Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - நவனீதம்பிள்ளை
13 பெப்ரவரி 2013
 
இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த அறிக்கையின் நகல் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகளை மீளமைத்தல், இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அரசாங்கம் பாரியளவு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைளில் இன்னமும் பாரியளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டம், தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம், சட்டவிரோத கைதுகள் கடத்தல்களுக்கு எதிரான சட்டம், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தண்டனைகளுக்கு எதிரான சட்டம் போன்றனவற்றை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
 
நீதிமன்றம், காவல்துறை திணைக்களம் போன்ற தேசிய நிறுவனங்கள் சுயாதீனப்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் உரிய முறையில் வெளிப்படைதன் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரியுள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சகல தரப்பினரதும் பிரச்சினைகளுக்கு காத்திரமான முறையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குறுதிகளைக் காப்பாற்றத் இலங்கை தவறிவிட்டது ஐ.நா. குற்றச்சாட்டு

 

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதாக கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள 18 பக்க அறிக்கையிலேயே இலங்கை மீது மோசமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் முடிவுறவில்லை என்றும் அது சுதந்திரமானதாகவோ பக்கச்சார்பற்ற வகையிலேயோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


விசாரணைகள் பாரபட்சமற்ற வகையிலும் நம்பிக்கையளிக்கும் வகையிலும் இடம்பெற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு கடந்த செப்ரெம்பரில் பயணம் மேற்கொண்ட நிபுணர்குழு உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


17 உதவிப் பணியாளர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதும் அது நிறைவேற்றப்படவில்லை.

 

போரின் இறுதிக்கட்டத்தில் சட்டத்துக்கு முரணானவகையில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான இராணுவ விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அத்துடன் கடந்த ஆண்டிலும் தொடர்ந்த சட்டத்துக்கு புறம்பான படுகொலைகள் ஆட்கடத்தல்கள் ஆட்கள் கட்டாயமாக காணாமல் போதல்கள் என்பனவற்றுக்கு அவசரமான தண்டனையளிக்கும் பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

 

சுதந்திரமான ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் சிறைக்கைதிகள் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3010

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.