும் பிப்ரவரி 12இல் நடக்கும் முற்றுகைப் போராட்டத்திற்கு கைகோர்க்க ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

 

 

கர்நாடகத்தில் இருக்கும் தமிழனும், மும்பைத் தமிழனும் இனைவதாக அறிவித்திருக்கிறார்கள். மலேசியத் தமிழனும், அமெரிக்கத் தமிழனும் , பிரான்சு தமிழனும் கைகோர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளான். இன்னும் 60 நாடுகளில், 30 நகரங்களில் தமிழகத்திற்கு வெளியே தமிழன் உள்ளான், அவனையும் இணைக்கும் வேலையை செய்யவேண்டும். கைகோர்க்க யார் வருகிறீர்களோ அவர்களுக்கு எங்களது வணக்கமும் நன்றியும். மற்றபடி கமலகாசனுக்கு நேரம் செலவளிக்குமளவிற்கான வசதி எமக்கில்லை.. மன்னிக்கவும்.

 

- Thirumurugan Gandhi

  • தொடங்கியவர்

ஐ.நா முற்றுகைக்கான விளக்கக் கூட்டம்- காஞ்சிபுரம்

 

வருகிற பிப்ரவரி 12ம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா முற்றுகைக்கான விளக்கக் கூட்டம் காஞ்சிபுரத்தில் 24-1-13 அன்று நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழகம், காஞ்சி மக்கள் மன்றம், மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர்கள் டேவிட் பெரியார், ரவிபாரதி, காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் சமர்பா குமரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தீனன், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கத்தின் காஞ்சி அமுதன், திராவிடர் கழகத்தின் பரிதி, பகுஜன் சமாஜ் கட்சியின் இளங்கவி, தமிழ் உணர்வாளர் உலக ஒளி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஐ.நா அதிகாரிகள் செய்த குற்றங்கள் குறித்தும், ஐ.நாவை முற்றுகையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் மே17 இயக்கத்தின் திருமுருகன் பேசினார்.

 

14849_594621033888693_127507166_n.jpg



66435_594621057222024_1823355962_n.jpg



558385_594621400555323_2047177980_n.jpg

  • தொடங்கியவர்

ஐ. நா அலுவலக முற்றுகை முருகதாசன் நினைவு நாளில் நடக்கிறது. அனைத்து இயக்க-கட்சி தோழர்களும், தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஐ. நாவின் அதிகாரிகளின் முகம் அம்பலப்பட்டு நிற்கிறது. அவர்களின் இலங்கை தொடர்புகள், தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்தது என பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதை அம்பலப்படுத்தவும், ஐ. நாவினுடாக இந்தியா மற்றும் இணை நாடுகள் செய்த இனப்படுகொலை நடப்புகளை வெளிக்கொணற இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.. இந்த சின்னத்தினை நீங்களும் உங்களது புகைப்படமாக சிலகாலம் மாற்றி போராட்ட பிரச்சாரத்தில் பங்கெடுங்கள்...



537362_10200453411121355_1097272584_n.jp

  • தொடங்கியவர்

இந்த வார நிகழ்வுகள்

 

 

சென்னை: 02-02-13 சனிக்கிழமை காலை 9.30 இரு சக்கரவாகன பிரச்சாரம் கலந்து கொள்பவர்கள் தொடர்பு கொள்க 9445752070


திருப்பூர் : 02-02-13 சனிக்கிழமை நாளை காலை ஐ. நாவிற்கு எதிரான முற்றுகைப் போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம். மே17 இயக்கத்தின் சார்பில் திருமுருகன் பங்கேற்பு , அனைத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. தோழர்களும் கலந்து கொள்ளவும். ஒருங்கினைப்பு: இன அழிப்பு எதிரான இசுலாமிய இளைஞர்கள் . தொடர்பு கொள்க - 9488159091

 

கோவை : 02-02-13 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகே, ஐ. நாவின் துரோகம், தமிழர்களின் கடமை குறித்து கருத்தரங்கம் . தோழர். கு. ராமகிருட்டிணன், தோழர் உமர் கயாம், தோழர். திருமுருகன்


சென்னை : 03-02-2013 ஞாயிறு : தமிழீழ இனப்படுகொலை குறித்தான கருந்தரங்கம் , லயோலா கல்லூரி, காலை முதல் மாலை வரை. ஒருன்கிணைப்பு தோழர். கண.குறிஞ்சி, பொன் சந்திரன்.

 

ஐ. நா தொடர்பான துரோகம் குறித்தான அவணம் கீற்று.காம் இணையத்தில் கட்டுரையாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ளது. படித்து தோழர்களுக்கு பரப்பவும்.


பிப்ரவரி12ல் ஐ. நா அலுவலகத்தினை சென்னையில் முற்றுகை இடத் தயாராவோம். செய்திகளை பரப்புக.

 

  • தொடங்கியவர்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

போர்க்குணத்தோடு நேற்றைய ஐ. நா முற்றுகைப் போராட்டத்தில் உலகெங்கும் கலந்துகொண்டு ஐ. நா அதிகாரிகளால் விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட இயலாதவாறு வர்லாற்றினை மாற்றிய அனைத்து தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..

 

தமிழர்கள் இணைந்து வெல்வோம் தமிழீழத்தினை... அமெரிக்காவினால் கொண்டு வரப்பட இருக்கும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிற உள்ளடக்கத்தினை கொண்டு முன்மொழியப்பட இருக்கும் ஐ. நா தீர்மானத்தினை இந்தியா ஆதரித்தாலும் அல்லது எதிர்த்தாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை... நல்லிணக்கம் என்கிற அயோக்கியத்தனத்தினை முன்வைக்கும் எதையும் நாம் ஏற்க மறுத்து போராட வேண்டும். அப்பொழுது தான் நமது போராட்டம் முழுமையடையும். நமது உடனடி போராட்டம் “ தமிழீழ கோரிக்கையை, நாம் நம்மை அறியாமல் கைவிட வைக்கும் சூழ்ச்சியை உடைப்பது” தான்.... மேலும் அதிக விவரங்களை விரைவில் வெளியிடுகிறோம்...

 

மே 17 இயக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.