Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் - சொல்கிறார் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Karunanidhi_20111012-150.jpg

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுவதாக கலைஞர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  

பிரபாகரனை கைது செய்யச் சொன்னார்

கடந்த எட்டாம் திகதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும் முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம் தனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும் கூறியிருக்கிறார்.

 

ஆனால், இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான் 16-04-2002 அன்று அ.தி.மு.க. ஆட்சியிலே இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு;

 

இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச் சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.

 

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் , அதன் தலைவர் பிரபாகரனும் இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்பட மாட்டாது.

 

பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு ஸ்ரீ லங்கா அரசோடு சட்டப்படியாகவும் தூதரக நடைமுறைப்படியும் அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால் இலங்கை அரசின் அனுமதியோடு இந்திய இராணுவத்தை ஸ்ரீ லங்கா அரசின் உதவிக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழகச் சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜெயலலிதா தான்.

 

போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் என்றார்

அது மாத்திரமல்ல; 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்; இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் , ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்றும் குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்துப் போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்; விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.

 

தமிழ்ச்செல்வனுக்கு கவிதை எழுதியபோது குற்றம் சாட்டினார்

4.11.2007 இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தவர் தான் ஜெயலலிதா. இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு 8.2.2013 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா ஈழத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, ஈழத் தமிழர்களும் இங்குள்ள தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=75780&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.